ஜெபத்தின் மூலமாக தேவனை எப்படி ஆராதிக்கிறோம்

ஜெபத்தின் மூலமாக தேவனை எப்படி ஆராதிக்கிறோம்?

ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்.

பாடல் மூலமாக நாம் எப்படி ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக் கொள்ளுகிறோம். அதன் மூலமாக தேவனை தொழுது கொள்ளுகிறோம் என்பதையும் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஆராதனையில் ஒரு பாகமாக இருக்கிற பாடலைக்குறித்துக் கற்றுக் கொள்ளுவோம்.

ஜெபம் யாரிடத்தில் பண்ண வேண்டும்?

1) பிதாவாகிய தேவன்?

2) இயேசு கிறிஸ்து?

3) பரிசுத்த ஆவியானவர்?

4) புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்?

  • நாம் யாரிடத்தில் பண்ண வேண்டும் என்கிற சத்தியம் தெரியாத சூழ்நிலையில் ஜெபிப்போம் என்றால் அந்த ஆராதனை வீணான ஆராதனையாக தான் இருக்கும்.

இயேசு கிறிஸ்து யாரிடத்தில் ஜெபிக்கும்படி தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு கற்றுக் கொடுத்தார்?

Mat 6:9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

பரலோகத்தில் இருக்கிற பிதாவை நோக்கி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

  • இன்றைக்கு அநேகர் பிதாவை நோக்கி ஜெபிப்பது இல்லை. அநேகர் இயேசு கிறிஸ்துவை நோக்கியும் பரிசுத்த ஆவியானவரை நோக்கியும் மரியாளை நோக்கியும் ஜெபித்து கொண்டு இருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து யாரிடத்தில் ஜெபித்தார்?

Joh 17:2 பிதாவே, வேளை வந்தது…..

Joh 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் …

Joh 17:11 ,,,,, பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

Joh 17:25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை,

பரலோகத்தில் இருக்கிற பிதாவை நோக்கி தான் அவர் ஜெபித்தார்.

  • இன்றைக்கு அநேகர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் எந்த வேதவாக்கியங்களும் இயேசு கிறிஸ்துவிடத்தில் ஜெபிக்க வேண்டும் என்று போதிப்பதில்லை.

நாம் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதினாலே நாமும் பிதாவிடம் தான் ஜெபிக்க வேண்டும்.

1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மூலம் பிதாவினிடத்தில் ஜெபிக்க வேண்டும்.

Jam 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

Joh 16:23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

Joh 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்.

Joh 14:13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

Joh 14:14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.

  • நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிதாவினிடத்தில் கேட்கும்போது சந்தோஷம் நிறைவாயிருக்கும் படி நாம் பெற்றுக் கொள்ளுவோம்.

இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மூலம் பிதாவினிடத்தில் ஜெபிக்கும் போது பிதா நல்ல ஈவுகளை நமக்கு கொடுக்கிறார்.

Col 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

Jam 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

நாம்ஜெபத்தின் மூலமாக தேவனிடத்தில் சேரும் போது நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக குற்றமற்றதாக  இருந்தால் தான் தேவன் அந்த ஜெபத்தை கேட்பார்.

1Jo 3:20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.

1Jo 3:21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,

1Jo 3:22 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

  • நாம் தேவனிடத்தில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜெபித்து ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஜெபிக்கும் போது நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருக்க வேண்டும்.
  • நாம் அவருடைய கற்பனைகளை கைக் கொண்டு அவருக்கு முன்பாக பிரியமானவைகளை செய்ய வேண்டும், அப்போது நாம் தேவனிடத்தில் தைரியம் கொண்டிருந்து அவராலே பெற்றுக் கொள்ளமுடியும்.

இயேசுகிறிஸ்து மூலமாய் தான் தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும்.

Rom 1:8 … நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Heb 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

நாம் இயேசு கிறிஸ்து மூலமாய் தான் தேவனிடத்தில் சமாதானம் பெற்று இருக்கிறோம்.

Rom 5:1 …. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

Rom 16:27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • நீங்கள் நேரடியாக பிதாவினிடத்தில் ஜெபித்தால் ஒன்றும் கிடைக்காது.
  • நீங்கள் நேரடியாக இயேசுகிறிஸ்துவினிடத்தில் ஜெபித்தாலும் ஒன்றும் கிடைக்காது.

இயேசுகிறிஸ்து மூலமாய் நீங்கள் பிதாவினிடத்தில் ஜெபிக்கும் போது பிதா அந்த ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார்.

Joh 16:23 ,,,, நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

ஆராதனையில் இயேசுகிறிஸ்துவிடம்  ஜெபம் செய்வோம் என்றால்  அல்லது பரிசுத்த ஆவியானவரிடத்தில் ஜெபம் செய்வோம் என்றால்  அந்த ஆராதனை தேவனுக்கு முன்பாக வீணான ஆராதனையாகதான் இருக்கும்.

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

நீங்கள் செய்யக்கூடிய ஆராதனையில் யாரிடத்தில் ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

Mat 15:3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?

Mat 15:6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

இயேசு கிறிஸ்து மூலமாய் பிதாவினிடத்தில் ஜெபிக்காத எந்த ஜெபமும் எந்த ஆராதனையும் வீணான ஆராதனையே.

தேவனுக்கு சித்தமானால் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுதலை குறித்து இன்னும் அதிக சத்தியங்களைக் கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME