பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
For there are three that bear witness in heaven: the Father, the Word, and the Holy Spirit; and these three are one. (1John 5:7)
1John 5:10,11; John 8:13,14; Due 6:4; Matthew 28:19; John 10:30.
(பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். (1 யோவான் 5:7)
1யோவான் 5:10,11; யோவான் 8:13,14; உபாகமம் 6:4; மத்தேயு 28:19; யோவான் 10:30.
மூவரின் சாட்சி.
இன்றைய தியானத்தை இரு பகுதிகளாக தியானிப்போமாக.
மூவராகிய பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி ஆகிய மூவரும் ஒரே காரியத்தை ஒன்றுபோல் பரலோகத்தில் சாட்சியிடுகிறார்கள். பிதாவைக் குறித்து வார்த்தையும், பரிசுத்த ஆவியும் பிதா சாட்சியிடுகிறதுபோலவே சாட்சியிடுகிறார்கள். வார்த்தை குறித்து வார்த்தையும், பிதாவும், பரிசுத்த ஆவியும் ஒன்றுபோல சாட்சியிடுகின்றனர். பரிசுத்த ஆவி குறித்து பரிசுத்த ஆவியும், வார்த்தையும், பிதாவும் ஒன்றுபோல சாட்சியிடுகின்றனர். மாறுபட்ட சாட்சியங்களோ, முரண்பட்ட சாட்சியங்களோ இல்லை. பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி குறித்து விவிலியத்தில் பதியபட்டுள்ளவைகள் யாவும் தவறற்றவைகள் ஆகும். ஒரு மனிதனில் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி குறித்த மாறுபட்ட , முரண்பட்ட கருத்துக்கள் இடங்கொள்ளவியலாது. அப்படி முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுமானால் அந்நபர் சந்தேகத்துக்கிடமானவரே. இவ்வுலகத்தில் நாம் இந்த மூவரையும் குறித்து பிரசங்கிக்கும்போது விவிலியத்தில் பதியப்பட்டுள்ள வார்த்தைகளுக்கும், இழைஒயோடிக்கொண்டிருக்கும் உயிரோட்டமான செய்திக்கும் மாறுபட்ட முறையில் பிரசங்கிக்கவும் கூடாது, எழுதவும் கூடாது. பரலோகத்தின் அடிப்படையில்தான் நாம் பேச வேண்டும், எழுதவேண்டும். எச்சரிக்கை.
மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பது எண்கணித அடிப்படையில் சிந்திப்பதற்காக அல்ல, மனுகுலத்தின் மீட்பின் அடிப்படையில் சிந்திப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளது. பிதாவையும், வார்த்தையையும், ஆவியையும் நாம் ஒன்றாக்கவும் முயற்சிக்கவும் வேண்டாம், மூன்றாக்கவும் முயற்சிக்கவும் வேண்டாம். அது நமக்கு தேவையில்லாத விஷயம். தேவத்துவத்தின் பரிபூரணமாகிய மீட்பு இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு தரப்பட்டுள்ளது. அதையே வாஞ்சிப்போமாக. திரித்துவம் உண்டா இல்லையா என்று விவாதித்துக் கொண்டே கிறிஸ்தவ பெரியோர்கள் இரு தவறை செய்தார்கள். ஒன்று பிரிவினையை வளர்த்தார்கள். இன்னொன்று மீட்பை மட்டுப்படுத்தினார்கள். இன்றும் இதே தவறை தொடர வேண்டாம். எழுதப்பட்டுள்ளவைகளுக்கு மிஞ்சி சிந்திக்க வேண்டாம். பரலோகத்திலே மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். ஒரே சாட்சியுடையவர்களாயிருக்கிறார்கள். அதுவே இயேசுவின் மீட்பைக் குறித்த சாட்சி. இதற்கு மிஞ்சி நீங்கள் அறிய வேண்டுமானால் உடனே பரலோகத்திற்கு பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள். அங்கு சென்றால் நீங்கள் அவர்கள் எப்படியுள்ளார்கள் என்று அறிந்துக்கொள்ளலாம்.
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. கொலோசேயர் 2:3-9.