உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்.
Behold, I say to you, lift up your eyes and look at the fields. (John 4:35) Lk16:23; Jn6:5; Jn11:41; Jn17:1; 1Jn1:1; Gen13:14; Gen18:2; Gen22:4,13; Gen31:12; Le7:14; Nu24:2; Deu3:27; Deu4:19; Jos5;13; Isa40:26; Isa49:18; Isa60:4; Jer13:20; Zec2:1.
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 4:35)
லூக்கா 16:23; யோவான் 6:5; யோவான் 11:41; யோவான் 17:1; 1 யோவான் 1:1; ஆதியாகமம் 13:14; ஆதியாகமம் 18:2; ஆதியாகமம் 22:4,13; ஆதியாகமம் 31:12; லேவியராகமம் 7:14; எண்ணாகமம் 24:2; உபாகமம் 3:27; உபாகமம் 4:19; யோசுவா 5;13; ஏசாயா 40:26; ஏசாயா 49:18; ஏசாயா 60:4; எரேமியா 13:20; சகரியா 2:1.
ஏறெடுத்து பாருங்கள்:
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு கூறிய அறிவுரை.
சீஷர்கள் தற்கால ஊழியர்களை பிரதிநிதித்துவ படுத்துகின்றனர். அப்படியானால், ஊழியகாரர் ஏறெடுத்து பார்க்கும்படி இயேசு கிறிஸ்து அறிவுரை கூறுகிறார் எனலாம்.
ஏறெடுத்தல் என்பது:
ஜெபம் செய்தல், தேவனை நோக்கிப் பார்த்தல்,வாஞ்சை, விருப்பம் உள்ளவர் என்பதை காட்டுதல்.விசுவாசத்தை காண்பித்தல்.தன் இயலாமையையும், தேவனின் கொடைத்திறனையும் காட்டுதல். தேவனுக்கும், தனக்கும் உள்ள உறவை காட்டுகிறது. எதிர்பார்ப்பை கொண்டிருத்தலை வெளிப்படுத்தும் என்பதாகும்.
விவிலியத்தில் தேவனிடம் ஏறெடுத்து நின்றவர்களும் உள்ளனர். ராஜாக்களிடம் ஏறெடுத்தவர்கள் உண்டு. மனிதர்களிடம் ஏறெடுத்தவர்கள் உண்டு. விக்கிரகங்களிடம் ஏறெடுத்தவர்கள் உண்டு.
ஏறெடுத்தலின் அவசியம் என்ன?
தேவன் பரலோகில் இருக்கிறார். நாம் பூமியில் இருக்கிறோம். எனவே நாம் ஏறிட்டுப்பார்த்துதானாக வேண்டும்.
தேவனை ஏறெடுத்து பார்த்தவர்கள் – நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போனதில்லை. இன்றும் இது சாத்தியமே.
ஏறெடுத்தலின் வேளை:
அதிகாலை நேரம் தேவனிடம் ஏறிட்டு நிற்கும் பழக்கம் அவசியமானது.
புதிய கிருபையுடன் நாளை துவங்க இது அவசியம். டென்ஷன் இல்லா மன நிலையைகொண்டிருக்க அதிகாலை ஏறெடுத்தல் அவசியம். நம்பிக்கை இழக்க செய்யும் மனிதனின் செயல்பாடுகளால் உடைக்கப்படாதிருக்க அதிகாலை ஐக்கியம் அவசியம்.
நீ ஏறிட்டு பார்த்து பழகாமல் வீறுநடை போட இயலாது என்பதை மறவாதீர்.
வெற்றியின்பாதை அதிகாலை ஏறெடுத்தலில்தான் ஆரம்பமாகின்றது.
தொழுகை, ஜெபம் போன்றவைகள் அதிகாலை நேரங்களில் வைக்கப்படுமானால் மிகுந்த நன்மைகள் உண்டு. கிழக்கு வெளுக்கும் முன்பு – உலக அசைவுகள் தோன்று முன்பு உன் இருதயத்தை தேவனண்டையில் ஊற்றிப்பார். உன்னால் எல்லாம் அசைக்கப்படும்படியாய் உன்னை அவர் உருவாக்குவார்.
மறவாதே…
மறுக்காதே…
வெறுக்காதே….
கர்த்தாவே, நாங்கள் எல்லாவழியிலும் உடைக்கப்பட்டதால் உம்மை மட்டுமே நோக்கி பார்க்க பழக்குவிக்கப்பட்டுள்ளோம். இந்த அனுபவத்தில் நாங்கள் செம்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ள எங்களுக்கு உதவும்.