நீங்கள் விசுவாசிக்கும்படி அந்த கிரியைகளை விசுவாசியுங்கள்.
Though you do not believe Me, believe the works, that you may know and believe. (John 10:38)
Ex7:9; Ex23:21; Nu14:11; Mic5:4; Mt8:4; Mt11:5; Jn14:10,11,28; Act10:38; Phi2:6; Col2:3,9,10; 1Jn5:7-10.
செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். (யோவான் 10:38)
யாத்திராகமம் 7:9; யாத்திராகமம் 23:21; எண்ணாகமம் 14:11; மீகா 5:4; மத்தேயு 8:4; மத்தேயு 11:5; யோவான் 14:10,11,28; அப்போஸ்தலர் 10:38; பிலிப்பியர் 2:6; கொலோசெயர் 2:3,9,10; 1யோவான் 5:7-10.
விசுவாசியுங்கள்:
விசுவாசம் என்பது கிறிஸ்துவை நாம் கொண்டிருப்பதும், கிறிஸ்து நம்மை கொண்டிருப்பதுமாகும். இப்பகுதியில் விசுவாசத்தை எவரில் கொண்டிருக்க வேண்டும் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது.
இஸ்ராயேலர் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும்.
பிதா கிறிஸ்துவிலும், கிறிஸ்து பிதாவிலும் இருப்பதை விசுவாசிக்க வேண்டும்.
பிதாவோடு இணைந்து இயேசு செய்த கிரியைகளை விசுவாசிக்க வேண்டும்.
ஆனால் இஸ்ராயேலர்கள் இந்த மூன்று விஷயத்திலும் உடன்படவில்லை. இதன் அடிப்படையில் தற்கால கிறிஸ்தவ சமுதாயம் எவ்வாறுள்ளது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
உலகியியல் காரியங்கள் மேல் வைக்கின்ற விசுவாசம் கூட கிறிஸ்துவின் மேல் நாம் வைப்பதில்லை. மருத்துவர்கள் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அளவுக்கு கூட கிறிஸ்துவின்மேல் நாம் நம்பிக்கை வைப்பதில்லை.
விசுவாசம் என்பது கிறிஸ்துவோடு இணைந்த வெற்றி வாழ்க்கைக்கு கண்கள் போன்றவை. இந்த விசுவாச கண்கள் இல்லாவிட்டால் வெற்றியில் தொடரவியலாது.
விசுவாசம் என்பது குருதி போன்றவை. மனிதன் ஜீவித்திருப்பதற்கும், ஆற்றலுடன் செயல்படுவதற்கும் இரத்தம் அவசியமே. அதை போன்று விசுவாசம் நம்மை வாழ்ந்திருக்கவும், ஆற்றலுடன் செயல்படவும் வைக்கும்.
விசுவாசம் என்பது உயிர்மூச்சு மாதிரி. நாம் கிறிஸ்துவோடு வாழ்வதற்கு விசுவாசம் என்ற சுவாசகாற்று அவசியம் தேவை.
விசுவாசம் என்பது ஆரோக்கியம் மாதிரி. வியாதிகள், துன்பங்கள், இழப்புகள் நிறைந்த உலகத்தில் கிறிஸ்துவுக்குள் திடகாத்திரமாக வாழ்ந்து சாத்தானையும், உலகத்தையும், மாம்சத்தையும், பாவத்தையும் ஜெயித்து வாழ விசுவாசம் தேவை.
விசுவாசம் என்பது கிறிஸ்துவோடு இணைந்து நிற்பது. எதிர்மறையான இவ்வுலகில் கிறிஸ்துவோடு இணைந்து செல்லுவதே விசுவாச வாழ்வு.
நிலைத்து நிற்பதற்கும், கனி கொடுப்பதற்கும், வெற்றியடைவதற்கும் கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.
கர்த்தாவே உம்மையும் உம் மகனையும் உம் மகன் மூலம் நீர் செய்யும் கிரியைகளையும் விசுவாசித்து கிறிஸ்துவைபோல ஜெயித்து வாழ உதவிடும்.