அத்திமரத்தின் கீழ் உன்னை கண்டேன்.

அத்திமரத்தின் கீழ் உன்னை கண்டேன்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். (யோவான் 1:50)

அத்திமரம் குறித்து ஒரு சிறிய பாடம்

– ஆதி மனிதன் தன் செய்த பாவ நிர்வானத்தை மறைக்க அத்தியிலைகளையே பயன் படுத்தினான். ஆதியாகமம் 3:7

– கானான் நாடு அத்திமரங்கள் அடர்ந்த நாடு. எண்ணாகமம் 13:23

– ஆளுகை செய்வதைவிட தன் மூலம் தேவன் எதை செய்ய பணித்தாரோ அதை செய்வதே சிறப்பு. நியாயாதிபதிகள் 9:10,11

– அத்திமர நிழலில் குடியிருப்பது அமரிக்கையான வாழ்வின் பிரதிபலிப்பு. 1இராஜாக்கள் 4:25; மீகா 4:4

– எசேக்கியா இராஜா குணமாக்கபட ஏசாயா தீர்க்கதரிசி அத்திபழத்து அடையையே பயன்படுத்தினான். 2 இராஜாக்கள் 20:7; ஏசாயா 38:21

– காக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமொழிகள் 27:18

– கர்த்தரின் ஆலயம் முன்பதாக வைக்கப்பட்ட அத்திபழ கூடைகள். எரேமியா 24:1f

– அத்திமரத்தின் கீழ் வரவழைக்கப்படும் காலம் உண்டு. சகரியா 3:10

– கனிகொடாத அத்திமரம் பட்டுப்போகும்படி செய்தார். மத்தேயு 21:19

– இயேசு கூறிய அத்திமர உவமை. மத்தேயு 24:32

– நத்தானியேல் தியானம் செய்ய தெரிந்தெடுத்த அத்திமரம். யோவான் 1:48,50

இஸ்ராயேலர்கள் தியானத்திற்காக பயன்படுத்திய மரம் அத்திமரத்தின். The Jewish writings tell of distinguished rabbis who were accustomed to rise early and pursue their studies under the shade of a fig tree. Compare Micah 4:4; Zechariah 3:10.

புனித அகுஸ்தின் சுட்டிகாட்டிய மரம் அத்திமரம். Augustine, in his “Confessions,” relates of himself: “I cast myself down, I know not how, under a certain fig tree, giving full vent to my tears; and the floods of mine eyes gushed out, an acceptable sacrifice to Thee”.

நம்மாழ்வார் கூறியுள்ளது
அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன. இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம். 

மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக பயன்படுத்தலாம்.
மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும். 

அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம்.

இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன. அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

விஞ்ஞானிகள் பழங்களை ஆய்வு செய்து பார்த்ததில் கீழகாணும் சத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன.

மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம். இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும். 

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

அத்திப் பழத்திற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும் சக்தி உண்டு. நன்கு பதப்படுத்தப் பட்ட அத்திப்பழம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற எல்லா மரங்களை விடவும் பறவைகளை ஈர்க்கும் சக்தி அத்தி மரத்திற்கு உள்ளது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.
அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME