அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டனர்.
when He came to Galilee, the Galileans received Him, having seen all the things He did in Jerusalem at the feast. (John 4:45)
Mt4:23,24; Lk2:42-44; Lk8:39,40; Lk9:51-56; Jn2:13-16; 1The1:5; Ga3:5; Jas2:14-26.
அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்: அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள். (யோவான் 4:45)
மத்தேயு 4:23,24; லூக்கா 2:42-44; லூக்கா 8:39,40; லூக்கா 9:51-56; யோவா2:13-16; 1 தெசலோனிக்கேயர் 1:5; கலாத்தியர் 3:5; யாக்கோபு 2:14-26.
இயேசுவை ஏற்றுக்கொண்ட கலிலேயர்:
4:41 ல் சமாரியர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டனர்.
4:45 ல் கலிலேயர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டனர். இதற்கு முக்கிய காரணம் இயேசு எருசலேமில் செய்த செயல்களேயாகும்.
கிரியைகளும், விசுவாசமும்:
இவற்றில் இரு கோணங்கள் உள்ளன.
1. விசுவாசிக்கிறவர்கள் செய்யும் கிரியைகள். இதில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று நற்கிரியைகள், இன்னொன்று அற்புதங்கள், அடையாளங்கள் ஆகும். மாற்கு 16:17.
2. விசுவாசம் உண்டாகும்படியான கிரியைகள். அற்புதங்கள், அடையாளங்கள் மூலம் இயேசுவை ஏற்றுக்கொள்ளுகின்றனர். சிலர் நற்கிரியைகளைக் கண்டு இயேசுவை பற்றிக்கொள்கின்றனர்.
சுவிசேஷங்களில் இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களும், அடையாளங்களும் பலரை விசுவாசத்துக்குள் கொண்டு வந்ததை அறிகின்றோம்.
அப்போஸ்தலர் நடபடிகளில் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், தேவ பணியாளர்கள் செய்த அற்புதங்கள், அடையாளங்கள் மூலம் சபைகள் உருவாயின என்று பார்க்கின்றோம்.
கிறிஸ்தவம் கிரியைகளை வெளிப்படுத்தும் இயக்கம். தேவனுடைய கிரியைகள் நம்மூலம் வெளிப்படும்படியாகவே தேவன் நம்மை இரட்சித்துள்ளார். நாம் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியை பெற்று, அவருடைய வார்த்தைகளை பிரசங்கிக்கும்போது – சொல்லும்போது – சாட்சி பகரும்போது அற்புதங்கள், அடையாளங்கள் தோன்ற வேண்டும். நமக்குள் அவர் இருக்கிறார் என்பதும், நம்மில் அவரின் வல்லமை உள்ளது என்பதையும் அற்புத கிரியைகளே வெளிபடுத்தும்.
கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கவும், விவிலியத்தில் பற்று உண்டாக்கவும், கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையில் தன்னை இணைத்து கொள்ளவும் தூண்டுகின்ற அற்புத அடையாளங்களும், நற்கிரியைகளுமே ஏறக்குறைய உண்மையான கிரியைகள் ஆகும்.
நாம் கிறிஸ்தவர், கிறிஸ்துவை தரித்தவர், கிறிஸ்துவை கொண்டிருப்பவர் என்பதை வெறும் பேச்சில் மாத்திரமல்ல, கிரியைகளிலும் வெளிப்படுத்துவோமெனில் சபைகள் ஸ்திரபட்டு வளரும்.
கிரியைகளும் விசுவாசத்தைத் தூண்டுகிறது. விசுவாசமும் கிரியைகளைத் தூண்டுகிறது.
நாம் ஆவிக்குரிய வாழ்வில் உயிர் உள்ளவர்களா இல்லையா என்பதை நமது கிரியைகளே வெளிப்படுத்துகிறது.
கர்த்தாவே, நீர் உமது குமாரனின் வார்த்தைகளை அற்புதங்கள், அடையாளங்களை கொண்டு உறுதிப்படுத்தினீர். நீரும் அவரோடிருந்து கிரியை நடப்பித்தீர். இப்பொழுது உம் குமாரனின் இரத்தத்தால் எங்களை மீட்டெடுத்துள்ளீர். எங்களில் உமது குமாரனின் ஆவியை தந்து நீரும் எங்களோடிருந்து துர்க்கிரியைகளின் மத்தியில் நற்கிரியைகள் செய்ய உதவிடும்.