இஸ்ரவேலர்கள் செய்த வீணான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா

இஸ்ரவேலர்கள் செய்த வீணான ஆராதனையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்.

வீணான ஆராதனை என்ன என்பதைக் குறித்து வேதவாக்கியங்களோடு  கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

எது வீணான ஆராதனைக்குறித்து சில உதாரணங்களைக் கற்றுக் கொள்ளுவோம்.

இஸ்ரவேலர்கள் எப்படி தேவனுக்கு வீணான ஆராதனையை தேவனுக்கு செய்தார்கள்.

மோசே தேவனுடைய பிரமாணத்தை வாங்குவதற்கு சீனாய் மலைக்கு போய் இருந்த போது அவர் வர தாமதமான போது இஸ்ரவேல் ஜனங்கள் என்ன சொன்னார்கள்?

Exo 32:1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு பொய்யான தேவனை உருவாக்கினார்கள்.

அவர்கள் சொன்னபடி ஆரோன்  அவர்கள் பொன் ஆபரணங்களை வாங்கி பொன் கன்றுக் குட்டியை செய்து கொடுத்தார்.

Exo 32:4 அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். 

இது முழுவதும் பொன்னால் செய்யப்பட்ட இந்த கன்று குட்டி எவ்வளவு அழகாய் பிரமிப்பாய் இருங்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதை பார்த்த போது அவர்கள்  இப்படித்தான் சொன்னார்கள்.

Exo 32:4 …. அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

அந்த பொய்யான தேவனுக்கு(கன்றுக்குட்டி) பலிபீடத்தையும் ஏற்படுத்தினார்கள்.

Exo 32:5 ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, 

  • அந்த பொய்யான தேவனுக்கு முன்பதாக ஆரோன் ஒரு பலிபீடத்தையும் கட்டிவிட்டார்.

அந்த பொய்யான தேவனுக்கு பண்டிகையையும் ஆரோன் அறிவித்தார்.

Exo 32:5 …. நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

அந்த பொய்யான தேவனுக்கு ஜனங்கள் பலியிட்டு பண்டிகை கொண்டாடினார்கள்.

Exo 32:6 மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள்  சர்வாங்க தகனபலிகளையிட்டு சமாதானபலிகளை செலுத்தி ஆராதனை செய்த போது தேவன் இந்த தொழுது கொள்ளுதலை(ஆராதனையை) ஏற்றுக் கொண்டாரா?

இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தேவனுக்கு தான் பலியிட்டு ஆராதிக்கிறோம் என்று நினைத்தார்கள்.

தேவன் இந்த ஆராதனையைப் பற்றி என்ன சொன்னார்.

Exo 32:7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.

தேவன் உன் ஜனங்களை தங்களை கொடுத்து கொண்டார்கள் என்று மிகுந்த கோபத்தோடே சொன்னார்

Exo 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

தேவன் அவர்களை அழித்து போடும் அளவுக்கு கோபமானார். வசனத்தை பாருங்கள்.

Exo 32:9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள்.

Exo 32:10 ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

தேவன் இஸ்ரவேல் ஜனங்களை அழித்து போடும் அளவுக்கு கோபப்பட்டதற்கு காரணம் என்ன?

  • பொய்யான தேவன் (கன்றுக்குட்டி).
  • பொய்யான ஆராதனை (சர்வாங்க தகனபலி சமாதான பலி).
  • பொய்யான பண்டிகை நாள் (ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்).

இஸ்ரவேலர்கள்  தேவனுடைய கட்டளையின்படி தேவனை ஆராதித்தார்களா?

இல்லை அவர்கள் தேவனுடைய கட்டளைக்கு விரோதமாக வீணான ஆராதனை செய்தார்கள்.

புதிய ஏற்பாட்டில் பிதாவாகிய தேவனை  அவருடைய கற்பனையின்படி அவரை ஆராதிக்காமல் மனுஷருடைய கற்பனையின்படி ஆராதிப்போம் என்றால் அந்த ஆராதனையை அவர் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

இது எல்லாம் மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்டஒன்று.

Mat 15:6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

Mat 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து:

Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

  • மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து செய்யக்கூடிய வீணானஆராதனையை தேவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து வீணான ஆராதனையைக் குறித்து சில உதாரணங்களை கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME