என் பிதாவின் நாமத்தினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது

என் பிதாவின் நாமத்தினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.

The works that I do in My Father’s name, they bear witness of Me. (John10:25)

Jn10:32,38; Jn3:2; Jn5:36; Jn7:31; Jn11:47; Jn12:37; Jn14:11; Jn20:30; JnAct2:22; Jn10:38; Heb2:3; Mt11:5.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை, என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. (யோவான் 10:25)

யோவான் 10:32,38; யோவான் 3:2; யோவான் 5:36; யோவான் 7:31; யோவான் 11:47; யோவான் 12:37; யோவான் 14:11; யோவான் 20:30; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 10:38; எபிரெயர் 2:3; மத்தேயு 11:5.

விசுவாசிக்க வேண்டியது:
இயேசுகிறிஸ்துவை தேவன் இஸ்ராயேலரிடையில் கன்னி மகனாக அனுப்பியும் அவர்கள் விசுவாசிக்கவில்லை. இயேசுகிறிஸ்து பரலோக இராஜ்யத்தின் செய்திகளை எடுத்து கூறியும் விசுவாசிக்கவில்லை. இயேசுகிறிஸ்து செய்த அற்புத அதிசய கிரியைகளைக் கண்டும் அனுபவித்தும் விசுவாசிக்கவில்லை. நமக்குள் விசுவாசத்தை உருவாக்க இயேசுவையும், அவருடைய வார்த்தையையும், கிரியைகளையும் தந்துள்ளார். இவைகளைதவிர வேறு எவ்விதத்திலும் உண்டாகக்கூடிய விசுவாசத்தை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. உண்மையான விசுவாசம் இயேசுவின் வாழ்விலும், வார்த்தையிலும், கிரியையிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதுவே.

அற்புத கிரியைகளும், பிரசங்கங்களும் இயேசுவுக்கு நேராக திருப்பப்பட்டு இயேசுவின் வாழ்வு முறைகள் மீதே விசுவாசம் கட்டப்படுகிறது. இயேசுவின் வாழ்வு முறை – வாழ்வியல் மேல் கட்டப்படும் விசுவாசமே உறுதியானது, இறுதியானது. இயேசுவை விசுவாசிக்கிறவன் இயேசுவை போல பேசவும், கிரியை செய்யவும் அழைக்கப்பட்டுள்ளான். நாம் அவரைபோல வாழும்படியாகவே நமக்குள் விசுவாசம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடலாகாது.

பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் வாழ்வியலையும் நம்மில் வெளிப்பட விரும்புகிறார். அதுவே தேவ சாயலாகும். இதுவே நம்மை தேவனிடம் கொண்டு சேர்க்கும். ஆத்துமாக்களை சம்பாதித்திருக்கலாம், சுவிசேஷத்தை பிரசங்கித்திருக்கலாம், அற்புத கிரியைகளைச் செய்திருக்கலாம் நல்லதுதான். ஆனால் ஏன் இயேசுவைபோல வாழ்வில்லை? ஏன் இயேசுவின் சாயலை தரித்திருக்கவில்லை? என்ற கேள்வி எழும்பும். இயேசு நமது வாழ்வில் வெளிப்படாவிட்டால் எல்லாம் வீணாகிவிடும். பிதாவின் மடியிலிருந்தவர் இயேசு. நீ பிதாவிடம் போகவேண்டுமானால் இயேசுவைப்போல வாழ்வாயாக. அதுவே விசுவாச வாழ்வு.

கர்த்தாவே நாங்கள் எத்தகைய விசுவாசம் உடையவர்களாயிருக்க வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றீர். அதன்படி நாங்கள் உம் மகனின் சாயலையுடையவர்களாய் வாழ்ந்து காண்பிக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME