இந்த உவமைகளின் கருத்தை அவர்கள் அறியவில்லை
Jesus used this illustration, but they did not understand the things which He spoke to them. (John 10:6)
John6:52,60; John7:36; John8:27,43; Mathew 13:13,14,51; 1Corinthians 2:14; 1John5:20; Psalm82:5; John106:7; Proverbs 28:5; Isaiah 6:9,10; Isaiah56:11; Daniel 12:10.
இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார், அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. (யோவான் 10:6)
யோவான் 6:52,60; யோவான் 7:36; யோவான் 8:27,43; மத்தேயு 13:13,14,51; 1கொரிந்தியர் 2:14; 1யோவான் 5:20; சங்கீதம் 82:5; சங்கீதம் 106:7; நீதிமொழிகள் 28:5; ஏசாயா 6:9,10; ஏசாயா 56:11; தானியேல் 12:10.
அறியாத ஜனம்:
யோவான் 10:1-6 வரை சொல்லப்பட்டுள்ள படவியல் பேச்சு உவமையாக சொல்லப்பட்டது என்றும், இவ்விதம் உவமையாக சொல்லப்பட்டதை கேட்ட ஜனங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றும் யோவான் கூறுகின்றார். நாம் இவைகளை வாசித்தபோது இவைகள் நமக்கு புரிகின்றன. காரணம் நமக்குள் தேவனுடைய ஆவி இருப்பதினாலே. அவர்களுக்குள் தேவ ஆவி இல்லாததினால் இந்த உவமையை புரிந்துகொள்ள இயலவில்லை. இன்றைக்கும் இப்பகுதியை எவரொருவர் கருகலானது என்று கூறுகின்றாரோ அவர்களில் தேவ ஆவி இல்லை என்று கூறலாம்.
காணக்கூடாத தேவனை அறிவதற்காக தேவன் தமது மகனை அனுப்பினார். இந்த கிறிஸ்துவை எவரொருவர் மீட்பராக, ஆண்டவராக, தெய்வமாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்கள் காணக்கூடாத தேவனை அறிவார்கள். தேவனை நாம் அறியவேண்டும் என்பதற்காகவே விவிலியம் எழுதப்பட்டுள்ளது. இந்த விவிலியம் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டதாகும். எனவே விவிலியத்தை அறிய தேவ ஆவியை நாம் பெற்றிருக்க வேண்டும். தேவன் தமது குமாரனாகிய கிறிஸ்துவுக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருந்தார். இயேசுகிறிஸ்து பிதாவின் ஆவியினாலே உபதேசித்தார், பிரசங்கித்தார், கற்பித்தார். எனவே இயேசுவின் உபதேசங்களை அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்கு அவசியம். கர்த்தருடைய வார்த்தைகள் ஆவியாயும், ஜீவனாயும் இருப்பதினால் அவருடைய ஆவியை கொண்டு மட்டுமே நாம் உவமைகளை விளங்கிக்கொள்ள முடியும்.
தேவனோடு நேரம் செலவிடுவதும், தேவனுக்காய் வைராக்கியமாய் நிற்பதும், தேவனை வெளிபடுத்தி வாழுவதும் பரிசுத்த ஆவியை நாம் பெற்றுள்ளோம் என்பதற்கான அடையாளங்கள்.
உவமை என்பது உள்ளதை உள்ளவைகளோடு இணைத்து பேசுவதாகும். கேட்கிறவனின் செவிதிறனுக்கேற்றவாறு இயேசுகிறிஸ்து பேசினார். ஆவியை கொண்டவன் அறிந்தான். அவருக்கு பின்சென்றான். அல்லாதவரோ அவரைவிட்டு விலகிச் சென்றனர்.
கர்த்தருடைய வாக்கியங்கள் உனக்கு மறைபொருளாக தெரியுமானால் உன்னில் தேவ ஆவி இல்லை என்று புரிந்துக்கொண்டு ஆவியின் நிறைவுக்காய் மன்றாடு.
கர்த்தாவே உமது கிரியைகளும், உபதேசங்களும் எங்களுக்கு விளக்கிக் காண்பிப்பதற்காகவே உமது ஆவியை எங்களுக்கு தந்தீர். உமக்கு நன்றி.