இயேசுவின் சிலுவை மொழிகள்

இயேசுவின் சிலுவை மொழிகள்.

GOOD FRIDAY…. 1கொரிந்தியர் 1: 17-31.

கர்த்தராகிய இயேசு மனிதகுமாரனாக பூமிக்கு வந்த தேவ குமாரன். அவருடைய ஜனமே அவரை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தது. சிலுவையோடு சம்பந்தபட்ட மொழிகள் நான்கு பாகமாக பிரிக்கப்படுகின்றது.

சிலுவை சுமக்கு முன்புள்ள மொழிகள்.
மத்தேயு 24,25 அதிகாரங்கள். இதனை இறுதிகால செய்திகள் என்பர்.

சிலுவை சுமக்கும்போது மொழிந்த மொழிகள்.
லூக்கா 23:27-31. மிக முக்கியமான பகுதி இதுவாகும்.

சிலுவையில் மொழிந்த வார்த்தைகள். இவைகள் ஏழாக அறியப்பட்டுள்ளது.

  1. பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. லூக்கா 23:34. பாவங்கள் மன்னிக்கப்படாமல் இரட்சிப்பை பெறவியலாது.
  2. இன்றைக்கு என்னுடனேகூட பரதீசிலிருப்பாய். லூக்கா 23:35-43.
    இயேசுவோடு கூட இருப்பதுவே பரதீசின் அனுபவம்.
  3. ஸ்திரீயே அதோ உன் மகன், சீஷனே அதோ உன் தாய். யோவான் 19:25-27.
    உபத்திரவத்திலும் நன்மை செய்வதே கிறிஸ்தவம்.
  4. என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்? மத்தேயு 27:45-49.
    கைவிடப்படுதலே மகிமைக்கான பாதை.
  5. இயேசு தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28,29.
    வேதனையின் உச்சகட்டம்.
  6. இயேசு முடிந்தது என்றார். யோவான் 19:30.
    மரணம் வருமுன்பதாக செய்ய வேண்டியதை செம்மையாய் செய்.
  7. பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். லூக்கா 23:45,46.
    எதுவும் நமக்குரியதல்ல, எல்லாம் பிதாவுக்குரியவைகள்.

சிலுவையில் மரித்தபின்பு நடந்த இயற்கை மாற்றங்கள் ( மொழிகள்).
மத்தேயு 27:50-55. இயேசு மனிதகுமாரனாக மரித்தாலும் அவர் தேவ குமாரன் என்பதை ரூபகாரப்படுத்தும் சாட்சிகள்.

பாவிகளை இரட்சிக்க இயேசு தம் ஜீவனை கொடுத்தார். இந்த நாளின் மரணத்தினால் அநேகர் நீதிமான்களாக்கப்பட்டார்கள். ஆனால் நீதிமான்களாக்கப்பட்ட தேவஜனம் இன்றைக்கு மரணத்துக்குள்ளாக போய் கொண்டிருக்கின்றார்கள். அன்று இயேசுவின் மரணத்தினால் மரண ஓலம். இன்று பிள்ளைகளின் மரணத்தினால் மரண ஓலம். அன்று நாம் அழுதோம், இன்று அவர் அழுகின்றார்.
கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும்.

என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். ஏசாயா 40:1,2; 25:8.

ADD YOUR COMMENT

Powered By Indic IME