ஞானி கர்த்தரின் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுவான்
நீதி 1:25-30
மற்ற சீஷர்களை விட கர்த்தர் பேதுருவை தெரிந்து கொண்டு கனப்படுத்தியது ஏன்?
மத்தேயு 10:2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
புதிய ஏற்பாட்டில் மற்றவர்களை விட பேதுரு அதிக தவறுகள் செய்தவராக காணப்பட்டார்
மாற்கு 8:32 இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
மாற்கு 8:33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.
பேதுரு உயர்வானவர் என்பதை மற்ற சீஷர்கள் ஒப்புக் கொள்ளவில்லை
மாற்கு 9:33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
மாற்கு 9:34 அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
பேதுரு எல்லாவற்றையும் செய்வதில் முந்திக் கொள்பவர்
மத்தேயு 14:26 அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
மத்தேயு 14:27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
மத்தேயு 14:28 பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
மத்தேயு 14:29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.
மாம்சத்தின் பேதுரு மிகவும் பலம் வாய்ந்தவர்
யோவான் 21:11 சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
பேதுருவால் நீந்தி செல்ல முடியும்
யோவான் 21:7 ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
சிலுவைக்கு பிறகு பேதுரு மற்ற சீஷர்களை வழிநடத்தினவர்.
யோவான் 21:3 சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
பேதுரு எல்லா நேரத்திலும் சரியான காரியங்களை பேசுகிறவர் அல்ல ஆனால் பொதுவாக முந்தி பேசுகிறவர்
மாற்கு 9:4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
மாற்கு 9:5 அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
Mar 9:6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.
மாற்கு 9:7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
பேதுரு கொஞ்சம் ஞானமுள்ளவரும் கூர்ந்து கவனிக்கக் கூடியவராக இருந்தார்
மாற்கு 11:21 பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
இயேசுவுக்காக மாம்சரீதியான யுத்தத்திற்கு நின்ற ஒரே நபர் பேதுரு
யோவான் 18:10 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
மற்ற அப்போஸ்தலர்களுக்காக பேசக்கூடிய ஒரு நபர் பேதுரு
Mat 18:21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
தான் அன்பும் உண்மையுமாய் இருப்பதற்கு பரிசை பெறும்படி அதற்காக பயம் இன்றி கேட்டவர் பேதுரு
Mat 19:27 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
மற்ற அப்போஸ்தலரைவிட கர்த்தர் பேதுருவை அதிகமாக கனப்படுத்தினார்
இயேசு அழைத்தவர்களில் பேதுரு முதலாவது நபர்
மத்தேயு 4:18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
மத்தேயு 4:19 என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
மத்தேயு 4:20 உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
பேதுரு ஆரம்பத்தில் மிகுந்த தாழ்மையும் ஆழமான புரிந்து கொள்ளுதலும் உள்ள மனிதராக காணப்பட்டார்
Luk 5:8 சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
இயேசுவுடன் அநேக விவாதத்திற்கு சீஷர்களை வழிநடத்தினவர் பேதுரு
மத்தேயு 15:15 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
இயேசுவை கிறிஸ்து என்று அப்போஸ்தலர்கள் அறிக்கையிடும்படி பேதுருவே வழிநடத்தி சென்றார்
மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
மத்தேயு 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
கர்த்தர் இவற்றை ஏன் பேதுருவுக்கு வெளிப்படுத்தினார்?
பேதுரு தாழ்மையுள்ளவராக இருந்தார்
கர்த்தர் மீண்டும் பேதுருவை ஆசீர்வதித்தார்
மத்தேயு 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
அநேகம் நேரங்களில் மற்ற சீஷர்களை விட கர்த்தர் பேதுருவை ஏன் தெரிந்து கொண்டார்?
இரகசியங்களை பாதுகாக்க கூடியவர்களில் பேதுருவும் ஒரு நபர்
மத்தேயு 17:1 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
மத்தேயு 17:9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
பேதுருவை நோக்கி இயேசு அநேக கேள்விகளை கேட்டார்
மத்தேயு 17:26 அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
அநேகர் பின்வாங்கி போன போது நித்திய ஜீவ வசனங்கள் இயேசு கிறிஸ்துவிடம் உண்டு என்று அறிக்கையிட்டவர் பேதுரு
யோவான் 6:66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.
யோவான் 6:67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
யோவான் 6:68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
யோவான் 6:69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
குணமாக்ககூடிய வல்லமையை விசுவாசத்துடன் செய்யக்கூடிய நபர்கள் அவசியமானபோது கர்த்தர் பேதுருவை தெரிந்து கொண்டார்
மாற்கு 5:36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;
மாற்கு 5:37 பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;
மற்ற சீஷர்களுக்கு போதிக்கும்படி இயேசு பேதுருவை தெரிந்து கொண்டார்
யோவான் 21:15 அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
மற்ற சீஷர்களுக்கு தகவல்களை கொடுக்கும் போதும் மற்றவர்கள் இருக்கிறபோதும் இயேசு பேதுருவையே பேர் சொல்லி அழைத்தார்
மாற்கு 16:7 நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
முதல் சுவிசேஷ பிரசங்கத்தை போதித்தவர் பேதுரு
அப்போஸ்தலர் 2:14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
இரத்த சாட்சியாக மரிப்பார் என்று பேதுருவை குறித்து கர்த்தர் சொன்ன போது அதை கேட்டு பயப்படாமல் கிறிஸ்துவை பின்பற்றினார்
யோவான் 21:18 நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Joh 21:19 இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
கர்த்தர் பேதுருவை தெரிந்து கொண்டதில் மிக பலமான ஒரு காரணம் அவர் கடிந்து கொள்ளுதலை ஏற்கக்கூடியவர்
சரியான பாதையில் நாம் செல்லும்படி(வழி நடத்தப்படும்படி) தேவன் வேத வாக்கியங்களை தந்துள்ளார்
2Ti 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
2Ti 4:3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
2Ti 4:4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
பேதுரு கடிந்து கொள்ளப்பட்ட போது அவர் சோர்ந்து போகவில்லை
Mat 14:31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
மற்ற சீஷர்கள் முன்நிலையில் இயேசு பேதுருவை கடிந்து கொண்டார்
Mar 8:33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.
யூதாஸ் கடிந்து கொள்ளப்பட்ட பிறகு பிரதான ஆசாரியரை சந்திக்க போனதுபோல பேதுரு செய்யவில்லை
பேதுரு முதலில் இயேசுவை மறுதலிப்பதைப் பற்றி ஏற்றுக் கொள்ளவில்லை
Luk 22:61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
Luk 22:62 வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
மூன்று முறை மறுதலித்த பிறகு பேதுரு இயேசுவால் கடிந்தகொள்ளப்பட்டதை ஏற்றுக் கொண்டார்
மாம்ச ரீதியான சண்டை செய்யும் போது பேதுரு கர்த்தரின் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொண்டார்
Joh 18:11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
பேதுரு உடனே தனது பட்டயத்தை போடுவிட்டு ஓடிவிட்டார்
பேதுரு அப்போஸ்தலனாகிய பவுலால் கடிந்து கொள்ளப்பட்ட போதும் அந்த கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொண்டார்
Gal 2:11 மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
Gal 2:12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
Gal 2:13 மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
Gal 2:14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
Gal 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
பேதுரு பின்னாளில் பவுலைக்குறித்து எழுதுகையில் நமக்கு பிரியமான சகோதரன் என்று எழுதுகிறார்
2Pe 3:15 மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
2Pe 3:16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
யார் தமது கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அவர்களுக்காக தேவன் வேத வாக்கியத்தை கொடுத்துள்ளார்
2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2Ti 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
தன்னை கடிந்துக்கொள்ளுகிறவனை ஞானமுள்ள மனிதன் அன்பு கூறுவான்
நீதிமொழிகள் 9:7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 9:8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
ஞானமுள்ளவன் கடிந்து கொள்ளப்பட வேண்டும் என்பது தேவனுடைய திட்டமாய் உள்ளது
எசேக்கியேல் 7:3 நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.
எசேக்கியேல் 7:4 ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும்.
எசேக்கியேல் 7:5 ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.
தேவனுடைய கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுவதே உணர்ந்துக் கொள்ளுதலிலும் ஞானத்திலும் வளருகின்ற வழியாக உள்ளது
Pro 15:31 ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
Pro 15:32 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
கடிந்து கொள்ளுதல் சந்தோஷமாய் இருக்காது ஆனால் அது பலனுக்கேதுவானது
நீதிமொழிகள் 17:10 மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
நாம் அதிக பரிசுத்தமுள்ளவர்களாய இருக்கும்படி தேவன் நம்மை கடிந்து கொள்ளுகிறார்
எபிரெயர் 12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
நாம் தேவனுடைய கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளாத போது நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்க முடியாது
எபிரெயர் 12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
எபிரெயர் 12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
நாம் தேவனுடைய கடிந்து கொள்ளுதலை புறக்கணித்தால் நாம் ஒருபோதும் ஞானமுள்ளவர்களாய் இருக்க முடியாது
நீதிமொழிகள் 1:25 என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
நீதிமொழிகள் 1:26 ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
நீதிமொழிகள் 1:27 நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
நீதிமொழிகள் 1:28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
நீதிமொழிகள் 1:29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள்.
நீதிமொழிகள் 1:30 என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள்.
போதகசிட்சையே ஜீவவழியாக இருக்கிறது
நீதிமொழிகள் 6:23 கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
யார் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுகிறானோ அவனை தேவன் கனப்படுத்துவார்
நீதிமொழிகள் 13:18 புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
கடிந்து கொள்ளுதலை நாம் ஏற்றுக் கொள்ளும் போது நாம் ஞானம் அடைகிறோம்
நீதிமொழிகள் 15:5 மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
தம்முடைய கடிந்துகொள்ளுதலை புறக்கணிக்கிறவனை தேவன் அழித்து போடுகிறார்
நீதிமொழிகள் 15:10 வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
மற்ற எல்லா அப்போஸ்தலர்களை விட கர்த்தர் பேதுருவை மிகவும் அதிகமாக கனப்படுத்தினார்
Thank you Brother