சிமிர்னா சபை: உபத்திரவங்களைச் சகித்த சபை
சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்ன?
ஆசியாவிலுள்ள ஏழு சபைகளில் இருந்து சத்தியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம்.
எபேசு சபையிலிருந்து சில சத்தியங்களைக் கற்றுக்கொண்டோம்.
இப்போது சிமிர்னா சபையிலிருந்து சில சத்தியங்களைக் கற்றுக் கொள்ளுவோம்.
இந்த சபையிலே கிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்தினார்?
வெளி 2:8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
- மிகுந்தஉபத்திரவத்திலிருந்த சிமிர்னா சபைக்கு கிறிஸ்துவின் இந்த வார்த்தை மிகப் பெரிய ஆறுதலாக இருந்து இருக்கும்.
- கிறிஸ்துவின் நிமித்தம் உபத்திரவப்பட்டு மரித்தாலும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவைப் போல் பிழைப்போம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கும்.
சிமிர்னா சபையின் கிறிஸ்தவர்கள் என்ன கிரியை செய்து இருக்கிறார்கள்?
வெளி 2:9 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
- கிறிஸ்துவுக்காக கிரியை செய்தார்கள் உபத்திரவப்பட்டார்கள் . தரித்திரப்பட்டார்கள் தூஷிக்கப்பட்டார்கள்.
- கிறிஸ்து அவர்களுடைய ஒவ்வொரு கிரியையும் அறிந்து இருந்திருந்தார்.
- நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு கிரியைகளையும் இப்போதும் அவர் அறிந்து கொண்டு தான் இருக்கிறார்.
சிமிர்னா சபையின் கிறிஸ்தவர்களுக்கு இன்னும் உபத்திரவம் இருக்கிறது என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்.
வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள்.
இயேசு கிறிஸ்து சிமிர்னா சபையின் விசுவாசிகளுக்கு என்ன இருக்கிறது என்கிறார்?
பாடுகள் இருக்கிறது என்கிறார்.
சிமிர்னா சபையின் விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின் கட்டளை என்ன?
எவ்வளவும் பயப்படாதே.
இயேசு கிறிஸ்து அவர்களை யாருடைய கைகளில் ஒப்புக் கொடுக்க போகிறார்?
பிசாசானவனிடத்தில்
பிசாசு அவர்களை என்ன செய்ய போகிறான்?
சோதிக்கப்படும் பொருட்டாக சிலரை காவலில் போடுவான்.
எதுவரைக்கும் அவர்கள் உபத்திரவப்படுத்தப்படுவார்கள்?
மரணபரியந்தம் உபத்திரவப்படுத்துவப்படுவார்கள்
எவ்வளவு நாட்கள் சோதிக்கப்படுவார்கள்?
பத்து நாள் உபத்திரவப்படுத்துவார்கள்.
அவர்கள் அந்த சோதனையில் மரண பரியந்தம் உண்மையாய் இருப்பார்கள் என்ன கிடைக்கும்?
வெளி 2:… ஆகிலும் நீ மரணபரியந்தம்உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
- சகலகட்டுப்பாடும் கிறிஸ்துவின் கரத்தில் தான் இருக்கிறது என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.
கிறிஸ்து உபத்திரவங்களின் மூலமாக தான் பூரணரானார்.
எபிரேயர் 2:10 ,,,,, அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
நாம் உபத்திரவங்களின் மூலமாகதான் நாம் பூரணப்படுத்தப்படுகிறோம்.
யாக்கோபு 1:2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
யாக்கோபு 1:3 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
யாக்கோபு 1:4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
கிறிஸ்துவுக்காக பாடுகளை சகித்து மரணபரியந்தம் உண்மையில்லாத பட்சத்தில் நமக்கு ஜீவகிரீடம் கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்காது.
இந்த சத்தியமானது சிமிர்னா சபையின் விசுவாசிகள் மாத்திரம் தானா?
வெளி 2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; …
- மரணபரியந்தம் உண்மையாய் இருக்கும் போது தான் நாம் ஜெயங் கொள்ளுகிறோம்.
ஜெயம் கொள்ளும் போது நமக்கு கிடைக்கும் பலன் என்ன?
வெளி 2:11 ,,, ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
பாடம்: கிறிஸ்துவின் நிமித்தம் வரக்கூடிய பாடுகளை பொறுமையோடு சகித்து மரணபரியந்தம் உண்மையாய் இருக்கும் போது நமக்கு ஜீவ கிரீடம் கிடைக்கும்.