பேசுகிறவன்

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான்.

He who speaks from himself seeks his own glory. (John 7:18)

Jn5:41; Jn8:49,50; 1Cor10:31-33; Gal6:12-14; Phil2:3-5; 1The2:6; 1Pet4:11.

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
(யோவான் 7:18) 

யோவான் 5:41; யோவான் 8:49,50; 1கொரிந்தியர் 10:31-33; கலாத்தியர் 6:12-14; பிலிப்பியர் 2:3-5; 1தெசலோனிக்கேயர் 2:6; 1 பேதுரு 4:11.

சுய மகிமை:

தங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாடுவதும், தனக்கு புகழ்சேர்க்கும்படி செயல்படுவதும் சுய மகிமையை தேடுவதாகும். இப்படிபட்டவர்களின் உபதேசங்களை கேளாதிருப்பது நல்லது. ஒரு வேலைக்காரன் எஜமானனைவிடவும் தன்னை மிகைபடுத்தி கொள்வானென்றால் அவன் நம்பதகுந்தவனல்ல.
குருவாகிய இயேசுவுக்கு மிகைபட்டவனாக தன்னை கருதிக்கொள்கிறவன் உண்மையானவனல்ல. பெயர்பிரஸ்தாபம் தேவனுக்குரியது. தமது மகிமையை – மேன்மையை ஒருவருக்கும் அவர் கொடுப்பதில்லை.

இயேசுவின் இரத்தத்தால் மீட்கபட்ட ஒரு விசுவாசி எப்படி தன்னை மிகைபடுத்த இயலும்.
இயேசுவின் வேலைக்காரனாக தெரிந்துகொள்ளபட்டவன் எப்படி தன்னை மிகைபடுத்தவியலும்.
மற்றவர் தன்னை பார்க்க வேண்டும் என்று நடந்துகொள்பவனும், பணி செய்பவனும் சுய மகிமையை தேடுகிறவர்களே.

சுயமகிமையை தேடுகிறவர்களின் உரை தேனைப்போல காணப்படும். ஆனால் அதன் விளைவோ கசப்பானதாகவும், உவர்ப்பானதாகவும் இருக்கும். அப்படிபட்டவர்கள் ஆகாயத்தில் சிலம்பம் அடிப்பவர்களாவர்.

சுயமகிமை தேடுகிறவர்களோடு இணைந்து கொள்ளாதீர்.
அவர்கள் உரைகளை பின்பற்றாதீர். தேவன் அதன்மேல் பிரியமாயிரார்.

கர்த்தாவே, உம் குமாரன் தமக்கு மகிமையை தேடாது பணிசெய்ததுபோல நாங்களும் எங்களுக்கு மகிமை தேடாது பணி செய்ய உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME