ஒன்றான மெய் சபை யாருடைய நாமத்தில் அழைக்கப்படுகிறது?
கிறிஸ்து என்ற கன்மலையின் தன் சபையைக் கட்டப்போவதாக இயேசு வாக்குத்தத்தம் செய்து இருந்ததைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்
இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று ஒரு கேள்வி கேட்டார்.
Mat 16:13 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
ஜனங்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து என்ன சொன்னார்கள் என்பதை நாம் அறிந்து இருக்கிறோம்.
Mat 16:14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
தேவனுடைய பரிசுத்தவான்களாகிய இவர்கள் மீது இயேசு கிறிஸ்து தம்முடைய சபையை கட்டினாரா?
1) யோவான் ஸ்நானன்
2) எலியா
3) எரேமியா
4) தீர்க்கதரிசிகள்
இவர்களுடைய நாமத்தின் மீது சபை கட்டப்படும் என்றால் அது தேவனுடைய மெய்யான திருச்சபையா?
இவர்களுடைய நாமத்தில் சபையானது கட்டப்பட்டு இருக்கும் என்றால் அது மெய்யான திருச்சபையாக ஒருபோதும் இருக்க முடியாது
தேவன் யார் மீது கட்டப்போகிறார் என்பதை பேதுருவின் வாயின் மூலமாக அதை தெளிவாக எடுத்துரைத்தார்.
Mat 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
Mat 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
Mat 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
கிறிஸ்து என்ற வார்த்தையை தான் பரலோகத்திலிருக்கிற பிதா வெளிப்படுத்தினார்.
கிறிஸ்துவும் அந்தகல்(கன்மலை) மீது தான் என் சபையை கட்டுவேன் என்று வாக்குத்தத்தமும் செய்தார்.
1Co 10:4 அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
- இயேசு என்ற வார்த்தையின் மீது சபையானது கட்டப்படும் என்று தேவன் சொல்லவில்லை.
- மாறாக கிறிஸ்து என்ற கன்மலையின் மீது சபையானது கட்டப்படும் என்று வாக்குத்தத்தம் செய்தார்.
இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் அந்த சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்.
Act 2:47 இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் அந்த சபையானது எருசலேமில் ஸ்தாபிக்கப்பட்ட போது கிறிஸ்துவின் நாமத்தினால் தான் அந்த சபை அழைக்கப்பட்டது.
Rom16:16 கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
- அப்போஸ்தலர்கள் இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசித்து அறிக்கையிட்டு அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்தார்கள்.
- இன்றைக்கு அநேகர் அற்புதம் செய்த இயேசுவை மாத்திரமே அறிந்து இருக்கிறார்கள்.
- நாம் இயேசுவை தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவாக(ராஜாவாக)ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்போது தான் நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய முடியும்.