கிறிஸ்துவின் சரீரத்தில் நம்மை அவயவங்களாக வைத்தவர் யார்?
ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பிரவேசித்து அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
நாம் அந்த சரீரத்தில் எப்படி அவயவங்களாக இருக்கிறோம் என்றும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் கற்றுக்கொள்ளுவோம்.
நாம் கிறிஸ்துவின் சரீரமாகவும் தனித்தனி அவயவங்களாகவும் இருக்கிறோம்.
1Co 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
1Co 12:14 சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
அவயவங்கள் அநேகமாய் இருந்தாலும் சரீரம் ஒன்றாக தான் இருக்கிறது.
1Co 12:20 அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
கிறிஸ்துவின் சரீரத்தில் நம்மை அவயவங்களாக வைத்தவர் யார்?
1Co 12:18 தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
- தேவன் தமது சித்தத்தன்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்தில் வைத்து இருக்கிறார்.
- நாம் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் கால்களாகவோ அல்லது கையாகவோ அல்லது கண்ணாகவோ அல்லது செவியாகவோ இருக்கலாம்.
- நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் என்னவாக இருக்கிறோம் என்பது நமக்கு தெரியாது அதை வைத்த தேவனுக்கு மாத்திரமே தெரியும்.
சரீரத்தின் அவயவங்கள் ஒன்றுக்கு ஒன்று சண்டை போடலாமா?
1Co 12:15 காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
1Co 12:16 காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
1Co 12:17 சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
- நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாக இருக்கிறபடியால் நாம் நமக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளை நாம் பயன்படுத்த வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக இருக்கிற நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடலாமா?
1Co 12:21 கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
தேவன் கிறிஸ்துவின் அவயவங்களாக இருக்கிற நம்மிடத்தில் என்ன எதிர்ப்பார்க்கிறார்.
Act 2:44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
Act 2:45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
Act 2:46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள் ஒரே இருதயமாகவும் ஒரே மனமாகவும் இருக்க வேண்டும்.
Act 4:32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
1Co 1:10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
கிறிஸ்துவின் அவயவங்களாக இருக்கிறபடியால் நாம் ஒருவரைக் குறித்து ஒருவர் அக்கரையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
1Co 12:25 சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
1Co 12:26 ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
பெலவீனமுள்ள சகோதர்களிடத்தில் நாம் அதிக அக்கரையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
1Co 12:22 சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
1Co 12:23 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
1Co 12:24 நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
Gal 6:1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
Gal 6:2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
எதற்காக அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் மேய்ப்பர்கள் போதகர்கள் சுவிசேஷகர்கள் இருக்கிறார்கள்?
Eph 4:12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
Eph 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
- கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காக அவர்களை தேவன் ஏற்படுத்தினார்.
தலையாகிய கிறிஸ்துவுக்குள் சரீரத்தின் அவயவங்களாக இருக்கிற நாம் எல்லாவற்றிலேயும் வளரவேண்டும் என்பதற்காக தேவன் அப்படி செய்து இருக்கிறார்.
Eph 4:14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
Eph 4:15 அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
Eph 4:16 அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கக்கூடிய நாம் என்ன செய்ய வேண்டும்?
- நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியமாக இருக்க வேண்டும்.
- ஒருவர் பெலவீனத்தை ஒருவர் தாங்க வேண்டும்.
- ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட தாலந்துகளை பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் பக்திவிருத்திக்கு ஏதுவாக வளரவேண்டும்.