இயேசு, உன்னுடனே பேசுகிற நானே அவர்
Jesus said to her,I who speak to you am He. (John 4:26)
Mat16:20; Mat20:15; Mat26:63,64; Mk14:61,62; Lk4:21; Lk13:32; Jn4:10; Jn9:37; Act8:5; Ro10:20,21.
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். ( யோவான் 4:26)
மத்தேயு 16:20; மத்தேயு 20:15; மத்தேயு 26:63,64; மாற்கு 14:61,62; லூக்கா 4:21; லூக்கா 13:32; யோவான் 4:10; யோவான் 9:37; அப்போஸ்தலர் 8:5; ரோமர் 10:20,21
நானே அவர்:
மாற்கு சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து தம்மை மேசியாவாக வெளிப்படையாக வெளிபடுத்தவில்லை என்று கருதி அதனை Messianic Secrecy என்று கூறுவர் அறிஞர்.
ஆனால், சுவிசேஷங்களில் பல இடங்களில் இவ்விதமான Secrecy காணப்படுகின்றது.
– தம்மை ஒருவருக்கும் வெளிப்படுத்தாமல் இருந்து விடுகிறார்.
– தம்மை குறித்து அவர்களாகவே அறிந்து கொள்ள வேண்டும் என்று கருதி இருந்து விடுகிறார்.
– சில நேரங்களில் அரைகுறையாகவே தம்மை வெளிப்படுத்துகின்றார்.
– தம்மை அறிந்தவர்களின் அறிக்கையை சில நேரங்களில் ஏற்றுக்கொள்வதில்லை. சில நேரங்களில் ஒத்துக் கொள்கிறார்.
– சில நேரங்களில் தம்மை முழுமையாகவே வெளிப்படுத்தவும் செய்கின்றார்.
ஏன் இவ்விதமாய் இயேசுகிறிஸ்து நடந்து கொண்டார்?
இயேசுகிறிஸ்து யூதர்களிடையில் தோன்றினார். யூதர்களின் சமய நூல்களில் இயேசுவை குறித்த ஏராளமான வெளிப்பாடுகள் தாராளமாக உள்ளன.
இந்த நூல்களை கற்றும், அறிந்தும் இயேசுவை கிறிஸ்து என்று நம்பவோ, ஏற்றுகொள்ளவோ செய்யாததினால் இவ்விதமான ரகசியத்தை கடைப்பிடித்தார்.
நாமும் நமது கரங்களில் தரப்பட்டுள்ள விவிலியத்தில் வெளிபடுத்தபட்டுள்ளவைகளை நம்பாமல் – மனுகுலத்தை நம்பவைக்க பிறமத நூல்களை நாடிதேடுகிறோமெனில் யூதர்களுக்கு உண்டான தள்ளிவிடுதலே உண்டாகும்.
எபிரெயர் 11:1,2. பூர்வகாலங்களில் பங்கு பங்காக வெளிப்படுத்தியவர் இந்த கடைசிகாலங்களில் குமாரன் மூலம் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். பங்கு எனும்போது கோத்திரம் கோத்திரமாக என்றும், காலம் காலமாக என்றும் பொருள் கொள்ள வேண்டும். ஆபிரகாம் முதல் தேவன் தம்மை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனாலும் அவர்கள் அவரை செம்மையாய் அறிந்திருக்கவில்லை. முடிவிலே தம் மகன் கிறிஸ்து மூலமாக முழுமையாக வெளிப்படுத்தினார்.
Partial Revelation becomes Full Revelation.
இனி கிறிஸ்துவை தவிர வேறு யாரையும் பின்பற்ற வேண்டாம். கிறிஸ்துவின் வழியாக அல்லாது பிதாவிடம் செல்ல முடியாது – அவரை காணவும் முடியாது.
கிறிஸ்துவை கூறும் சுவிசேஷங்களும், ஆதி சபை நூல்களும், சபை வரலாறுகளுமே போதுமானது.
திருடனும் நன்மை செய்கிறான், நல்லவனும் நன்மை செய்கிறான். இருவரையும் ஒரே தட்டில் வைக்கவியலாது.
எச்சரிக்கை.
கர்த்தாவே, நீர் தம் குமாரன் மூலமாக உம்மை எங்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தினீர். இதனை நீர் எங்களுக்கு தந்துள்ள விவிலியத்திலே நாங்கள் காண்கின்றோம். இது எங்களுக்கு போதுமானது. வேறு பொய்புரட்டுகளுக்கு நாங்கள் இடம் தராமல் எங்களை காத்துக்கொள்ளும்.