நீங்கள் அடையாளம், அற்புதம் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள்.
Unless you people see signs and wonders, you will by no means believe. (John 4:48)
Jn2:18; Jn12:37; Jn15:24; Jn20:29; Mt9:28; Mt12:38; Mt16:1; Mt27:42;Mk5:36; Mk8:11; Lk4:23; Lk10:17; Lk16:31; Act2;22; 1Co1:23; Ex7:3; Nu14:11; 2Ki5:11.
அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். (யோவான் 4:48)
யோவான் 2:18; யோவான் 12:37; யோவான் 15:24; யோவான் 20:29; மத்தேயு 9:28; மத்தேயு 12:38; மத்தேயு 16:1; மத்தேயு 27:42; மாற்கு 5:36; மாற்கு 8:11; லூக்கா 4:23; லூக்கா 10:17; லூக்கா 16:31; அப்போஸ்தலர் 2;22; 1கொரிந்தியர் 1:23;யாத்7:3; எண்ணாகமம் 14:11; 2 இராஜாக்கள் 5:11.
விசுவாச குறைவு:
விசுவாச குறைவு வெளிப்பட்ட இடங்கள் எவையென்று புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம்.
– உணவு, உடை, உறைவிடம் நிமித்தம் உண்டாகும் விசுவாச குறைவு. மத்தேயு 6:30
– ஆபத்துகளை கண்டு பயந்துபோகும்போது உண்டாகும் விசுவாச குறைவு. மத்தேயு 8:26
– குறை சொல்லும் இடத்தில் (குறை காணுதல்) உண்டாகும் விசுவாச குறைவு. மத்தேயு 13:58.
– ஓடுகிற ஓட்டத்தில் – தன் சுய முயற்சிகளில் உண்டாகும் எதிர்ப்பைக் கண்டு விசுவாசத்தை இழத்தல். மத்தேயு 14:31.
– குறைவு உண்டானபோது உண்டான தடுமாற்றத்தில் உண்டான விசுவாச குறைவு. மத்தேயு 16:8.
– சாத்தானின் கிரியைகள் மத்தியில் விசுவாசத்தை வெளிபடுத்த இயலாமை. மத்தேயு 17:17,20.
– சந்தேகம் விசுவாசத்தை குறைத்து விடும். மத்தேயு 21:21.
– தூரத்து நிகழ்வுகளை குறித்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாதபடி, உடனடி பிரச்சனைகள் விசுவாசத்தைக் குறைக்கின்றன. லூக்கா 1:20.
– பூமியில் உருவாகிக் கொண்டிருக்கும் விசுவாச குறைவு. லூக்கா 18:8.
– தன் மனதில் உள்ள விருப்பத்துக்கு மாறான உபதேசம் விசுவாச குறைவையே ஏற்படுத்தும். யோவான் 3;12.
– பூமிக்குரிய மகிமையை தேடுதல் விசுவாசத்தை குறைக்கும் செயல். யோவான் 5:44.
– மோசேயை விசுவாசிக்காதை இஸ்ராயேலர்கள் எப்படி கிறிஸ்துவை விசுவாசிக்க கூடும். யோவான் 5:46,47.
– நெருங்கிய உறவுகளில் விசுவாசத்தை உண்டாக்க முடியவில்லை. யோவான் 7:5.
– உண்மையை பேசுவது விசுவாசத்தை உருவாக்கவில்லை. யோவான் 8:45.
– மந்தையின் ஆடுகளாயிராதவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள். யோவான் 10:26.
– சாத்தானின் செயல்கள் விசுவாச குறைவை உண்டாக்கும். அப்போஸ்தலர் 13:8.
– ஏற்கனவே மனதில் பதிந்துபோனவைகளினிமித்தமும், பாரம்பரிய எண்ணங்களினிமித்தமும் விசுவாசம் தடைப்படுகிறது. அப்போஸ்தலர் 14:2; அப்போஸ்தலர் 17:5.
– விசுவாசம் இல்லாதவர்களோடு வாழும் வாழ்க்கை கவனத்துக்குரியது. 1கொரிந்தியர் 7:12-15.
– விசுவாசம் இல்லாதவர்களோடு ஐக்கியபடுதலிலும் கவனம் தேவை. 1கொரிந்தியர் 10:27; 2கொரிந்தியர் 6:15.
– உங்களில் உண்டாகும் விசுவாச குறைவுகளைக் கண்டுபிடிப்பதற்காகவே பாடுகள், குறைவுகள் வைக்கப்பட்டுள்ளது. 2கொரி13:5.
– அவிசுவாசிகளண்டையில் நாம் வாக்கிலும், செயலிலும், பழக்கத்திலும் உண்மையில்லாதவர்களாயிருப்பது விசுவாச குறைவு. 1 தெசலோனிக்கேயர் 4:11.
– தேவனே விசுவாச குறைவுகளை அனுப்புகிறார். 2தெசலோனிக்கேயர் 2:12.
– எல்லாரிடத்திலும் விசுவாசம் இருக்காது. 2தெசலோனிக்கேயர்ச 3:2.
– நல்மனசாட்சியை இழத்தல் விசுவாச குறைவுக்கு கொண்டுபோகும். 1தீமோத்தேயு 1:19.
– பண் ஆசை, ஐசுவரிய மயக்கம் விசுவாச குறைவுக்கு அடித்தளம். 1தீமோத்தேயு 6:10.
– பிசாசுகளின் உபதேசங்கள் இருதயத்தில் கொண்டிருத்தல் விசுவாச குறைவு. 1தீமோத்தேயு 4:1.
– செயலில்லாத விசுவாசம் விசுவாச குறைவை கொண்டு வரும். யாக்கோபு 2:26
– விசுவாசத்தை மறுதலித்தவன் அவிசுவாசியிலும் கெட்டவன். 1தீமோத்தேயு 5:8.
– விசுவாசத்தை விடுதல் வேதனைகளுக்கு வழிவிடுதல் ஆகும். 1தீமோத்தேயு 6:10.
– விசுவாசத்தை இழத்தல் பொல்லாத இருதயத்தின் பிரதிபலிப்பு. எபிரெயர் 3:12.
– விசுவாச குறைவுகள் முடிவில் விசுவாச துரோகத்திற்கு வழிவகுக்கும். 2தெசலோனிக்கேயர் 2:3.
கர்த்தாவே, நீர் எங்களுக்காக யாவையும் செய்திருந்தும் உம்மையும், உம் வார்த்தைகளையும், உம் கிரியைகளையும் நம்பாமல் எங்களுக்குள் நீர் துவங்கிய விசுவாசத்தை இழந்துவிட்டோம். இப்பொழுதும் உம்முடைய இரக்கத்தினால் எங்களில் உள்ள விசுவாசகுறைவுகளுக்கானவைகளை எடுத்துவிட்டு எங்களில் உம் விசுவாசத்தை வர்த்திக்க செய்யும்.