அப்போஸ்தலனாகிய பவுல் மார்ஸ்மேடையில் என்ன பிரசங்கித்தார்?
ஒன்றான மெய் சபைக் குறித்தும் அந்த சபையிலே ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பிரவேசிக்க முடியும் என்பதை அநேக வேத ஆதாரங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது அப்போஸ்தலனாகிய பவுல் ஒன்றான மெய் தேவனைப் பற்றி அறியாத தங்களை ஞானிகள் என்று சொல்லிக் கொண்ட கிரேக்க தேசத்து மக்களிடத்தில் எப்படி பிரசங்கம் பண்ணினார் என்று கற்றுக் கொள்ளுவோம்.
பவுல் என்ன உபதேசம் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள கிரேக்க தேசத்து ஞானிகள் ஆர்வமாக இருந்தார்கள்.
Act 17:19 அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
Act 17:20 நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.
- கிரேக்கர்கள் தங்களை ஞானிகள் என்று அழைத்து கொண்டார்கள். ஆனால் ஒன்றான மெய் தேவனை அவர்கள் அறிந்து இருக்கவில்லை.
- ஒருவன் தேவனை அறியவில்லை என்றால் தேவன் அவனை மதிகேடன் என்று அழைக்கிறார்.
- கிரேக்கர்கள் தங்களை ஞானிகள் என்று அழைத்துக் கொண்டாலும் தேவனுடைய பார்வையில் அவர்கள் மதிகேடராக தான் இருந்தார்கள்.
கிரேக்கர்கள் அநேக கடவுளை வழிப்பட்டு கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் தேவபக்தியுள்ளவர்களாக இருந்தார்கள் என்று பவுல் சாட்சியிட்டார்.
Act 17:22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
அவர்கள் அறியாத தேவனை தான் அறிவிக்கிறேன் என்று பிரசங்கத்தை பவுல் ஆரம்பித்தார்.
Act 17:23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
- கிரேக்கர்கள் எந்த தேவனை ஆராதனை செய்ய வேண்டும் என்று அறியாமல் ஆராதனை செய்து கொண்டு இருந்தார்கள்.
- அவர்கள் தேவன் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் எந்த தேவன் மெய்யான தேவன் என்பதை அவர்கள் அறிந்து இருக்கவில்லை.
தேவன் தான் மெய்யான சிருஷ்டிகர் என்பதையும் அவர் கைகளினால் கட்டப்பட்ட எந்த ஆலயத்திலும் அவர் வாசம் பண்ணவில்லை என்பதையும் அவர்களுக்கு உணர்த்தினார்.
Act 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
பூமியிலுள்ள வாழக்கூடிய எல்லாரையும் தேவன் தான் போஷிக்கிறார் என்பதையும் அவருக்கு யாரொருவரும் எந்த உதவியும் அவருக்கு செய்ய வேண்டியது இல்லை என்பதையும் போதித்தார்
Act 17:25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
சகல ஜனங்களையும் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் சிருஷ்டித்து இந்த பூமியிலே அவர் தான் குடியிருக்க செய்தார் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
Act 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
தேவன் இவ்வுளவு காரியங்களையும் செய்ததற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அது என்னவென்றால் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் அவரை தடவியாகிலும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்து இருக்கிறார் என்று பிரசங்கித்தார்.
Act 17:27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
- நாம் அவரை தடவி தேடும் போது அவரை நாம் கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடிக்க முடியும்.
- ஏனென்றால் அவர் வெகு தூரத்தில் இல்லை தடவி கண்டுபிடிக்கக்கூடிய தூரத்தில் தான் தேவன் இருக்கிறார்.
கிரேக்க தேசத்து புலவர்கள் தேவனைப் பற்றி சொன்ன காரியங்களை பவுல் மேற்கோள் காண்பித்தார்.
Act 17:28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
பவுல் நாம் தேவனுடைய சந்ததியாராக இருக்கிறோம் என்று போதித்தார்.
பொன், வெள்ளி, கல் இவைகளைக்கு ஒப்பாக தேவன் இருக்க மாட்டார் என்றும் அவர் நம்மை போல் ஜீவனுள்ளவராக இருக்கிறார் என்பதையும் அவர்களுக்கு பவுல் மேற்கோள் காண்பித்தார்.
Act 17:29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
பொன், வெள்ளி, கல் போன்றவைகள் ஒருபோதும் தேவனாக இருக்க முடியாது.
இப்படிப்பட்ட விக்கிரகங்களை அவர்கள் தேவனாக வணங்கி வந்தாலும் அது அறியாமையினால் அப்படி செய்தார்கள் என்றும் ஆனால் இப்போது அவர்கள் மனந்திரும்பும் படி தேவன் கட்டளையிட்டு இருக்கிறார் என்பதையும் போதித்தார்.
Act 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
நியாயத்தீர்ப்பு நாளிலே எல்லாவற்றையும் குறித்து தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதையும் பவுல் அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
இயேசு கிறிஸ்துவை கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பார் என்றும் அதற்கு சாட்சியாக இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்றும் அவரைக் கொண்டு உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்றும் போதித்தார்.
Act 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
பவுல் மரித்தோரின் உயிர்த்தெழுதலை பற்றி போதித்த போது சிலர் பரியாசம் பண்ணினார்கள்.
Act 17:32 மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
Act 17:33 இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான்.
ஆனால் சிலர் தேவனுடைய சுவிசேஷத்தை விசுவாசித்தார்கள்.
Act 17:34 சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.
இவர்கள் எப்படி விசுவாசிகளானார்கள்?
act 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ஞானஸ்நானம் பெற்றவர்கள் தான் விசுவாசிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.
Act 2:44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
- தேவனை எந்த மனிதனும் விசுவாசிக்க முடியும் .ஆனால் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றவர்கள் மாத்திரமே விசுவாசிகள் ஆக முடியும்.