ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
Neither shall anyone snatch them out of My hand. (John 10:28)
Jn17:11,12; Lk22:31,32; Lk23:46; Act7:59;
2Ti1:12; Heb7:25; Ro8:31-39; Deu33:3; Ps31:5; Isa54:11-17.
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:28)
யோவான் 17:11,12; லூக்கா 22:31,32; லூக்கா 23:46; அப்போஸ்தலர் 7:59; 2தீமோத்தேயு 1:12; எபிரெயர் 7:25; ரோமர் 8:31-39; உபாகமம் 33:3; சங்கீதம் 31:5; உபாகமம் 33:3; ஏசாயா 54:11-17.
பெரும் கை – பெரிய கரம் – ஓங்கிய புயம்
இயேசுகிறிஸ்து பெரிய கரங்களை உடையவராய் இருக்கின்றார். தேவனுடைய வலதுகரம் பராக்கிரமம் செய்யும் என்பது விவிலிய போதனை. அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் கரமும் பலத்த கரமாயிருக்கிறது. காலங்கள் அவரின் கரத்தில் இருப்பது உண்மையாயின் அவரை விசுவாசித்து அவர் நாமத்தில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டவர்கள் அவரின் கரங்களுக்குள் இருக்கின்றார்கள். நான் உங்களை என் உள்ளங்ககைகளில் வரைந்திருக்கிறேன் என்பது இதன் பொருளாகும். நாம் அவரின் கைக்குள்ளான ஆடுகள். அவரது பலத்த கரங்களுக்குள் அடங்கியிருப்போர் பாக்கியவான்கள்.
உலகமோ, மாம்சமோ, பாவமோ, மரணமோ, சாத்தானோ இயேசுவின் கரங்களுக்குட்பட்ட எவரையும் அவரிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாது. மரித்த மோசேயின் சரீரத்தையே சாத்தானால் பறித்துகொள்ள இயலவில்லையென்றால், அடிக்கடி தேவனை கோபமடைய செய்த இஸ்ராயேலரையே உலகத்தால் அபகரிக்கமுடியவில்லையென்றால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் திருமுழுக்கு பெற்று பாவமன்னிப்பின் நிச்சயம் பெற்று தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டு அவருடைய சரீரமாகிய சபைக்குட்பட்ட ஒருவரையும் ஒருவரும் பறித்துக்கொள்ள இயலாது. சபையை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளாது என்பது அவர் நமக்கு தந்துள்ள வாக்குதத்தம். நாம் அவரின் உயரிய பாதுகாப்பாகிய சபைக்குள் இருக்கின்றோம்.
இயேசுகிறிஸ்துவால் தெரிந்துகொள்ளப்பட்ட சீஷர்களில் யூதாஸ் மட்டுமே பிசாசனவனால் பறித்துக்கொள்ளப்பட்ட அணைந்த கொள்ளிக்கட்டை. அவனை அவன் பிடுங்கிக்கொண்டு சபையை ஒன்றும் செய்ய இயலாது. சபைக்குள் இருக்கின்றவர்கள் எரிகிற கொள்ளியாயிருக்கின்றார்கள். சபைக்குள் எரிந்துகொண்டிருக்கும் கொள்ளியானது திரும்பி உலகை நோக்குமானால் உலகமே எரிக்கப்பட்டு அழிந்துபோகும்.
வியாதியோ, கடன்களோ, துன்பமோ, பிரிவுகளோ எதுவும் உன்னை கிறிஸ்துவிடமிருந்து பறித்துக்கொள்ள இயலாது.
பயமில்லாதிருப்பாய். விரைந்து செல்வாய். அவர் இராஜ்ஜியத்தின் பிரஜையாகிய நீ அவரை கொண்டு முன்னேறு.
கர்த்தாவே உம் குமாரன் மூலம் நீர் எங்களுக்கு தந்துள்ள உயரிய பாதுகாப்புக்காக உமக்கு நன்றி. எங்கள் திருப்பணியையும், சொந்த காரியங்களையும் உற்சாகத்தோடு செய்ய பெலன் தாரும்.நாங்கள் உம்மில் நிலைத்து நிற்க உதவி செய்யும்.