ஜீவ புஸ்தகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ஜீவ புஸ்தகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

எல்லாருக்கும் பரலோகம் போக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஏனென்றால் நாம்  அக்கினி கடலுக்கு போவதற்கு விரும்புவதில்லை.

நாம் பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றால் தேவனுடைய ஜீவ புஸ்தகத்தில் நம்முடைய நாமம் இருக்க வேண்டும்.  அப்படியில்லாத பட்சத்தில் நமக்கு நித்திய ஜீவனுக்கான பலனுமில்லை.

ஜீவ புஸ்தகம் என்பது ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறது.

வெளி 21:27 ,,,, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

ஜீவ புஸ்தகத்தில் நீதிமான்களின் பெயர் தான் எழுதப்படுகிறது என்று வேத வாக்கியம் போதிக்கிறது.

சங்கீதம் 69:28 ,, நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.

ஜீவ புஸ்தகத்தில் தேவன்தான் நம்முடைய பேரை எழுதுகிறார் என்று மோசே வெளிப்படுத்தி இருக்கிறார்.

யாத்திராகமம் 32:32 ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

  • ஜீவ புஸ்தகத்தில் மோசேயின் பெயர் இருக்கிறது என்று மேலே சொன்ன வேத வாக்கியம் சொல்லுகிறது.
  • தேவன் ஜீவபுஸ்தகத்தில் நம்முடைய நாமத்தை எழுதுவார் என்றால் அது நமக்கு எவ்வளவு மேன்மையான காரியமாக இருக்கிறது.

தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்கிற போது தேவன் நம்முடைய பெயரை ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுகிறார்.

யாத்திராகமம் 32:33 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

சங்கீதம் 69:28 ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.

பவுலோடு ஊழியம் செய்த சிலருடைய நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் இருப்பதாக பவுல் சாட்சி கொடுக்கிறார்.

பிலிப்பியர் 4:3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.

தேவனுடைய பிள்ளைகள் அல்லாதவர்களுடைய நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் இருப்பது இல்லை.

வெளி 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.

வெளி 17:8 நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

நாம் செய்யக்கூடிய சகல தேவனுக்கேற்ற கிரியைகளும் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுகிறது, அதின் படி தான் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம்.

வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

ஞாபகப் புஸ்தகம் என்று சொல்லக்கூடிய புஸ்தகத்தில் தேவனுடைய பிள்ளைகளுடைய சகல காரியங்களும் எழுதப்படுகிறது.                                        

மல்கியா 3:16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

 தேவன் நம்முடைய நாமத்தை ஜீவ புஸ்கதத்திலிருந்து கிறுக்கிப்போடாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் ஜெயங் கொள்ள வேண்டும்.

வெளி 3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படவில்லை என்றால் நாம் அக்கினிகடலிலே தள்ளப்படும்.

வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் தான்  தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்க முடியும்.

வெளி 21:27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து எந்த வசனங்களில் கூட்டினாலும் குறைந்தாலும் ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

வெளி 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

  • நாம் இரட்சிக்கப்படும் போது நம்முடைய நாமங்கள் ஜீவபுஸ்கத்தில் எழுதப்படுகிறது.
  • நாம் தேவனுடைய பிரமாணங்களுக்கு தொடர்ந்து கீழ்ப்படியும் போது அந்த நாமங்கள் அழிக்கப்படாமல் இருக்கிறது.
  • நாம் தேவனுக்கு விரோதமாய் துணிகரமாய் பாவம் செய்கின்ற போது நம்முடைய நாமங்களை தேவன் கிறுக்கிப்போடுகிறார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME