உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது.
The world cannot hate you. (John 7:7)
Jn15:19; Lk6:26; Jas4:4; 1Jn2:15-17; 1Jn4:5; Gen37:2f; Ex20:5; 2Chr18:1-34.
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
(யோவான் 7:7)
யோவான் 15:19; லூக்கா 6:26; யாக்கோபு 4:4; 1யோவான் 2:15-17; 1யோவான் 4:5; ஆதிியாகமம் 37:2f; யாத்திராகமம் 20:5; 2 நாளாகமம் 18:1-34.
பகைக்காத உலகம்:
இவ்வார்த்தை இயேசுவை ஏளனபடுத்திய- வெறுத்த தம் சகோதரர்களிடம் கூறியதாகும்.
நீங்கள் உலகத்தோடு ஒத்துப்போவதினால் உலகம் உங்களை பகைக்கமாட்டாது. பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் அனுசரித்துப்போனால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை வெறுக்கமாட்டார்.
நீங்கள் உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால் உலகம் உங்களை பகைக்கமாட்டாது.
தீமையோடு எதிர்த்து நிற்காமையும், எதிர்ப்போரோடு ராசியாகிப்போவதும், ஒதுங்கி வாழ்வதும் உலகத்தால் எதிர்க்கப்படாமல் வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள்.
உண்மையை உரக்க சொல்வதும், நியாயத்தின்மேல்- நீதியின்மேல் பசிதாகம் கொள்வதும், எளியோருக்கு இரங்குவதும், நன்மைக்காய் குரல் கொடுப்பதும் உலகத்தால் எதிர்க்கப்படும் சந்தர்ப்பங்கள் ஆகும்.
யாவரோடும் சமாதானமாயிருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் சமாதானம் பண்ணுவதைதான் இயேசு கூறுகின்றார். சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.
நாம் சந்தோஷமாய் வாழவேண்டும் என்பதற்காக ஒதுங்கிவாழ இயலாது.
கர்த்தாவே, உம்மகன் மூலம் உலகத்தால் நாங்கள் கறைபடாது வாழ கற்றுகொடுத்தீர். உமக்கு நன்றி. நாங்கள் ஒரு கறைபடாத சமூகமாக வாழ எங்களுக்கு உதவி செய்யும்.