தியத்தீரா சபை:- கள்ள உபதேசங்களை ஏற்றுக் கொண்ட சபை
தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன?
ஏழு சபைகளில் இருந்து தேவனுடைய சத்தியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம். ஏற்கனவே மூன்று சபைகளைக் குறித்து பார்த்து இருக்கிறோம்.
இப்போது தியத்தீரா சபைக்கு இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம்.
இயேசு கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?
வெளி 2:18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
- அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது என்று இப்படி தன்னைக் குறித்து சொல்லும் போது அந்த காட்சிஅந்த சபையாருக்கு நிச்சயம் பயத்தை கொடுத்து இருக்கும்.
அக்கினி ஜீவலையும் பிரகாசமுள்ள வெண்கலத்தையும் நாம் பார்க்கும் போது நம்முடைய கண்களில் நிச்சயம் கண்ணீர் வந்துவிடும்.
வெளி 1:15 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; ,,,,
கிறிஸ்து இந்த சபையின் மீது கோபம் உடையவராக இருந்தார்
தியத்தீரா சபையின் விசுவாசிகள் கிறிஸ்துவுக்காகவும் அவருடைய சத்தியத்திற்காகவும் என்ன செய்து இருக்கிறார்கள்?
வெளி 2:19 உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
தீயத்தீரா சபை கிறிஸ்துவுக்காக என்ன செய்தார்கள்?
- தேவனுடைய கிரியைகளை செய்தார்கள்.
- அவர்களிடத்தில் அன்பு இருந்தது.
- தேவனுக்கேற்ற ஊழியம் இருந்தது.
- தேவனுக்கேற்ற விசுவாசம் இருந்தது.
- பொறுமையிலே வளர்ந்து இருந்தார்கள்.
- முன்பு செய்து கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாய் இருந்தது.
நம்மிடத்தில் இந்த கிரியைகள் இருக்கிறதா?
ஆனாலும் இந்த சபையார் தேவனுக்கு முன்பாக குறைவுள்ளவர்களாக இருந்தார்கள்.
வெளி 2:20 ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
- அவர்கள் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிக்கவும் செய்தார்கள்.
- தீயத்திரா சபையார் கிறிஸ்துவை விட்டு யேசபேலை பின்பற்றினார்கள்.
- தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்வதற்கு அவளுக்கு இடங்கொடுத்தார்கள்
அவள் மனந்திரும்பும்படியாய் கிறிஸ்து அவளுக்கு தவணை கொடுத்தார். ஆனாலும் அவள் மனந்திரும்பவில்லை
வெளி 2:21 அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
தேவனிடத்தில் மனந்திரும்பாத யேசபேலை கட்டில் கிடையாக்குவேன் என்றும் அவளுடைய பிள்ளைகளை மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி கொல்லாவே கொல்லுவேன் என்று அந்த சபையை நியாயந்தீர்த்தார்.
வெளி 2:22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
வெளி 2:23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
கிறிஸ்து அவர்களுக்கு எதற்கு இந்த தண்டனை கொடுக்க வேண்டும்?
வெளி 2:23 …. அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
- கிறிஸ்துவே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லா சபைகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
- கிறிஸ்து அப்படி அந்த சபைக்கு தண்டனையை கொடுக்கும் போது மற்றசபைகளும் உணர்ந்து மனந்திரும்ப வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்.
இன்றைக்கும் கிறிஸ்து மாறாதவராக தான் இருக்கிறார். இன்றைக்கு துணிகரமாய் பாவம் செய்கிறவர்களை மன்னிப்பாரா?
எபிரேயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
எபிரேயர் 10:27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
தியத்தீரா சபையிலே சில உண்மையுள்ள விசுவாசிகள் இருந்தார்கள்.
வெளி 2:24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
அந்த சபையில் சில விசுவாசிகள் எப்படி உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள்?
1) யேசபேலின் உபதேசங்களை பற்றிக் கொள்ளவில்லை.
2) சாத்தானுடைய ஆழங்களை அவர்கள் அறிந்து கொள்ளவும் இல்லை.
இதை அவர்கள் எப்போது வரை தேவனுடைய சத்தியத்தில் நிலைத்து இருக்க வேண்டும்?
வெளி 2:25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
- கிறிஸ்து வரும் வரை அவர்கள் அதைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
ஜெயங்கொண்டு இயேசு கிறிஸ்துவின் கிரியைகளை முடிவுபரியந்தம் கைக்கொள்ளுகிறவர்களுக்கு என்ன கிடைக்கும்?
வெளி 2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
வெளி 2:27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
வெளி 2:28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
இந்த சத்தியம் தியத்தீரா சபைக்கு மாத்திரம் தானா?
வெளி 2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
காதுள்ள எல்லாருக்கும் இந்தசத்தியங்கள் ஆவியானவர் மூலமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாடம்: மனந்திரும்பாத போது அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். மனந்திரும்பி தேவனுக்கு ஏற்ற கிரியைசெய்து ஜெயங்கொள்ளும் போது அதற்கான பலனும் கிடைக்கும்.