பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டுமிருக்கிற இயேசு.
whom the Father sanctified and sent into the world His son. (John 10:36)
Jn3:17,34; Jn5:37; Jn6:27,38,46; Jn17:15-20; Rom8:3; Gal4:4,5; 1Jn4:9-11; Ps2:6-12; Isa11:1,2; Isa42:1-3; Isa49:1-9; Isa61:1-3.
பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? (யோவான் 10:36)
யோவான் 3:17,34; யோவான் 5:37; யோவான் 6:27,38,46; யோவான் 17:15-20; ரோமர் 8:3; கலாத்தியர் 4:4,5; 1யோவான் 4:9-11; சங்கீதம் 2:6-12; ஏசாயா 11:1,2; ஏசாயா 42:1-3; ஏசாயா 49:1-9; ஏசாயா 61:1-3.
இயேசு யார்:
உலக தோற்றத்துக்கு முன்பே பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டு வேறுபிரிக்கப்பட்டவராய் இருந்த இயேசு கிறிஸ்துவை பிதாவானவர் இவ்வுலகிற்கு அனுப்பினார். தேவனால் அனுப்பப்பட்ட இயேசு பிதாவின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எல்லா நீதியையும் நிறைவேற்றி இவ்வுலகிலும் தம்மை பரிசுத்தவானாய் விளங்க செய்தார். உலகத்தில் பிறப்பிக்கப்பட்ட மனுக்குலம் பாவத்தினால் பரிசுத்தத்தை இழந்தது. இஸ்ராயேல் ஜனங்களும் நியாயபிரமாணத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய் இருந்தும் மனதளவில் இயேசுவை விசுவாசிக்காமல் பரிசுத்தத்தை இழந்தவர்களாக இருந்தனர். எனவே இந்த பரிசுத்தமாக்கப்பட்ட இயேசுவினால் மாத்திரமே இவ்வுக மக்கள் பரிசுத்தமாக்கப்பட இயலும். பரிசுத்தம் பன்ணப்பட்டால் மாத்திரமே பரிசுத்த தேவனின் நன்மைகளுக்கு சொந்தமாவோம்.
தேவனுடைய கிரியைகள் வெளிப்படுவதற்கும், தேவனுடைய வழிநடத்துதல் உண்டாவதற்கும் பரிசுத்தம் தேவை.
இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தம் பாவம் நிறைந்த – அசுத்தமாக்கப்பட்ட இவ்வுலகில் தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பாயிருக்கிறது.
பூமி தேவனை அறிகின்ற அறிவினாலும் தேவனுடைய காருண்யம், மகிமையினாலும் நிறைந்திருப்பதற்கு பரிசுத்தம் தேவை.
இயேசுவை கொண்டிருக்கின்ற நமக்குள் இந்த பரிசுத்தம் நிறைந்திருப்பதினால் நாம் இவ்வுலகை ஜெயிக்கிறவர்களாயிருக்க முடியும். நம்முடைய வெற்றியின் முனைப்பில் தேவனுடைய ஆவியானவர் இணைந்து கிரியை செய்வார். இதனால் உலகை, சாத்தானை, பாவத்தை, வியாதிகளை, பலவீனங்களை ஜெயிக்க இயலும்.
கிறிஸ்து பரிசுத்த தேவகுமாரனாக இருப்பதினால் நாமும் பரிசுத்தமுள்ள பிள்ளைகளாக வாழ்வோம்.
கர்த்தாவே உம் மகனின் தூய்மையினால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு தூய்மையற்ற இவ்வுலகில் விளக்குகளாக வாழ எங்களுக்கு உதவிடும்.