நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்.

நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்.

அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். (யோவான் 1:48)

யோவான் 2:24,25; யோவான் 4:16,19; மத்தேயு 6:6; லூக்கா 19:5; 1கொரிந்தியர் 4:5; 1 கொரிந்தியர் 14:25; வெளி 2:18,19; ஆதியாகமம் 32:24-30; சங்கீதம் 139:1,2; ஏசாயா 65:24.

இயேசுவின் அறிதல் மற்றும் காணுதல் முக்கியமானது.

இதன் அடிப்படையில் அவரின் இத்தன்மையை சுவிசேஷங்களின் மூலம் அறியலாம்.

இயேசுகிறிஸ்து
1. மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அறிகிறவர். யோவான் 2:24,25; மத்தேயு 9:4
மனிதன் முகத்தை பார்க்கிறான். அவரோ இருதயத்தை பார்க்கிறார்.

2. மனிதன் அவரிடம் வருமுன்பதாக அவன் நிலையை காணும் காட்சி உடையவர். யோவான் 14:17

3. மனிதன் அடுத்து என்னச் செய்ய போகிறான் என்பதையும் அறிகிறவர். லூக்கா 9:44,45

4. மனிதனின் தலைவிதியையும் அறிகிறவர். மத்தேயு 26:24; மாற்கு 16:21

5. அவரின் முன்னறிவு, பாத்து அறியும் உடனடி அறிவு, ஊடுருவி பார்த்து அறியும் அறிவு ஆகியவைகள் அவரை பின்பற்றுகிறவர்களுக்கும் வரமாக – ஈவாக தருகிறார். Eg.பேதுரு, பவுல்.

எச்சரிக்கையுடன் இருப்போம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME