இயேசு தன்னுடைய சபையை எந்த கல்லின் மேல் கட்டினார்?
நாம் தொடர்ந்து சபையைக் குறித்த சத்தியங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்
பேதுரு என்றால் அதற்கான அர்த்தம் சிறிய கல் என்று பார்த்து இருக்கிறோம்
G4074
Πέτρος
Petros
pet’-ros
Apparently a primary word; a (piece of) rock (larger than G3037); as a name, Petrus, an apostle: – Peter, rock. Compare G2786.
கிறிஸ்து இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் என்று சொன்ன போது அது கன்மலை என்று கிரேக்க வசனத்தோடு பார்த்து இருக்கிறோம்
Mat 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
G4073
πέτρα
petra
pet’-ra
Feminine of the same as G4074; a (mass of) rock (literally or figuratively): – rock.
இயேசு பேதுருவாகிய சிறிய கல்லின் மீது தன் சபையைக் கட்டாமல் கன்மலை(கிறிஸ்து) என்ற தன் மீது தான் சபையைக் கட்டுவேன் என்றுவாக்குத்தத்தம் செய்தார்
சபை என்ற வார்த்தை கிரேக்கத்தில் எக்ளேசியா என்றும் அதற்கான அர்த்தம் ஒன்றிலிருந்து வெளியே அழைக்கப்பட்டவர்கள் என்றும் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்
இயேசு கிறிஸ்து கன்மலையின் கட்டக்கூடிய அந்த ஒன்றான மெய் சபையை எது மேற்கொள்ளாது.
Mat 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
இயேசுகிறிஸ்து தன் மேல் கட்டின சபையில் யார் இருக்கிறார்களோ அவர்களை தான் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளாது
Joh 11:25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
Joh 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
இயேசு கிறிஸ்து தன் மேல்கட்டின அந்த சபையிலே இருப்பவர்கள் மரித்தாலும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி பிழைப்பார்கள், ஒருபோதும் பாதாளம் அவர்களை மேற்கொள்ளப் போவதில்லை.
- கிறிஸ்து என்ற வார்த்தையைப் பரலோகத்தில் இருக்கிறபிதா வெளிப்படுத்தினார்.
- கிறிஸ்து என்ற இந்த கல்லின்(கன்மலை) மேல் என் சபையை (சபைகளைஅல்ல) கட்டுவேன் என்று இயேசு வாக்குத்தத்தம் செய்தார்.
- இந்த சபையை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளாது.
நாம் மனுஷரால் ஸ்தாபிக்கப்பட்ட சபையிலே நாம் இருப்போம் என்றால் நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் தண்டிக்கப்படுவோம்
மனுஷரால்ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் எல்லாம் பரமபிதா நடாத நாற்றாக இருக்கிறது நியாயத்தீர்ப்பின் நாளில் அந்த நாற்றுக்கு என்ன சம்பவிக்கும்?
Mat 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
- நியாயத்தீர்ப்பின் நாளிலே மனுஷரால் ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் எல்லாம் வேரோடே பிடுங்கப்பட்டு அக்கினிக்கு இரையாக கொடுக்கப்படும்
மனுஷரால் ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் எல்லாம் மணல் மேல் கட்டப்பட்ட வீடாய் இருக்கிறது நியாயத்தீர்ப்பின் நாளில் அந்த வீட்டுக்கு என்ன சம்பவிக்கும்?
Mat 7:26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
Mat 7:27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
- நியாயத்தீர்ப்பின் நாளிலே மனுஷரால் ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் எல்லாம் விழுந்து முழுவதும் அழிந்து போகும்.
மனுஷரால் ஸ்தாபிக்கப்பட்ட சபையிலே இருக்கக்கூடிய விசுவாசிகளுக்கு நியாயத்தீர்ப்பின் நாளிலே என்ன சம்பவிக்கும்?
Mat 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Mat 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
- நியாயத்தீர்ப்பின் நாளிலே இயேசு கிறிஸ்து உங்களை ஒருக்காலும் அறியேன் அக்கிரமச்செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று புறம்பே அவர்களை தள்ளிப் போடுவார்
மனுஷர்களுடைய நாமங்கள் மேல் கட்டப்பட்ட சபை தேவனுடைய மெய்யான சபையாக இருக்கிறதா?
அல்லது
கிறிஸ்து என்ற கன்மலையின் மேல் கட்டப்பட்ட சபை தேவனுடைய மெய்யான சபையாக இருக்கிறதா?