ஆபேல் தேவனை எப்படி தொழுது கொண்டார்?
ஒன்றான மெய் சபையிலே பிதாவாகிய தேவனை எப்படிஆவியோடு உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
புதிய ஏற்பாட்டில் எப்படி தொழுது (ஆராதனை) கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பதாக பழைய ஏற்பாட்டில் எப்படி தேவனை உண்மையாக தொழுது கொண்டார்கள் என்பதைக் கற்றுக் கொள்ளுவோம்.
நம்முடைய வேதாகமத்தில் முதல் தொழுது கொள்ளுதலாய் இருக்கிற ஆபேலுடைய தொழுது கொள்ளுதலை குறித்து கற்றுக் கொள்ளுவோம்.
ஆபேல் எப்படி தேவனை எப்படி தொழுது கொண்டார்?
தொழுது கொள்ளுதல் என்றால் தேவனுக்குரியவைகளை மேன்மையாக மதிப்பதாகும்.
காயீனும் ஆபேலும் தங்களுடைய காணிக்கையின் மூலமாக தேவனை தொழுது கொள்ளுவதற்கு வந்தார்கள்
ஆபேல் தேவனை ஆராதனை செய்வதற்கு எப்படிப்பட்ட காணிக்கையை கொண்டு வந்தார்?
Gen 4:4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
- ஆபேல் தேவனுக்குரியவைகளை உயர்வாக மதித்தபடியினால் கொழுமையானவைகளை தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வந்தார்.
- தேவனை தொழுது கொள்ள வேண்டும் என்ற போது ஆபேல் மேன்மையானதை தேவனுக்கு செலுத்த வேண்டும் என்பதை அவர் உணர்ந்து இருந்தார்.
- ஆபேல் தேவனை விசுவாசித்தார் அவரிடத்தில் அவருக்கு பிரியமாக ஆராதிக்க வேண்டும் என்பதற்காக தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்.
- ஆபேல் அவரிடத்தில் பயபக்தியாய் இருக்கிறார் என்பதற்கு அவர் கொண்டு வந்த இந்த காணிக்கையே சாட்சியாக இருக்கிறது.
- நாம் தேவனுக்கு எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்பதற்கு ஆபேல் மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
காயீனும் ஆபேலும் கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வந்த போது தேவன் ஏன் ஆபேலின் காணிக்கையை மாத்திரம் அங்கிகரித்தார்?
அதற்கு என்ன காரணம் என்று பரிசுத்த ஆவியானவர் எபிரெயர் புஸ்கத்தில் சொல்லுவதை கவனியுங்கள்.
Heb 11:4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்;
- தேவனுக்குரியவைகளை உயர்வாக மதித்தபடியினால் ஆபேல் விசுவாசத்தினால் மேன்மையான பலியை செலுத்தினார்.
- காயீன் தேவன் இல்லை என்று சொல்லக்கூடிய மதிகேடன் அல்ல ஆனால் தேவனுக்கு என்று செலுத்தும் போது தேவன் தனக்கு பலன் அளிக்கிறவர் என்று விசுவாசித்து காணிக்கையை செலுத்தவில்லை.
- ஆபேல் தேவனை விசுவாசித்தார் அவருக்கு மிகச்சிறந்த ஒன்றை செலுத்த வேண்டும் என்று தீர்மானித்து விசுவாசத்தோடு மேன்மையான பலியை செலுத்தினார்.
அப்படியென்றால் ஆபேலுக்கு தேவன் மேல் அந்த விசுவாசம் வந்தது எப்படி?
Rom 10:17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
- இந்த வசனத்தை பார்க்கும் போது ஆபேலுக்கு விசுவாசம் தேவனுடைய வார்த்தையிலிருந்து தான் வந்து இருக்கிறது.
ஏனென்றால் தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்தாத பட்சத்தில் தேவனுக்கு அவர்கள் இருவரும் எப்படி காணிக்கை கொண்டு வர முடியும்?
ஆபேலுக்கும் காயீனுக்கும் தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
Rom 10:14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
- ஒருவன் தேவனை தொழுது கொள்ள வேண்டும் என்றால் முதலில் அவன் அவரை விசுவாசிக்க வேண்டும்.
- தேவனை அவன் விசுவாசிக்க வேண்டும் என்றால் முதலில் அவன் அவரைப்பற்றி கேள்விப்பட வேண்டும்.
- தேவனைப் பற்றி அவன் கேள்விப்பட வேண்டும் என்றால் யாராவது ஒருவர்அவரைபற்றி அவனுக்கு பிரசங்கிக்க வேண்டும்.
ஆபேலும் காயீனும் தேவனை தொழுது கொண்டார்களா?
- ஆபேலுக்கும் காயீனுக்கும் தேவனுடைய கட்டளைகள் வெளிப்படுத்தப்பட்டது.
- அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள்.
- தேவனை அவர்கள் தொழுது கொள்ள முயற்சித்தார்கள்.
- ஆனால் ஆபேல் தேவனுடைய கட்டளைகளை உயர்வாக மதித்தப்படியினால் விசுவாசத்தோடு தேவனுக்கு மேன்மையான காணிக்கையைகொண்டு வந்தார்.
ஆபேலை தேவன் புதிய ஏற்பாட்டிலே இயேசு கிறிஸ்துவைக் கொண்டு சொல்லும் போது அவரை நீதிமான் என்று தான் அழைத்து இருக்கிறார்.
Mat 23:35 நீதிமானாகிய ஆபேலின் ,
ஒருவன் தேவனிடத்தில் எப்படி நீதிமான் ஆக முடியும்?
Eze 18:9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- அப்படியென்றால் ஆபேல் தேவனிடத்தில் நீதிமான் ஆனாது எப்படி என்றால் அவர் தேவனுடைய வார்த்தைகளை கேட்டு விசுவாசித்து கீழ்ப்படிந்து மேன்மையான பலியைசெலுத்தினார்.
தேவன் எப்படிப்பட்ட விசுவாசம் இருக்க வேண்டும் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறார்?
Heb 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
- தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
ஆபேல் தேவனை எப்படி ஆராதனை செய்தார்?
தேவனுக்குரியவைகளை (கட்டளைகளை) ஆபேல் உயர்வாக மதித்தார்.
1) தேவன் உண்டென்றும் அவரை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்று ஆபேல் தன் இருதயத்தில்விசுவாசித்து மேன்மையான பலியை செலுத்தினார்.
2) பூமிக்குரிய வகையில் ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்.
தேவன் ஆபேலின் ஆராதனையை (தொழுது கொள்ளுதலை) ஏற்றுக் கொண்டார்.
காயீன் தேவனை எப்படி ஆராதனை செய்தார்?
தேவனுக்குரியவைகளை (கட்டளைகளை) காயீன் உயர்வாக மதிக்கவில்லை.
1) தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்தார் ஆனால் அவரை தேடும் போது அவர் பலன் அளிக்கிறவர் என்று விசுவாசிக்க வில்லை இப்படிப்பட்ட இருதயத்தோடு தான் பலி செலுத்தினார்.
2) பூமிக்குரிய வகையில் நிலத்தின் கனிகளை காணிக்கையாக கொண்டு வந்தார்.
தேவன் காயீனின் ஆராதனையை (தொழுது கொள்ளுதலை) ஏற்றுக் கொள்ளவில்லை.
பழைய ஏற்பாட்டில் அவர் கட்டளையிட்ட பிரகாரம் பூமிக்குரிய பொருள்களோடும் (பலிகள் காணிக்கைகள்) விசுவாசமுள்ள இருதயத்தோடும் ஆராதனை செய்யும் போது தான் தேவன் அந்த ஆராதனையை ஏற்றுக் கொண்டார்
கர்த்தருக்கு சித்தமானால் ஆபிரகாம் தேவனை உண்மையோடு எப்படி தொழுது கொண்டார் என்று கற்றுக் கொள்ளுவோம்