கர்த்தருடைய பந்தி (இராபோஜனம்) மூலம் தேவனை எப்படி ஆராதிக்கிறோம்

கர்த்தருடைய பந்தி (இராபோஜனம்) மூலம் தேவனை எப்படி ஆராதிக்கிறோம்?

ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தைக் கற்றுக் கொண்டு வருகிறோம்.

இந்த கர்த்தருடைய பந்தியை எப்போது அநுசரிக்கவேண்டும் எப்படி அநுசரிக்க வேண்டும் என்று அநேகருக்கு தெரிவதில்லை. அநேக சபைகளில் மாதத்தில் முதல் வாரத்திலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், ஆறு மாத்த்திற்கு ஒரு முறையும் பங்கு பெறுகிறார்கள். இன்னும் அநேக சபைகளில் வருடத்திற்கு ஒரு முறை பங்கு பெறுகிறார்கள்.

தேவனுடைய கட்டளை நாம் வாரத்தின் முதல் நாள் தோறும் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற வேண்டும்.

Act 20:7  வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், 

அநேகர் இந்த அப்பம் என்று சொல்லும் போது போஜனம் பண்ணக்கூடிய அப்பம் என்று சொல்லுகிறார்கள் ஆனால் இந்த வேத வாக்கியத்தில் அப்பம் என்ற வார்த்தை கிரேக்க வேதாகமத்தில் ஒருமையில் தான்பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இங்கே கூடி வந்தவர்கள் யார்?

சீஷர்கள்

சீஷர்கள் என்பவர்கள் யார்?

சீஷர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

Act 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

எப்போது கூடி வந்தார்கள்?

வாரத்தின் முதல் நாளில் கூடிவந்தார்கள்.

எதற்காக கூடி வந்தார்கள்?

அப்பம் பிட்கும்படி கூடி வந்தார்கள்

இங்கே சீஷர்கள் பூமிக்குரிய வகையில் புசித்து குடிக்க பசியை தீர்த்துக் கொள்ள வரவில்லை.

Rom 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

1Co 8:8 போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; ,,,,,

ஆதி கிறிஸ்தவர்கள் அப்பம் பிட்குதலில் (கர்த்தருடைய பந்தி) அவர்கள் உறுதியாய் தரித்து இருந்தார்கள்.

Act 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

கர்த்தருடைய பந்தியில் (இராபோஜன பந்தி) சரியான முறையில் பங்கு பெறவில்லையென்றால் நாம் நித்திய ஜீவனுக்குபோக முடியாது என்று இயேசு கிறிஸ்து எச்சரித்து இருக்கிறார் என்பதை ஒருபோதும் நாம் மறக்க கூடாது.

Joh 6:53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசுகிறிஸ்து சிலுவைக்கு போவதற்கு முன்பு இந்த கர்த்தருடைய பந்தியை ஏற்படுத்தினார். (மாற்  14:22-25 Luk22:17-20)

Mat 26:26 அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

Mat 26:27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

Mat 26:28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

கர்த்தருடைய பந்தியில் (இராபோஜனம்) எப்போது பங்கு பெற வேண்டும்?

Act 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

Act 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.

  • அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் வாரத்தின் முதல் நாளில் சபையானது ஸ்தாபிக்கப்பட்ட போது ஆதிசபையின் அபோஸ்தலர்களும் விசுவாசிகளும் வாரத்தின் முதல்நாள் தோறும் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதில் உறுதியாய்தரித்து இருந்தார்கள்.
  • நாம் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாள் (ஞாயிறு) தோறும் இதில் பங்கு பெற வேண்டும்.

இந்த கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறக்கூடியவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

1Co 11:23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,

  • கர்த்தருடைய பந்தியை அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தரிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டு  அதை கைக்கொள்ளும்படி கொரிந்து சபையாருக்கு ஒப்புவித்தார்.

அப்பம் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது அவருடைய பாடுகளை நினைவு கூறும்படி இதில் பங்கு பெற வேண்டும்.

1Co 11:24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

திராட்சரசம் (பாத்திரம்) இயேசு கிறிஸ்துவின் இரத்தமாக இருக்கிறது.

1Co 11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

  • திராட்ச ரசம்(பாத்திரம்) கிறிஸ்துவின் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. அவர் நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்யும்படிக்கு அவருடைய இரத்தம் சிந்தப்பட்டது. அவருடைய பாடுகளை  நினைவு கூரும்படி இதை செய்ய வேணடும்.

இந்த பந்தியில் நாம்பங்கு பெறும் போது கிறிஸ்துவின் மரணத்தை தெரிவிக்கிறோம். இதை அவருடைய வருகைபரியந்தமும் அல்லது நம்முடைய மரணபரியந்தம் இதை கைக்கொள்ள வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.

1Co 11:26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

இந்த கர்த்தருடைய பந்தியில் யார் அபாத்திரமாய் போஜனம் பானம் பண்ணுகிறார்களோ அவர்கள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.

1Co 11:27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.

இதில் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறும் போது நம்மை நாமே சோதித்து பங்கு பெற வேண்டும்.

1Co 11:28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

நம்மை நாமே நிதானித்து இந்த கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறவில்லையென்றால் நமக்கு ஆக்கினை தீர்ப்புவரும்படி போஜனபானம் பண்ணுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1Co11:29 என்னத்தினாலெனில்,அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.

நாம் அப்பத்தில் பங்குபெறும் போது கிறிஸ்துவின் சரீரத்தில் ஐக்கியமாக இருக்கிறோம். திராட ரசத்தில் (பாத்திரம்) பங்கு பெறும் போது கிறிஸ்துவின் இரத்தத்தோடு ஐக்கியமாக இருக்கிறோம்.

1Co 10:16 நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

அந்த ஒரே அப்பத்தில் நாம் எல்லாரும் பங்கு பெறுகின்ற போது அநேகரான நாம் எல்லாரும் ஒரே ஐக்கியமாக இருக்கிறோம்.

1Co 10:17 அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறவில்லையென்றாலோ அல்லது  சரியான முறையில் பங்கு பெறவில்லையென்றாலோ நமக்கு நித்திய உயிர்த்தெழுலும் இல்லை நித்தியஜீவனும் இல்லை என்று இயேசு கிறிஸ்து எச்சரித்து இருக்கிறார்.

Joh 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

Joh 6:55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

Joh 6:56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

Joh 6:57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

கர்த்தருக்கு சித்தமானால்தொடர்ந்து ஆராதனைக்குரிய சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME