இயேசுவின்

இயேசுவின் தாயாகிய மரியாளைப் பார்க்கிலும் நாம் பாக்கியவான்களா?

இயேசுவின் தாயாகிய மரியாளைப் பார்க்கிலும் நாம் அதிக பாக்கியவான்களாக இருக்க முடியும்.

நாம் எப்படி மரியாளைப் பார்க்கிலும் அதிக பாக்கியவான்களாக இருக்க முடியுமா எப்படி?

மரியாள் ஸ்திரீகளுக்குள்ளே ஏன் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறாள்?
Luk 1:28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
Luk 1:29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
Luk 1:30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
Luk 1:31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து அவளுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்த படியினால் ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருந்தாள்.
Luk 1:42 உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
Luk 1:43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.

ஆனால் அவளைப்பார்க்கிலும் நாம் பாக்கியவான்களாக இருக்க முடியும் என்று கிறிஸ்து நமக்கு வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்

அது எப்படி முடியும்?

இயேசு கிறிஸ்து ஜனக்கூட்டத்தில் தேவனுடைய வார்த்தைகளை போதித்துக் கொண்டு இருந்த போது ஒரு ஸ்திரீ அவரைப் பார்த்து என்ன சொன்னாள்?
Luk 11:27 அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.

இயேசுவின் தாயாகிய மரியாள் பாக்கியமுள்ளவள் என்று சத்தமிட்டு சொன்னாள்

உடனே இயேசு கிறிஸ்து அதற்கு என்ன பதில் சொன்னார்?
Luk 11:28 அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் காத்துக் கொள்ளுகிறவர்கள் அதிக பாக்கியவான்கள் என்று பதில் சொன்னார்.

இயேசுவைப் பெற்றெடுத்த மரியாள் பாக்கியவதி என்றால் அதைக்காட்டிலும் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு அதைக் காத்துக் கொள்ளுகிறவர்கள் அதிக பாக்கியவான்கள் என்கிறார்.

அந்த தேவனுடைய வார்த்தைகளை காத்துக் கொண்டால் மட்டும் போதுமா?
Luk 8:15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

அதை காத்துக் கொண்டு பொறுமையுடனே பலன் கொடுக்க வேண்டும். அப்போது தான் நாம் அதிக பாக்கியவான்களாக இருக்க முடியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME