ஒன்றானமெய் சபை என்ன நாமத்தில் எல்லாம் வேதாகமத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது?
சபையைக் குறித்து அநேக சத்தியங்களைக் கற்றுக்கொண்டு வருகிறோம் சபைக்காக கிறிஸ்து என்ன செய்தார் என்பதைக் குறித்து பார்த்தோம்.
அப்போஸ்தலர்களால் அப் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சபை என்ன நாமத்தில் எல்லாம் வேதாகமத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது என்று பார்ப்போம்.
ஒன்றான மெய் சபையானது தேவனுடைய சபை என்று அழைக்கப்படுகிறது.
1Co 1:2 பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும்.
Gal 1:13 தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி.
1Ti 3:15 தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
ஒன்றானமெய் சபையானது தேவனுடைய வீடு என்று அழைக்கப்படுகிறது.
1Ti 3:15 தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்;
1Pe 4:17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது;
மெய்யானசபையானது தேவனுடைய ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
1Co 3:17 தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
2Co 6:16 நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
மெய்யானசபையானது பரிசுத்த ஆவியினுடைய ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
1Co 6:19 . பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்.
Eph 2:21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
மெய்யானசபையானது முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை என்று அழைக்கப்படுகிறது.
Heb 12:23 பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும்,
மெய்யானசபையானது கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்று அழைக்கப்படுகிறது.
Eph 4:12 கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
Eph 4:4 ஒரே சரீரமும்,
மெய்யான சபையானது குமாரனுடைய ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது.
Col 1:13 தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
Rev 1:9 உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய.
மெய்யானசபையானது கிறிஸ்துவின் சபை என்று அழைக்கப்படுகிறது.
Rom 16:16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
சபை ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு கிறிஸ்துவின்சீஷர்கள் (கிறிஸ்தவர்கள்) தங்களை கிறிஸ்துவின் சபையார் என்று தான் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
உலக முழுவதும் உள்ள எல்லா சபைகளும் அந்தந்த பட்டணங்களில் பெயரிலே அழைக்கப்பட்டது,
ஏனென்றால் சபைஸ்தாபிக்கப்பட்டு சுமார் 150 வருடங்கள் வரை எந்த ஒரு பிரிவினை சபைகளும் அப்போது எழும்பவில்லை.
உதாரணமாக
- எபேசு பட்டணத்திலுள்ள சபை
- கொரிந்து பட்டணத்திலுள்ள சபை
- மக்கொதொனியா பட்டணத்திலுள்ள சபை
- பிலிப்புபட்டணத்திலுள்ள சபை
- தெசலோனிக்கேயா பட்டணத்திலுள்ள சபை
- கொலோசெ பட்டணத்திலுள்ள சபை
- லவோதிக்கேயா பட்டணத்திலுள்ள சபை
இப்படிப்பட்ட சபைகள் எல்லாம் மேலே சொன்ன பெயரிலே அழைக்கப்பட்டார்கள்.
- ஆனால் எல்லா சபை விசுவாசிகளும் தங்களை கிறிஸ்துவின் சீஷர்கள் என்றே அழைத்துக்கொண்டார்கள்.
- தங்களை அடையாளப்படுத்துவதற்கு கிறிஸ்துவின் சபை என்று அழைத்துக் கொண்டார்கள்.
பெயரில் மாத்திரம் சபைக்கு தேவனுடைய நாமத்தை அல்லது கிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்துவது மாத்திரம் அது உண்மையான சபையாக இருக்க முடியுமா?
இல்லை அதில் இருக்கக்கூடிய எல்லா உபதேசங்களும் தேவனுடைய மெய்யான சத்தியமாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் அதுமெய்யான சபையாக இருக்க முடியாது.