எந்த ஒரு மனுஷனையும் வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது தூஷிக்காதீர்கள்

எந்த ஒரு மனுஷனையும் வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது தூஷிக்காதீர்கள்

உலகத்தாருக்கு உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

உலகத்திலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட நாம் உலகத்தார் செய்யக்கூடிய துர்க்கிரியைகளை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

உலகத்தாரைப் போல கிறிஸ்தவர்களும் தங்களுக்கு பிடிக்காதவர்களை வார்த்தைகளினாலும் கிரியைகளினால் தூஷிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட காரியங்கள் தேவனுக்கு பிரியமாய் இருக்குமோ என்று என்றைக்காவது நாம் சிந்தித்து பார்த்து இருக்கிறோமா?

இதற்கு காரணம் என்ன?

யாக்கோபு 4:1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?

  • நம்முடைய அவயவங்களில் போர் செய்கிற இச்சைகள் தான் நாம் பிறரை தூஷிக்கிற அளவுக்கு நம்மை கொண்டு போகிறது.
  • எத்தனை பேர் பவுலைப் போல நம்முடைய சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படித்த முயற்சி செய்கிறோம்.
  • அப்படி செய்யாதபட்சத்தில் நாம் இந்த பாவத்திலிருந்து ஒருபோதும் மீண்டு வெளியே வர முடியாது.

எந்தவொரு மனுஷனையும் நாம் தூஷிக்கக்கூடாது. ஏனென்றால் நாம் ஒவ்வொரு வரும் தேவனுடைய சாயலின் படி சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறோம்.

ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

நாம் ஒரு மனிதனை தூஷிக்கும் போது அந்த மனிதன் தேவனுடைய சாயலாய் இருக்கிறான். அப்படியென்றால் நாம் யாரை தூஷித்து கொண்டு இருக்கிறோம் என்பதை சிந்தித்து பாருங்கள். ஆம் அந்த மனிதனை உண்டாகின தேவனை தூஷித்துக் கொண்டு இருக்கிறோம்.

நாம் ஒரு மனுஷனை மோசமான வார்த்தைகளினால் சபிக்கின்றபோதும், தூஷிக்கின்ற போதும் தேவனை தான் சபித்து தூஷிக்கிறோம்.

யாக்கோபு 3:9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

  • ஒரு மனிதனை சபித்துக் கொண்டு என்றால் நாம் தேவனை சபித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • தேவனை நாம் சபித்து நாம் எப்படி நித்திய ஜீவனை பெற முடியும்.

ஏழைகளையும், உடல் பெலவீனமானவர்களையும் நிந்திக்கின்ற போது அவர்களை உண்டாக்கின தேவனை தான் நிந்திக்கிறோம்.

நீதிமொழிகள் 14:31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;….

யாத்திராகமம் 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

  • நாம் தரித்திரனை ஒடுக்கும் போது அவனை உண்டாக்கின தேவனை நிந்திக்கிறோம்.
  • ஊமையனையும், செவிடனையும், குருடனையும் நாம் நிந்திக்கும் போது தேவனை நிந்திக்கிறோம் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

பிறரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.

நீதிமொழிகள் 14:21 பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்…

  • நாம் எந்த மனிதனையும் அவமதிப்பதற்கு தேவன் நமக்கு அனுமதி கொடுப்பதில்லை. அப்படி செய்கின்ற போது அது பாவமாக இருக்கிறது.

நாம் தேவனுடைய சாயலின் படி சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதினால்தான் ஒருவருக்கொருவர் கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ள வேண்டும்.

ரோமர் 12:10 ,,,,, கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

நாம் சண்டையிட்டு ஏன் மனுஷனுடைய இரத்தத்தை சிந்தக்கூடாது?

ஆதியாகமம் 9:6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

  • நாம் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதினால் தான் மனுஷர்களுடைய ரத்தம் சிந்தும்படியாக யாரையும் காயப்படுத்துக் கூடாது

நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  • நாம் யாரையாவது வார்த்தைகளினால் தூஷிக்கும் போது அதற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே நாம் பேசின ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கணக்கு கொடுக்க வேண்டும்.

நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும்தான் நாம் நீதிமானா அல்லது குற்றவாளியா என்று நியாயந்தீர்க்கும்.

மத்தேயு 12:37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது  தூஷிக்கிறவர்களின் இருதயத்தில் என்ன பொக்கிஷம் இருக்கிறது?

மத்தேயு 12:35 ,,,, பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

  • நம் இருதயத்தில் பொல்லாத பொக்கிஷம் இருக்கும் என்றால் வெளிவரக்கூடிய எல்லாம் பொல்லாதவைகளாக தான் வரும்.
  • பொல்லாத பொக்கிஷங்கள் உங்கள் இருதயத்தில் இருக்கும் என்றால் அது உங்களுடைய ஆவிக்குரியகாரியங்களை அழித்து போட்டு விடும்.

இப்படிப்பட்ட நபர்கள் என்ன மரமாக என்ன கனியாக இருக்கிறார்கள்?

மத்தேயு 12:33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

மத்தேயு 12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

  • கெட்ட மரத்திலிருந்து நல்ல கனிகளை நாம் எதிர்பார்க்க முடியாது. அது போல கெட்ட மனிதனிடமிருந்து வரக்கூடிய காரியங்கள் எல்லாம் கெட்ட காரியங்களே வெளிப்படும்.
  • அப்படிப்பட்டவர்கள் பொல்லாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளும் அவர்களுடைய கிரியைகளும் பொல்லாதவைகளாக தான் இருக்கும்.

ஒரு நபர் தேவனுடைய சத்தியத்தை சத்தியமாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

கலாத்தியர் 6:1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.

2தெசலோனிக்கேயர் 3:14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

2தெசலோனிக்கேயர் 3:15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.

  • தேவனுடைய சத்தியத்தை மீறி நடக்கிற விசுவாசியை சாந்தமுள்ள ஆவியோடே போதித்து அவர்களை சீர்பொருந்த பண்ண வேண்டும்.
  • அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படியாமல் போனால் அவனைக் குறித்துக் கொண்டு அவனோடு கலவாதிருக்க வேண்டும்.
  • ஆனாலும் அவனுக்கு தொடர்ந்து புத்தி சொல்ல வேண்டும்.
  • அவர்களை ஒருபோதும் நாம் தூஷிக்கக் கூடாது.

தேவனுடைய சத்தியத்தை புரட்டுகிற வேத புரட்டர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.

தீத்து 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.

  • வேத புரட்டர்களுக்கு இரண்டொருதரம் புத்தி சொல்ல வேண்டும். அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்களை விட்டு விலக வேண்டும்.
  • அவர்களையும் நாம் ஒருபோதும் தூஷிக்கவோ, பரியாசம் செய்யவோ கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு தேவன் ஆக்கினை தீர்ப்பை வைத்து இருக்கிறார்.

நாம் பக்திவிருத்திக் கேதுவான நல்ல வார்த்தைகளை மாத்திரமே பேச வேண்டும்.

எபேசியர் 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

எபேசியர் 4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.

எபேசியர் 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

  • பக்திவிருத்திக்கு ஏதுவல்லாத வார்த்தைகள் எல்லாம் கெட்ட வார்த்தைகளாக தான் இருக்கிறது.
  • நாம் தொடர்ந்து தேவனுடைய கிரியைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
  • தேவனைப் போல பூரண சற்குணராக இருக்க வேண்டும்.

நமக்கு விரோதமாக யார் எழும்பி தூஷித்தாலும் மோசமான வார்த்தைகளினால் சபித்தாலும்  நாம் செய்ய வேண்டியது இது தான்.

மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

மத்தேயு 5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

  • நாம் சத்துருவினிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். நம்மை சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களும் தேவனுடைய சாயலின்படி சிருஷ்டிக்கப்பட்டு ர்கள்.
  • நம்மை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
  • நம்மை நிந்திக்கிறவர்களுக்காகவும் நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

நாம் தேவனுடைய இந்த வார்த்தைகளின் படி செய்யும் போது பிதாவுக்கு நாம் புத்திரராயிருப்போம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME