கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன்.
woman said to Him,I know that Messiah is coming.(John 4:25a)
Jn4:42; jn1:41,42,49; jn7:41; Act8:5; Heb9:11,12; Dan9:24-26.
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். (யோவான் 4:25)
யோவான் 4:42; யோவான் 1:41,42,49; யோவான் 7:41; அப்போஸ்தலர் 8:5; எபிரெயர் 9:11,12; தானியேல் 9:24-26.
கிறிஸ்து – மேசியா:
கிறிஸ்து என்பது கிரேக்க சொல். மேசியா என்பது எபிரேய சொல்.
இரு சொற்களுக்குமுரிய பொருள் ஒன்றே. Anointed One -அபிஷேகம்பண்ணப்பட்ட ஒருவர் என்று பொருளாகும். இதனை பட்டப்பெயர் என்றும் கூறுவதுண்டு.
அபிஷேகம்பண்ணப்பட்டவர்:
அபிஷேகம் என்ற சொல் 129 தடவைகள் வருகின்றது.
இது குறித்து விவிலியம் கூறுவதை கவனிக்கலாம்.
– அபிஷேகதைலம் உண்டு. யாத்திராகமம் 30:25.
– ஆசாரியர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டனர். யாத்திராகமம் 29:21. இதனை ஆசாரியபணி செய்வதற்கான அபிஷேகம் எனலாம். யாத்திராகமம் 30:30; லேவியராகமம் 4:3; லேவியராகமம் 7:35.
– ஆலய பணிமுட்டுகள் அபிஷகத்துக்குட்படுத்தபட்டன. யாத்திராகமம் 35:15. – அபிஷேகம் என்பது கிரீடம். லேவியராகமம் 21:12.
– அபிஷேகம் பிரதிஷ்டையோடு இணந்தது. எண்ணாகமம் 7:10.
– ராஜாக்கள் அபிஷேகம் பண்ணப்பட்டனர். 1 சாமுவேல் 9:16.
– அபிஷகம் செய்யப்பட்டவருக்கு எதிராக எழும்பலாகாது. 2 சாமுவேல் 1:14.
– அபிஷேக்கத்திற்கும், சங்கீதத்திற்கும் தொடர்பு உண்டு. 2 சாமுவேல் 23:1.
– தீர்க்கதரிசிகள் அபிஷேகம் செய்யப்பட்டனர். 1 இராஜாக்கள் 9:16.
– அபிஷேகத்தினால் நுகம் முறிக்கப்படும். ஏசாயா 10:27.
– நற்செய்தியை அறிவிக்க அபிஷேகம். ஏசாயா 61:1; லூக்கா 4:18.
– அபிஷேகம் போதிக்கும். 1 யோவான் 2:20,27.
– தேவன் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கிறார். 2கொரிந்தியர் 1:21.
6 விதமான அபிஷேகம்.
– எண்ணெயால் அபிஷேகம். சங்கீதம் 23:5.
– தைலத்தினால் அபிஷேகம். சங்கீதம் 89:20.
– ஆனந்த தைலத்தினால் அபிஷேகம். சங்கீதம் 45:7; எபிரெயர் 1:9.
– புது எண்ணெயால் அபிஷேகம். சங்கீதம் 92:10.
– பரிசுத்த ஆவி, வல்லமையினால் அபிஷேகம். அப்போஸ்தலர் 10:38.
– பரிசுத்தரால் அபிஷேகம் 1யோவான் 2:20.
இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம்.
– இயேசு என்றப்பெயர் அவரின் பிறப்பின்போது கொடுக்கப்பட்டது.
– மேசியா என்றப்பெயர் அவர் பிறக்குமுன்பதாகவே கொடுக்கப்பட்டது.
– இயேசு கிறிஸ்து என்றப்பெயர் அவர் பிரசங்கிக்கபடும்போது அறிவிக்கப்பட்டது. இப்படியிருக்க, இயேசுவை, மேசியாவை அறிய, புரிய, காண, அனுபவிக்கவிவிலியத்திலே நுழையுங்கள்.
பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவரும் இயேசுவை அறியமுடியாது, அறிக்கை செய்யவும் முடியாது. விவிலியத்தை படித்து இயேசுவை நம்பாத ஒருவர், வேறு வேதத்தையோ, குர்ரானையோ படித்து இயேசுவை நம்புவதாக கூறுவது ஏற்றுக்கொள்ளபடதக்கதல்ல. அதனை தேவன் நிராகரிக்கின்றார்.
கர்த்தாவே, மேசியாவாகிய கிறிஸ்துவை எங்களின் இரட்சகராகவும், போதகராகவும் தந்து, நாங்களும் அதே அபிஷேகத்தை பரிசுத்த ஆவியினால் பெற்று அனேகருக்கு இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்க உதவி செய்யும்.