நானே அவைகள் பரிபூரணப்பட வந்தேன்
I have come that they may have it more abundantly. (John 10:10)
Deu30:9; Ps16:11; Pr28:20; Pr30:9; Jer33:6; Mt13:12; Mt25:29; Jn1:16; Ro5:13-21; 2Cor8:2; Eph3:19; Phi4:12,18; Col1:19; 1Tim1:14; Heb6:17; Heb7:25; 2Pet1:11
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10)
உபாகமம் 30:9; சங்கீதம் 16:11; நீதிமொழிகள் 28:20; நீதிமொழிகள் 30:9; எரேமியா 33:6; மத்தேயு 13:12; மத்தேயு 25:29; யோவான் 1:16; ரோமர் 5:13-21; 2கொரிந்தியர் 8:2; எபேசியர் 3:19; பிலிப்பியர் 4:12,18; கொலோசெயர் 1:19; 1தீமோத்தேயு 1:14; எபிரெயர் 6:17; எபிரெயர் 7:25; 2பேதுரு 1:11
பரிபூரணத்துவம்:
பரிபூரணம் என்ற சொல்லுக்கு மூல மொழியில் இருவிதமான பொருள் தரப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக எல்லாவற்றிற்கும் மேலாக என்றும், உயர்நிலை தகுதியோ, அசாதாரணமான நிலையோ, உச்ச நிலையோ என்றும் குறிக்கலாம். சாதாரணாக கூறும்போது தாராளமாக, ஏராளமாக, நிறைவாக, முழுமையாக என்று கூறலாம்.
இயேசுகிறிஸ்து ஆடுகளுக்கு ஜீவன் கொடுத்து இரட்சிக்கிறவர் மட்டுமல்ல, சபைகள் சகலவற்றிலும் பரிபூரணமாய் நிரம்பியிருக்கவும் செய்கின்றார். பவுல் பிலிப்பியர் 4:18 ல் எல்லாம் எனக்கு கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது என்று கூறுகின்றார்.
இயேசுகிறிஸ்து எல்லாம் துறந்தவராக அடிமையை போன்று பூமிக்கு வந்து நம்மில் ஒருவரைப்போல் வாழ்ந்திருந்தாலும் நம்மை பரிபூரணமடைய செய்வதற்காகவே அவர் அவ்விதம் ஆனார் என்று விவிலியம் கூறுகின்றது.
நாம் போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சகலவற்றிலும் பரிபூரணத்தை கட்டளையிட அவர் வல்லவராயிருக்கிறார். ஆவிக்குரிய காரியங்களிலும், உலக பிரகாரமான காரியங்களிலும் நாம் பரிபூரணம் அடைய வேண்டுமென்று விரும்புகின்றார். விரும்புவது மட்டுமல்ல பரிபூரணமடையச் செய்கிறவராகவும் இருக்கிறார்.
நாம் பரிபூரணமடைவதினால் அவர் மகிமைபடவேண்டும் என்று விரும்புகின்றார். நமது பரிபூரணத்தினால் அவருக்கு மகிமையும் கனமும், புகழ்ச்சியும் உண்டாகுமெனில் அவர் நம்மை சகல பரிபூரணத்துக்குள்ளும் நடத்தாமல் இருப்பதில்லை.
நாம் பரிபூரணப்படுவதினால் பெருமையும் கர்வமும், ஆணவமும், கடின மனோபாவமும் உண்டாகி தேவனும் அவருடைய படைப்புகளும் பாதிக்கப்படுவதை அவர் விரும்புவதில்லை.
நாம் பரிபூரணமடைவதினால் சந்தோஷபட்டு களிகூர்ந்து எளியவர்க்கு கொடுத்தும், துரத்துண்டவர்களை சேர்த்துக்கொண்டும், இல்லாதோருக்கு பகிர்ந்தளித்தும் தேவனுடைய பரிபூரணத்தை பரிமாறிக்கொள்வதை விரும்புகின்றார்.
அவருடைய பரிபூரணம் நம்மில் வாசமாயிருக்கவும், நமது பரிபூரணத்தினால் பலர் மகிழ்ந்திருக்கவும் நம்மை அதற்காய் ஒப்படைப்போம்.
உன் குறைவையெல்லாம் மாற்றி உனக்கு பரிபூரணமான நிறைவை கட்டளையிடுவதே அவர் சித்தம்.
கர்த்தாவே உமது பரிபூரணத்தினால் உமது மகனை நிரப்பி எங்களிடம் அனுப்பி எங்களை இரட்சித்து அவரது பரிபூரணம் கொண்டு எங்களை நிரப்புவதற்காய் ஸ்தோத்திரம்.