கிறிஸ்துவாகிய

கேட்டு.. அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்

we ourselves have heard Him and we know that this is indeed the Christ,the Savior of the world. (John 4:42)
Jn6:14,68,69; Jn11:27; Lk2:11,32; Lk9:20; Act9:12; Act13:23; Ro10:11-13; 2Co5:19; 2Ti1:10; 1Jn2:2; 1Jn4:14.

அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே, கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

யோவான் 6:14,68,69; யோவான் 11:27; லூக்கா 2:11,32; லூக்கா 9:20; அப்போஸ்தலர் 9:12; அப்போஸ்தலர் 13:23; ரோமர் 10:11-13; 2கொரிந்தியர் 5:19; 2தீமோத்தேயு 1:10; 1 யோவான் 2:2; 1 யோவான் 4:14.

உலக இரட்சகர்:

விசுவாசத்தின் முதல்படி இயேசுவை விசுவாசிப்பதே.
அதன்பிறகுதான் அவர் சொன்னவைகளை விசுவாசிப்பதும்,
அவர் செய்தவைகளை விசுவாசிப்பதுமாகும்.

இங்கே இயேசுவை விசுவாசித்தல் என்பதை தியானிக்கலாம்.

சமாரிய மக்கள் இயேசுவை கிறிஸ்துவாகவும்,
உலக இரட்சகராகவும் கண்டு அறிந்து விசுவாசித்தனர்.
யூதர்களோ இயேசுவை கிறிஸ்துவாகவும் உலக இரட்சகராகவும் விசுவாசிக்கவில்லை.

இயேசுகிறிஸ்து உலக இரட்சகர்.
லூக்கா 1:75 – தாவீதின் வம்சத்தில் வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
2தீமோத்தேயு 1:10 – நமது இரட்சகர் இயேசு உலகில் தோன்றினார்.
1 யோவான் 4:14 – பிதா குமாரனை உலக இரட்சகராக அனுப்பினார்.
லூக்கா 2:11 – கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்துள்ளார்.
லூக்கா 2:32 – அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்.
லூக்கா 4:42 – உலக இரட்சகர் என்று விசுவாசிக்கிறோம்.
அப்போஸ்தலர் 5:31 – அவரை அதிபதியாகவும், இரட்சகராகவும் உயர்த்தினார்.
எபேசியர் 5:23 – கிறிஸ்துவே சரீரத்துக்கும் இரட்சகர்.
பிலிப்பியர் 3:20 – கிறிஸ்து என்னும் இரட்சகர் வர காத்திருக்கிறோம்.
தீத்து 2:13 – தேவனும் இரட்சகருமாகிய இயேசுவின் வருகையை எதிர்பார்க்கின்றோம்.
2 பேதுரு 1:1 – தேவனும் இரட்சகருமான கிறிஸ்துவின் நீதி.
தீத்து 3:7 – இரட்சகராகிய இயேசு மூலம் பரிசுத்த ஆவி பொழியபட்டார்.
2பேதுரு 1:11. கர்த்தரும் இரட்சகருமான கிறிஸ்துவின் நித்திய ராஜ்ஜியம்.
2 பேதுரு 2:20 – கர்த்தரும் இரட்சகருமாகிய கிறிஸ்துவை அறிகிற அறிவு.

இயேசு உலக இரட்சகர்:

இந்த இயேசுவை விசுவாசித்தலே விசுவாசத்திற்கு அடித்தளம்.
ஆதியாகமம் 49:17,18 ல் வாக்களிக்கப்பட்ட இரட்சகர்.
ஏசாயாவில் 8 தடவைகளுக்குமேல் இரட்சகர் என்று கூறப்பட்டுள்ளவர். தாவீதின் வம்சத்தில் தோன்றிய இரட்சகர்.
தேவனால் அபிஷேகம்பண்ணபட்டு அனுப்பபட்ட இரட்சகர்.
இயேசுவாகிய உலக இரட்சகர். கிறிஸ்துவாகிய உலக இரட்சகர். அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்ட உலக இரட்சகர்.
சபையை சரீரமாக கொண்டுள்ள உலக இரட்சகர்.
விவிலியத்தில் வெளிச்சமாயுள்ள உலக இரட்சகர்.
இரட்சண்யத்தை பெற்றவர்களால் பிரசங்கிக்கபட்டுவரும் உலக இரட்சகர். இவரே… என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.

இந்த விசுவாசம் நம்மில் இருந்தால் மட்டுமே நாம் உலகை ஜெயிக்க முடியும் ( யோவான் 16:33; 1 யோவான் 5:4,5).
இந்த இயேசுவை நம்ப எங்கும் போக வேண்டாம்.
விவிலியத்தை வாசியுங்கள். திருச்சபையை நேசியுங்கள்.
நீங்கள் சார்ந்துள்ள சபையில் விவிலியம் உரைப்போருக்கு செவி கொடுங்கள்.

கர்த்தாவே, உம் குமாரனை பாவத்தில் மூழ்கிபோன மனுகுலத்தை மீட்கும்படியாய் அனுப்பி உலக இரட்சகர் என்று வெளிப்படுத்தினீர். வெளிபாடுகளை பெற்றுகொண்ட இஸ்ராயேலரின் சந்ததியார் இவரை ஏற்காமல் போனதால் எங்களை மீட்டுக்கொண்டீர். கர்த்தாவே, உமது ஜனமாகிய இஸ்ராயேலரையும் இந்த சுவிசேஷத்துக்குள் வழிநடத்த உம் ஆவியானவரை அனுப்பும். எங்களையும் ஆயத்தப்படுத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME