நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்

நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

The good shepherd gives His life for the sheep. (John 10:11b)

Jn10:17; Mt20:28; Act17:25; 1Jn3:16; Eph5:2;
1Thes5:10; Tit2:14; 1Pet2:24; Gen31:39,40; 1Sam17:34,35; 2Sam24:17; Isa53:6.

நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11)

யோவான் 10:17; மத்தேயு 20:28; அப்போஸ்தலர் 17:25; 1யோவான் 3:16; எபேசியர் 5:2; 1தெசலோனிக்கேயர் 5:10; தீத்து 2:14; 1பேதுரு 2:24; ஆதியாகமம் 31:39,40; 1சாமுவேல் 17:34,35; 2 சாமுவேல் 24:17; ஏசாயா 53:6.

ஜீவன் கொடுக்கும் மேய்ப்பன்:
இயேசுகிறிஸ்து தன்னை நல்ல மேய்ப்பன் என்று சொல்லுவதற்குரிய காரணத்தை இங்கே தருகின்றார். நல்ல மேய்ப்பனாகிய இயேசு தன் ஆடுகளுக்காக தன் ஜீவனை தருகின்றார். யாவருக்காகவும் அவர் மரித்திருந்தாலும் இரட்சிக்கப்படுகிறவர்களை அவர் அறிந்திருக்கிறார். அவர்களுக்காக தன் ஜீவனை கொடுத்தார்.

ஆடுகளை அவர் நேசிப்பதினால் தன் ஜீவனைக் கொடுக்கிறார். இயேசுவின் அன்பு ஜீவன் கொடுக்கும் அன்பு. யோவாான் 15:13 ல் ஒருவன் தன் சிநேகிதனுக்காக ஜீவனை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவனிடத்திலுமில்லை. அப்படிப்பட்ட அன்பினால் தன் ஜீவனை கொடுத்தார். யோவாான் 3:16 ன் படி எல்லைக்குட்படுத்தப்படவியலாத அன்பை கொண்டிருந்து ஜீவனைக் கொடுத்தார். அழிந்துபோகும் மனுகுலத்தின் மீது அன்புகொண்டு அவர்களை மீட்க தன் ஜீவனைக் கொடுத்தார்.

ஆடுகள் தனது சாயலையும், தனது குணங்களையும் உடையவைகளாய் இருப்பதற்காக தன் ஜீவனை தந்தார். ஆதி பாவத்தினால் சிதைக்கப்பட்ட தேவ சாயலும், தேவ குணமும் கிறிஸ்துவின் ஜீவனால் மறுபடியும் கிடைக்கலாயிற்று. அவரைபோல் மாறவேண்டும் என்பதே அவர் விருப்பம்.

ஆடுகள் தன் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தன்னை பின்பற்றி வருவதற்காகவே ஜீவன் கொடுத்தார். தான் ஜீவன் கொடுத்து இன்னொருவரை பின்பற்றிச் செல்வதற்கல்ல, தன்னையே பின்பற்றும்படி ஜீவன் தந்தார். பழைய ஏற்பாட்டு பக்தர்களை பின்பற்றுவதற்காகவோ, அரசியல் தலைவர்களை பின்பற்றுவதற்காகவோ, சமூகதலைவர்களை பின்பற்றுவதற்காகவோ, ஜாதி தலைவர்களை பின்பற்றுவதற்காகவோ அல்ல தன்னையே முழு இருதயத்தோடும் பின்பற்றுவதற்காகவே ஜீவன் கொடுத்தார். நாட்டின் ஆட்சிகளை பிடிப்பதற்காக அல்ல, உலக ராஜ்யங்களை நிறுவுவதற்காக அல்ல தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கவே ஆடுகளுக்காய் ஜீவன் தந்தார்.

ஜீவன் தந்தவருக்கு நாம் காண்பிக்கும் உண்மைத்துவம் எவ்வளவானது?

கர்த்தாவே உம் மகனை எங்களின் வாழ்வுக்காய் தந்து எங்களை வாழ வைப்பதற்காய் ஸ்தோத்திரம். நாங்கள் கிறிஸ்துவின் ஜீவனை உடையவர்களாய் பலருக்கு ஜீவன் கொடுக்கும்படி செயல்பட உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME