இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்?
Therefore many of His disciples,when they heard this, said,This is a hard saying;who can understand it? (John 6:60)
Jn6:66; Jn8:31,32,43; Jn10:6; Mt11:6; Mt24:10; Mk6:2-4; Mk10:24; Lk7:23; Act17:20; Heb5:11; 2Pet3:15,16.
அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். (யோவான் 6:60)
யோவான் 6:66; யோவான் 8:31,32,43; யோவான் 10:6 ; மத்தேயு 11:6; மத்தேயு 24:10; மாற்கு 6:2-4; மாற்கு 10:24; லூக்கா 7:23; அப்போஸ்தலர் 17:20; எபிரெயர் 5:11; 2பேதுரு 3:15,16.
இது கடினமான உபதேசம்:
தேவன் தமது உபதேசத்தை குழந்தைகளுக்கானது, வாலிபர்களுக்கானது, முதியவர்களுக்கானது என்று வகைபடுத்தி எழுதி வைக்கவில்லை. நாமே நமது நிலைகளுக்கு தக்கவாறு வகைபடுத்துகிறோம்.
உபதேசத்தில் மென்மையான உபதேசம், கடினமான உபதேசம் என்றும் தேவன் வகைபடுத்தவில்லை. நமது மனநிலைகளின் தன்மைக்கு ஏற்றவாறு நாம் வகைபடுத்துகிறோம்.
உபதேசம் ஒன்றே.
எல்லா மனிதரும் இரட்சிக்கபடவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
உபதேசங்கள் அவரிடமிருந்து வருகின்றது. இது மனிதரிடமிருந்து வருவதல்ல. அவரிடமிருந்து வருகிற உபதேசத்தை தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிற பரிசுத்த ஆவியானவர் மட்டுமே அறிய வைக்க இயலும். ஆவிக்குரியவனுக்கு எல்லாம் எளிய உபதேசங்களாகவும், மாம்சத்துக்குரியவர்களுக்கு கடின உபதேசமாகவும் காட்சியளிக்கும்.
நமது மூளையிலும், மனதிலும், வாழ்விலும், கிறிஸ்துவின் உபதேசம் நிலைத்திருந்து புரிந்துகொள்ளவேண்டுமாயின் பரிசுத்த ஆவியானவர் வேண்டும்.
எல்லா உபகரணங்களும் பயனுள்ளவைகள்தான்.
ஆனால் ஆவியானவர் மட்டுமே உபதேசத்தை சரியாய் பகுத்து போதிக்கின்றார்.
ஆவியானவரை தன்னில் கிரியை செய்ய இடம் கொடுப்பவர் மட்டுமே புரிந்து கொள்வர்.
கிறிஸ்தவம் எளிமையானது…
கிறிஸ்து எளிமையானவர்…
கிறிஸ்தவ உபதேசம் எளிமையானது.
கிறிஸ்துவில் முழுமனதோடு நுழைந்து பாருங்கள். எல்லாம் வெளிச்சமாகும்.
வெளிச்சத்தில் வெளிச்சம் காணச்செய்வதே ஆவியானவரின் வேலை.
கர்த்தாவே, உம் குமாரன் மூலமாக எங்களை இரட்சித்து எங்களுக்கு உம் ஆவியை தந்து உம்மை அறியவும், உம் குமாரனின் உபதேசத்தை புரிந்து கொள்ளவும் செய்தீரே. உமக்கு நன்றி. தொடர்ந்து ஆவிக்குரியவைகளை ஆவியானவரை கொண்டே புரிந்துகொள்ளும் வழியில் முன்னேறிச் செல்ல உதவிடும்.