எபேசு சபை ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை

எபேசு சபை: ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை

எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன?

வெளிப்படுத்தின விசேஷத்தில் வருகிற ஆசியாவில் இருக்கிற ஏழு சபைகளில் இருந்து சில சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்.

இயேசு கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?

வெளி 2:1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

ஏழு நட்சத்திரங்கள் என்பது என்ன?

வெளி 1:20 …. அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்….

ஏழு குத்துவிளக்குகள் என்பது என்ன?

வெளி 1:20 … நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

இயேசு கிறிஸ்து இன்றைக்கும் சபையின் (பொன் குத்துவிளக்கு) மத்தியில் உலாவிக் கொண்டு தான் இருக்கிறார்

இயேசு கிறிஸ்து எபேசு சபை விசுவாசிகள் எப்படி தேவனுக்காக கிரியை செய்தார்கள் என்பதை குறித்து பாராட்டுகிறார்

வெளி 2:2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;

வெளி 2:3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

வெளி 2:6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.

எபேசு சபையின் விசுவாசிகள் தேவனுக்காக என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதைக் குறித்து  இயேசு கிறிஸ்து விவரித்து காண்பித்தார்.

  • தேவனுக்கேற்ற கிரியைகள் இருந்தது.
  • தேவனுக்கேற்ற பிரயாசம் இருந்தது.
  • பொல்லாதவர்களை சகிக்கக் கூடாமல் இருந்தார்கள்.
  • அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்தார்கள்.
  • (பாடுகளை) சகித்துகொண்டு இருந்தார்கள் (பாடுகளில்) பொறுமையாய் இருந்தார்கள்.
  • கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டார்கள்.
  • கிறிஸ்து  வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை அவர்களும்  வெறுத்தார்கள்.

எபேசு சபையின் விசுவாசிகள் தங்களுடைய கிறிஸ்தவ ஓட்டத்திலே இவ்வளவு காரியங்களை செய்து இருக்கிறார்கள்.

நாம் இந்த காரியங்களை செய்து கொண்டு இருக்கிறோமா?

ஆனாலும் அவர்களிடத்தில் குறை இருக்கிறது என்று இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார்

வெளி 2:4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

எபேசு சபை விசுவாசிகள் ஆதியில்கொண்டிருந்த அன்பை விட்டு விட்டார்கள்.

எபேசு சபையின்  விசுவாசிகள் அன்பை விட்டபடியினாலே கிறிஸ்தவ ஒட்டத்திலிருந்து விழுந்து விட்டார்கள்.

வெளி 2:5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து,

  • எபேசு சபையின் விசுவாசிகள் அநேக காரியங்களை தேவனுக்காக செய்தும் அன்புக்கு கீழ்ப்படியாத போது அவர்களுடைய கிறிஸ்த வாழ்க்கையோ முடிந்து போகக் கூடிய அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

எபேசு சபையின் விசுவாசிகள்  மனந்திரும்பும் படி கிறிஸ்து கட்டளையிட்டார்.

வெளி 2:5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; ,,,,

எபேசு சபையின் விசுவாசிகள் மனந்திரும்பாத பட்சத்தில் என்ன நடக்கும்?

வெளி 2:5 …. இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

தேவனுக்காக எவ்வளவு கிரியை செய்தாலும் தேவனுடைய ஒரே ஒரு கட்டளைக்கு கீழ்ப்படியாதபட்சத்தில் தேவன்நம்மை புறம்பே தான் தள்ளிப்போடுகிறார்

எசேக்கியேல் 18:24 நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.

  • எபேசு சபைக்கும் அது தான் நடந்தது  அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் விளக்குத்தண்டை அதினிடத்தின்று நீக்கிவிடுவேன் என்கிறார்.
  • விளக்குதண்டு அங்கே நீக்கப்படும்போது இயேசு கிறிஸ்து அங்கே எந்தவொரு கிரியையும் செய்வதில்லை.
  • எபேசுசபை விசுவாசிகள் ஆதியில் கொண்டிந்த அன்புக்கு அவர்கள் திரும்பவில்லையென்றால்அவர்கள் கிறிஸ்தவ ஒட்டத்திலே ஜெயங்கொள்ளாமல் தோற்றுப்போய்விடுவார்கள்.
  • தோற்றுப்போனால் அவர்கள் தங்கள் நித்திய ஜீவனை இழந்து போய் விடுவார்கள்.

இந்த சத்தியம் எபேசு சபைக்கு மாத்திரம் தானா?

வெளி 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; …

ஜெயங்கொள்ளுகிறவர்கள் மாத்திரமே பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக் கொடுப்பார்.

வெளி 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

பாடம்: நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் ஓரே ஒரு தேவனுடைய கட்டளையை கைக் கொள்ளாத பட்சத்தில் நாம் ஜீவ விருட்சத்தின் கனியை இழந்து போய் விடுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME