மெய்யான

மெய்யான சபையின் அடையாளம் என்ன?

இன்றைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய சபைகளை இரண்டு பிரிவாக பிரித்துக் கொள்ளலாம்.

1) தேவன் ஸ்தாபித்த மெய்யான ஒரே சபை.

2) மனுஷர்கள் ஸ்தாபித்த சபைகள்.

இப்பொழுது கேள்வி என்ன வென்றால் நாம் இந்த இரண்டு பிரிவில் எதில் நாம் இருக்கிறோம் என்பதே.

  • தேவன் ஸ்தாபித்த ஒன்றான மெய் சபையில் நாம் இருந்து தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம்  என்றால் நாம் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள முடியும்.
  • மனுஷர்கள் ஸ்தாபித்த சபையில் நாம் இருப்போம் என்றால் நித்திய ஜீவனை நாம் சுதந்தரித்துக் கொள்ள முடியாது.

தேவன் ஸ்தாபித்த ஒன்றான மெய் சபையைக் குறித்து அநேக சத்தியங்களைக் கற்றுக் கொள்ளுவோம்.

இயேசு கிறிஸ்து தம்முடைய ஊழிய நாட்களில் தம்முடைய அப்போஸ்தலர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்டார்.

Mat 16:13 பின்பு, இயேசுபிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரைநோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு அப்போஸ்தலர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று பாருங்கள்.

Mat 16:14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

அதற்கு இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடத்தில் அடுத்த ஒரு கேள்வியை கேட்டார்.

Mat 16:15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

அப்போதுதான் அப்போஸ்தலனாகிய பேதுரு அதற்கு பதில் சொன்னார்.

Mat 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

  • ஜனங்கள் இயேசுவை தேவனிடத்தில் வந்தவர் என்றும் தீர்க்கதரிசி என்றும் அறிந்து வைத்து இருந்தார்கள்.
  • ஆனால் அப்போஸ்தலர்கள் இயேசுவை கிறிஸ்து (அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜா) என்று அறிந்து வைத்து இருந்தார்கள்.

பேதுரு இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கையிட்ட போது அதை பேதுருவுக்கு வெளிப்படுத்தினவர் பிதாவாகிய தேவன்.

Mat 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

பேதுரு அறிக்கையிட்ட கிறிஸ்து என்ற வார்த்தையை எது வெளிப்படுத்தவில்லை?

Mat 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,.

1) மாம்சமும் 2) இரத்தமும்

மாம்சமும் இரத்தமும் சேர்ந்தது தான் மனுஷிகம்.

கிறிஸ்து என்ற வார்த்தையை மனுஷீகம் (மாம்சமும் இரத்தமும்) வெளிப்படுத்தியதா அல்லது பிதாவாகிய தேவன் வெளிப்படுத்தினாரா?

கிறிஸ்து என்ற வார்த்தையை பேதுருவின் மனுஷீகம் (மாம்சமும் இரத்தமும்) வெளிப்படுத்தவில்லை

கிறிஸ்து என்ற வார்த்தையை பேதுருவுக்கு வெளிப்படுத்தியவர் யார்?

Mat 16:17  பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

  • கிறிஸ்து என்ற வார்த்தையை பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய தேவன் வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்து இந்த நேரத்தில்தான் தம்முடைய சபையைக் கட்டுவேன் என்று வாக்குத்தத்தம் செய்தார்.

Mat 16:18  மேலும், நான்உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

இங்கே இயேசு கிறிஸ்து சபை என்ற வார்த்தையை ஒருமையில் பயன்படுத்துகிறாரா அல்லது பன்மையில் பயன்படுத்துகிறாரா என்று தயவு செய்து பாருங்கள்

ஆங்கிலத்திலும் (கிரேக்க எண்களோடு) கிரேக்கத்திலும் தமிழிலிலும் இந்த வசனத்தை பாருங்கள்

Mat 16:18 (KJV)  And I say also unto thee, That thou art Peter, and upon this rock I will build my church; and the gates of hell shall not prevail against it.

Mat 16:18 (KJV+)  And1161 I say also2504, 3004 unto thee,4671 That3754 thou4771 art1488 Peter,4074 and2532 upon1909 this5026 rock4073 I will build3618 my3450 church;1577 and2532 the gates4439 of hell86 shall not3756 prevail against2729 it.846

Mat 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

கிரேக்கத்தில் பேதுரு (peter) (பெட்ராஸ்) என்றால் சிறிய கல் என்று பொருள்

G4074

Πέτρος

Petros

pet’-ros

Apparently a primary word; a (piece of) rock (larger than G3037); as a name, Petrus, an apostle: – Peter, rock. Compare G2786.

இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்த போது அந்த கல்(பெட்ரா) என்பது கன்மலையாக இருக்கிறது

G4073

πέτρα

petra

pet’-ra

Feminine of the same as G4074; a (mass of) rock (literally or figuratively): – rock.

அப்படியென்றால் இயேசு கிறிஸ்து சிறிய கல்லாகிய பேதுருவின் மேல் தன் சபையைக் கட்டப்போகிறாரா?

அல்லது

பிதாவாகிய தேவன் இயேசுவைக் கிறிஸ்து என்று பேதுரு மூலமாக வெளிப்படுத்தினாரே அந்த கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் தன் சபையைக் கட்டப்போகிறாரா?

ADD YOUR COMMENT

Powered By Indic IME