இந்த தொழுவத்திலுள்ளவைகள் அல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு.
And other sheep I have which are not of this fold; them also I must bring. (John10:16a)
Jn11:52; Act18:10; Ro9:23,24; Ro15:9-13; Eph2:14-16; 1Pet2:10; Ps22:27-31; Ps72:17; Ps86:9; Ps98:2,3.
இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோவான் 10:16)
யோவான் 11:52; அப்போஸ்தலர் 18:10; ரோமர் 9:23,24; ரோமர் 15:9-13; எபேசியர் 2:14-16; 1பேதுரு 2:10; சங்கீதம் 22:27-31; சங்கீதம் 72:17; சங்கீதம் 86:9; சங்கீதம் 98:2,3.
வேறே ஆடுகள்:
இவ்வசனம் பல தேவனுடைய மனிதர்களால் தப்பாக வியாக்கியானபடுத்தப் படுகிறது. இஸ்ராயேலரையும் புறஜாதியாரில் இரட்சிக்கப்படுகிறவர்களையும் குறித்து கர்த்தர் விவரிக்கின்றார். இங்கே நாம் சபையயும் இரட்சிக்கப்படாத புறஜாதியாரையும் குறித்து நாம் சிந்திப்போம். இவ்வசனம் 5 காரியங்களை நமக்கு கற்பிக்கின்றது.
- வேறே தொழுவம் உள்ளது.
- வேறே ஆடுகள் உள்ளன.
- வேற்றுதொழுவ ஆடுகள் தன் தொழுவத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
- செவிகொடுக்காத – இணங்காத வேறு ஆடுகள் செவிகொடுத்து இணங்கும், கீழ்படியும்.
- முடிவில் ஒரே மந்தை, ஒரே மேய்ப்பனே இருக்கும்.
இரட்சிக்கப்பட்ட, கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட, தொழுவமாகிய சபைக்கு உட்பட்டவர்கள் ஆடுகள் எனப்படுகிறார்கள். எந்த சபை பிரிவாக இருந்தாலும் அவை ஒரே தொழுவத்துக்கு உட்பட்ட ஆடுகளே.
இரட்சிக்கப்படாத, இயேசுவை ஏற்றுக்கொள்ளாத, தொழுவமாகிய சபைக்கு உட்படாதவர்கள் காட்டாடுகள், வேறு ஆடுகள் எனப்படுகிறார்கள். இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனுடைய சபையாகிய கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் இணைகின்றார்கள். இதனால் இவர்கள் கிறிஸ்துவின் குரலை கேட்டு நடக்கிறவர்களாக இருக்கின்றார்கள். கள்ள மேய்ப்பர்களுக்கும், சாத்தானுக்கும் செவிகொடாமல் கிறிஸ்துவுக்கு கீழ்படிந்து ஒரே தொழுவத்துக்குள் ஐக்கியமாகின்றார்கள். - இரட்சிக்கபடாத ஜனமே, கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு உட்பட விரும்பாத ஜனமே, கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காய் கட்டப்பட்டுள்ள சபைகளை பாழ்படுத்தும் ஜனமே நீங்கள் மனந்திரும்பி உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் சரீரத்தோடு இணந்து கொள்ள அழைக்கிறார். பாவங்களையும் அக்கிரமங்களையும், பொல்லாப்புகளையும், முரட்டாட்டத்தையும், துன்மார்க்கத்தையும் விட்டு ஓயுங்கள். கர்த்தரின் தொழுவ ஆடுகளாக மாறுங்கள். அவரின் பந்தியில் இணைந்துக் கொள்ளுங்கள். கிறிஸ்துவின் மந்தையாய் மாறுங்கள்.
- ஒருவராலும் அவிக்கமுடியாத அக்கினி தேசத்து குடிகளின்மேல் பற்றியெரிய போகிறது. இது பூமி நெருப்பல்ல, தகிக்கப்போகும் மகிமையின் அக்கினி. இது பாவத்தையும், அக்கிரமத்தையும், துன்மார்க்கத்தையும் கொழுத்திப்போடும். அப்பொழுது உமக்கும் மெய்யான தொழுவம் இல்லாது போகும்.
தன் சபையை மெய்யான சபையாகவும், பிற சபைகளை வேற்று தொழுவமாகவும் பாவித்து வேற்றுதொழுவ ஆடுகளை தனதாக்கிகொள்ளும் மேய்ப்பர்களே உங்களுக்குரிய தண்டனை காத்திருக்கிறது. உங்கள் கையில் உள்ள தொழுவமும் ஆடுகளும் உம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு போகும் நாள் வருகிறது. - புறஜாதி மக்களை கிறிஸ்துவின் தொழுவத்துக்குள் கொண்டுவரும் உண்மை ஊழியனே உனக்குரிய வெகுமதி உனக்கு வந்துகொண்டிருக்கிறது. விரைவாக பணி செய்.. நிறைவாக பலன் பெறு…
- கர்த்தாவே உம் மகனின் சரீரமாகிய சபையை கூறுபோட்டு அதை பகைத்து அதில் உள்ள உம் ஆடுகளை தன் உணவுக்காகவும், மேன்மைக்காகவும் சேர்க்கும் ஊழியத்தை நாங்கள் செய்யாதிருக்க பெலன் தாரும்.