இயேசு அவனை நோக்கி எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்

இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

Jesus said to him,Rise,take up your bed and walk. (John5:8)
Ex8:20; Ex34:4; Le19:32; Deu10:11; 2Sa12:20; 2Ch30:27; Pr31;15; Mt9:6; Mk2:11; Mk3:3; Lk15:18; Lk17:19; act3:6; Act9:34; Act14:10; Act22:16.

இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். (யோவான் 5:8)

யோவான் 8:20; யோவான் 34:4; லேவியராகமம் 19:32; உபாகமம் 10:11; 2 சாமுவேல் 12:20; 2நாளாகமம் 30:27; நீதிமொழிகள் 31;15; மத்தேயு 9:6; மாற்கு 2:11; மாற்கு 3:3; லூக்கா 15:18; லூக்கா 17:19; அப்போஸ்தலர் 3:6; அப்போஸ்தலர் 9:34; அப்போஸ்தலர் 14:10; அப்போஸ்தலர் 22:16.

எழுந்து: இன்றைய தியானத்தில் எழுந்து என்ற தலைப்பில் கவனிக்கலாம்.
1. ஆபிரகாமே எழுந்து நடந்து திரி. ஆதியாகமம் 13:17.
2. லோத்தே எழுந்துபோ.இவ்விடம் அழிக்கப்படும். ஆதியாகமம் 19;14.
3. யாக்கோபே எழுந்து பெத்தேலுக்கு போ. ஆதியாகமம் 35:1.
4. மேசேயே எழுந்து இறங்கி போ. உபாகமம் 9:12.
5. யூதா எழுந்து புறப்படட்டும். நியாயாதிபதிகள் 1:2.
6. சாமுவேலே எழுந்து அபிஷேகம் செய். 1 சாமுவேல் 16:12.
7. தாவீதே சீக்கிரம் எழுந்து போ. கர்த்தர் புறப்பட்டார். 2சாமுவேல் 5:24.
8. எலியாவே எழுந்து சாப்பிடு. 1இராஜாக்கள் 19:5.
9. நீ எழுந்து காரியத்தை நடப்பி. கர்த்தர் உன்னோடு இருப்பார். 1 நாளாகமம் 22:16.
10. எழுந்து பரிசுத்த இடத்தை கட்டுங்கள். 1 நாளாகமம் 22:19; நெகேமியா 2:18.
11. எழுந்து குயவன் வீட்டுக்குபோ, அங்கே வார்த்தை தருவேன். எரேமியா 18:2.
12. நீ எழுந்து நினிவேக்குபோ.யோனா 1:2
13. எழுந்துபோ, நீ இளைப்பாறும் இடம் இதுவல்ல. மீகா 2:10.
14. எழுந்து போரடி. மீகா 4;13.
15. இயேசு எழுந்து காற்றை அதட்டினார். மாற்கு 4:39.
16. பிலிப்பே நீ எழுந்து தெற்கு திசைபோ. அப்போஸ்தலர் 8:26.
17. பவுலே எழுந்து பட்டணத்திற்குபோ. அங்கே உனக்கு சொல்லப்படும். அப்போஸ்தலர் 9:6.
18. நீ எழுந்து ஆலயத்தை அள. வெளி 11:1.

இரண்டு வசனங்களை இன்றைக்கு தியானிப்போம்.
1. ஏசாயா 52:1,2. தூசியை உதறிவிட்டு எழும்பு. தூசியிலிருந்து தூய்மைக்கு எழும்பு. பாவத்திலிருந்து பரிசுத்தமாகுதலுக்கு எழும்பு. இது பழைய ஏற்பாட்டின் கருத்து. இஸ்ராயேலின் ஜனம் தேவனின் ஜனம். பாவம் என்ற – சுத்தம் என்ற தூளினால் மூடப்பட்டு கிடக்கின்றனர். அவர்கள் பரிசுத்த ஜனம். பரிசுத்தமாகுதலுக்கு எழும்ப வேண்டும். அப்பொழுதுதான் இயேசு கிறிஸ்து வருவார். ஜனங்களை இரட்சிப்பார். இன்று தூசியில் கிடக்கும் கிறிஸ்தவமே தூசியை உதறிவிட்டு பரிசுத்த ஜாதி என்பதை வெளிபடுத்து.

2. எபேசியர் 5:14. ரோமர் 13:11. தூக்கத்தை விட்டு எழும்பு. இது புதிய ஏற்பாட்டின் செய்தி. மரணத்திலிருந்து ஜீவனுக்கு – பாவத்திலிருந்து விடுதலைக்கு – இருளிலிருந்து ஒளிக்கு – தீமையிலிருந்து நன்மைக்குன் எழும்ப வேண்டும். எழும்பி இயேசுவின் இரகசிய வருகைக்கு ஆயத்தமாக வேண்டும். இன்று மரணத்தில் படுக்கை போட்டுள்ள ஜனமே கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஒளி வந்துள்ளது. எழும்பு , அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகசிப்பிப்பார்.

கர்த்தாவே, நீர் எங்களுக்கு கட்டளை கொடுத்தும் நாங்கள் தூசியிலும், தூக்கத்திலும் இருப்பதையே விரும்புகின்றோம். எங்களை மன்னியும். சிங்கார குமாரித்திகளாக – ஒளியின் பிள்ளைகளாக, இருளின் இராஜ்ஜியத்தை – பிசாசின் அதிகாரத்தை – பாவத்தின் வலிமையை – மரணத்தின் அகோரத்தை மேற்கொள்ள நாங்கள் உம் ஆவியால் பெலம் பெற்று தூதர்களைபோல சேனையாய் எழும்பி நிற்க துணைபுரியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME