கடந்ததை மறந்துவிடு; நடக்கபோவதை ஏறிடு.
ஆபிரகாம் லோத்தை தேவ விருப்பத்துக்கு மாறாக அழைத்துச் சென்றான். (ஆதியாகமம் 12:5)
ஏன்?
தனக்கு பிள்ளையில்லாததினால் தன் தம்பி மகனை சுவீகாரமாக ஆக்கியிருந்தான்.
ஆதியாகமம் 13 ல் லோத்து ஆபிரகாமைவிட்டு பிரிந்து சென்றான்.
ஆபிரகாம் அவனை பிரிந்து செல்லும்படி கூறினான்.
இதனை ஆபிரகாம் முழு மனவிருப்பத்தின்படி கூறினான் எனகூறமுடியாது.
சண்டைகளினிமித்தம் கூறினான். அதனால்தான் பிரிவை சந்திக்க இயலாமல் நிலைகுத்தி நன்றான். லோத்தையே பார்த்து நின்றான்.
கர்த்தர்:
- மறந்துவிடு ஆதியாகமம் 13:14
- ஏறிட்டுபார் என்றார்.
ஆனால் பின்னாளில் எந்த கசப்பும், வெறுப்பும் இல்லாமல் லோத்துக்காய் மன்றாடினான். ஆதியாகமம் 18:22.
லோத்தை காப்பாற்றினான். ஆதியாகமம் 14:14.
பிரிந்துபோகிறவர்களை மறந்துவிடு. உன் போராட்டங்களை மறந்துவிடு.
உன் வியாதிகளை மறந்துவிடு.
உன்னை ஒடுக்கினவர்களை மறந்துவிடு.
உன்னை வசைபாடுகிறவர்களை மறந்துவிடு.
உன்னிடம் சண்டைக்கு வருகிறவர்களை மறந்துவிடு.
உன்னிடம் பறித்துகொண்டவர்களை மறந்துவிடு.
உன்னில் கசப்பை வைத்திராதே.
கசப்பும் தித்திப்பும் ஓரிடத்தில் இரா..
கர்த்தர் உனக்காய் செய்திருப்பதை ஏறிட்டுபார். 1கொரிந்தியர் 2:9.
உனக்குரியது உன்னை தேடிவரும். வேறொருவருக்குரியது உனக்கு வராது. அதை பார்த்திராதே.
தேவனைபார்.
அவரிடம் எதிர்பார்.
அவர் எதைகேட்டாலும் உனக்கு தருவார். யோவான் 14:13,14.
பேதுரு முடவனிடம் ஏறிட்டுபார்க்க கூறினான். அப்போஸ்தலர் 3:4.
அவன் ஏறிட்டு சுகம் பெற்றான்.
எசேக்கியா இராஜா சுவர்புறமாய் திரும்பி கர்த்தரை ஏறிட்டு 15 வருடங்களை கூடுதலாக பெற்றான்.
நீயும் உனக்குரியதை எதிர்பார். .
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.