ஆபிரகாம் தேவனை எப்படி தொழுது கொண்டார்? அல்லது ஆராதனை செய்தார்?
ஒன்றான மெய் சபையிலே எப்படி ஆராதனை இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை படித்துக் கொண்டு வருகிறோம்.
ஆபேல் விசுவாமுள்ள இருதயத்தோடும் மேன்மையான பலியோடும் தேவனை தொழுது கொண்ட போது தேவன் அந்த ஆராதனையை ஏற்றுக் கொண்டார்.
காயீன் விசுவாசமில்லாமல் பலி செலுத்தி தேவனைதொழுது கொள்ள முயற்சி செய்தார் அந்த ஆராதனையை தேவன் ஏற்றுக் கொள்ளவில்லை.
இப்போது ஆபிராகம் தேவனை எப்படி தொழுது கொண்டார் என்பதை கற்றுக் கொள்ளுவோம்.
தேவன் ஆபிரகாமின் இருதயத்திலுள்ள விசுவாசத்தை சோதித்து அறிய விரும்பினார்.
Gen 22:1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
தேவன் ஈசாக்கை தகனபலியாக பலிசெலுத்தும்படி ஆபிரகாமுக்கு கட்டளையிட்டார்.
Gen 22:2 அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
ஆபிரகாம் உடனே அந்தகட்டளைக்கு கீழ்ப்படிந்தார்.
Gen 22:3 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
ஆபிராகம் தேவன் சொன்னபடியே ஈசாக்கை பலிபீடத்தின்மேல் கிடத்தி வெட்டுவதற்கு கையை ஒங்கினார்.
Gen 22:10 பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.
ஆபிரகாம் தேவனை எப்படி ஆராதனை செய்தார்?
1) ஈசாக்கை தேவனுக்கு தகனபலியாக செலுத்த வேண்டும் என்கிற விசுவாசமுள்ள இருதயம் இருந்தது.
2) ஆபிரகாம் ஈசாக்கை பலியாக ஒப்புக் கொடுத்தார்.
இந்த தொழுது கொள்ளுதலை தேவன் ஏற்றுக் கொண்டாரா?
Gen 22:11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
Gen 22:12 அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
- தேவன் ஆபிரகாமின் ஆராதனையை ஏற்றுக் கொண்டார்.
- ஆபிரகாம் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற இருதயம் மாத்திரமே அவருக்கு இருந்தது.
ஆபிரகாமுக்கு எப்படிப்பட்ட இருதயம் இருந்தது?
கட்டைகளின் மேல் கிடத்தப்பட்ட ஈசாக் சாம்பலாக தகனபலியாக போனாலும் அந்த சாம்பலில் இருந்து ஈசாக்கை தேவன் உயிர்ப்பிக்க வல்லவராய் இருக்கிறார் என்று முழு நிச்சயமாய் விசுவாசித்து பலிசெலுத்தினார்.
Heb 11:17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
Heb 11:18 ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்தும் எழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
Heb 11:19 தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
ஆபிரகாம் தேவனை இப்படித்தான் ஆராதனை செய்தார்.
- ஆபிரகாம் தேவனை விசுவாசித்து தேவனுடைய கட்டளைகளை உயர்வாக மதித்தார்.
- தேவனுடைய கட்டளைகளை முழு இருதயத்தோடு விசுவாசித்தார்.
- தேவனுடைய கட்டளைகளுக்கு முழு இருதயத்தோடு கீழ்ப்படிந்தார்.
ஆபிரகாமின் ஆராதனை எப்படி இருந்தது?
- விசுவாசமுள்ள இருதயத்தோடும் பூரண நிச்சயத்தோடும் தேவனிடத்தில் சேர்ந்தார்.
- ஈசாக்கை பலியாக ஒப்புக் கொடுத்தார்.
- ஆட்டுக்கடாவை பலி செலுத்தினார்.
நாம் தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும்?
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்து அவரை தேடும் போது பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசித்து தொழுது கொள்ள வேண்டும்.
- நாம் தேவனை ஆராதிக்கும் போது நம்முடைய இருதயம் தேவனிடத்தில் கிட்டி சேர வில்லையென்றாலோ தேவனுடைய கட்டளைகளை உயர்வாக மதிக்கவில்லை என்றாலோ அந்த ஆராதனையை தேவன் ஏற்றுக் கொள்ளுகிறதில்லை.
கர்த்தருக்கு சித்தமானால் இஸ்ரவேலர்கள் எப்படிதேவனுக்கு ஆராதனை செய்தார்கள் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.