இஸ்ரவேலர்கள் தேவனுக்கு எப்படி ஆராதனை செய்தார்கள்

இஸ்ரவேலர்கள் தேவனுக்கு எப்படி ஆராதனை செய்தார்கள்?


ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம்.

ஆபிரகாம் எப்படி தேவனை தொழுது கொண்டார் என்பதைக் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இஸ்ரவேலர்கள் எப்படி தேவனை ஆராதனை செய்தார்கள் என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்ளுவோம்.

தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவை ஆசாரிக்கும்படி கொடுத்து இருந்தார்.

பஸ்கா எந்த தேதியில் ஆசாரிக்க வேண்டும்?

Num 28:16 முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.

பஸ்காவின் ஆடு எப்படி இருக்க வேண்டும்?

Exo 12:5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.

பஸ்கா ஆட்டுக்குட்டியை எப்போது அடிக்க வேண்டும்?

Exo 12:6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை என்ன செய்ய வேண்டும்?

Exo 12:7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

பஸ்கா ஆட்டுக்குட்டியை  எதனோடு புசிக்க வேண்டும்?

Exo 12:8 அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

Exo 12:9 பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.

பஸ்கா ஆட்டுக்குட்டியை எப்படி புசிக்க வேண்டும்?

Exo 12:11 அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.

பஸ்கா ஆட்டிக்குட்டியின் இறைச்சி மீதியானதை என்ன செய்ய வேண்டும்?

Exo 12:10 அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம் மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.

பஸ்கா ஆட்டுக்குட்டியை எங்கே புசிக்க வேண்டும்?

Exo 12:46 அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; 

பஸ்காவின் எலும்புகளை என்ன செய்யக்கூடாது?

Exo 12:46  அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.

இந்த பஸ்காபண்டிகையின் ஆராதனையையும் இஸ்ரவேலர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

Exo 12:24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

Exo 12:25 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

Exo 12:26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,

Exo 12:27 இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

  • இந்த எல்லா கட்டளைகளையும் செய்வதற்கு இஸ்ரவேலர்களுக்கு உண்மையுள்ள இருதயம் தேவையாக இருந்தது அந்த உண்மையுள்ள இருதயத்தோடு தான் அவர்கள் தேவனிடத்தில் சேர வேண்டும்.

இஸ்ரவேலர்கள் பஸ்கா ஆராதனையை எப்படி ஆசாரிக்க வேண்டும்?

தேவனுக்குரிய எல்லாவற்றையும் (கட்டளைகள்) உயர்வாக மதிக்க வேண்டும்.இஸ்ரவேலர்கள் தேவனுக்கு எப்படி ஆராதனை செய்தார்கள்?

  • விசுவாசமுள்ள இருதயம்.
  • பஸ்கா ஆடு, கசப்பான கீரை, புளிப்பில்லா அப்பம்.
  • இஸ்ரவேலர்கள் இந்த ஆராதனையை ஆசாரிக்கும் போது தேவன் என்ன கட்டளையிட்டு இருக்கிறாரோ அதன் படியாக தான் ஆசாரிக்க வேண்டும்.
  • இஸ்ரவேலர்கள் தேவனுடைய கட்டளையை மீறி ஆசரிக்கும் போது தேவன் அவர்களை புறம்பே தள்ளிப்போடுவார்.

இஸ்ரவேலர்கள் பஸ்கா ஆராதனையில் ஒரு கட்டளையை மீறினால் அந்த ஆராதனையை தேவன் ஏற்றுக் கொள்ளுவாரா?

Exo 12:43 மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

Exo 12:19 ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.

தேவன் கட்டளையிட்டபடி ஆராதனை செய்யாமல் ஏதாவது ஒன்றை மீறி ஆராதனை செய்தாலும் தேவன் அந்த ஆராதனையை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME