இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்?

இயேசு கிறிஸ்து எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதைப் பற்றி சத்தியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசிக்கவில்லை என்றால் அவன் கிறிஸ்தவனாய் இருப்பதினால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.

பூமியில் உயிரோடு எழுப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்து  உயிர்த்தெழுந்தற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

கிறிஸ்து உயிர்த்தெழுதலில் முதற்பலனாக இருக்கிறார்.

1கொரிந்தியர்15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

Col 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

  • பழைய ஏற்பாட்டில் இரண்டு பேர் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறார்கள்.
  • புதிய ஏற்பாட்டில்இயேசு கிறிஸ்து சிலரையும் அப்போஸ்தலர்கள் சிலரையும்  உயிரோடு எழுப்பி இருக்கிறார். .ஆனால் இவர்கள் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பலனானவர்கள் இல்லை.
  • ஏனென்றால் அவர்கள் மாம்சத்தில் மரித்தார்கள் மாம்சத்தில் உயிரோடு எழுப்பப்பட்டார்கள் பிற்பாடுஅவர்கள் மரித்து போய் விட்டார்கள்.
  • ஆனால் உயிர்த்தெழுந்த  கிறிஸ்து இனிமரிப்பதில்லை. ஏனென்றால் அவருடைய பூமிக்குரிய சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மறுரூபமடைந்து தான் அவர் உயிர்த்தெழுந்தார், அதனால் தான் மரித்தோலிருந்து எழுந்த முதற்பலனாக இருக்கிறார்.

லாசரு எந்த சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்?

  • பூமிக்குரிய மேனியோடு விதைக்கப்பட்டார் பூமிக்குரிய மேனியோடு உயிர்த்தெழுந்தார். (1கொரிந்தியர் 15:40)
  • அழிவுள்ளதாய் விதைக்கப்பட்டார் . அழிவுள்ளதாய் எழுப்பப்பட்டார்.     (1கொரிந்தியர்15:42)
  • கனவீனமுள்ளதாய் விதைக்கப்பட்டார். கனவீனமுள்ளவராய் எழுப்பப்பட்டார். (1கொரிந்தியர்15:43)
  • பலவீனமுள்ளவராய் விதைக்கப்பட்டார் பலவீனமுள்ளவராய் தான் உயிர்த்தெழுந்தார் (1கொரி 15:43)
  • ஜென்ம சரீரத்தில் விதைக்கப்பட்டார் ஜென்மசரீரத்தில் உயிர்த்தெழுந்தார் (1கொரி 15:44)

இயேசு கிறிஸ்து எந்த சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்?

  • பூமிக்குரிய மேனியோடு விதைக்கப்பட்டு ஆவிக்குரிய மேனியோடு உயிர்த்தெழுந்தார் (1கொரி 15:40)
  • அழிவிள்ளதாய் விதைக்கப்பட்டார் அழிவில்லாததாய் எழுப்பப்பட்டார் (1கொரி15:42)
  • கனவீனமுள்ளவராய் விதைக்கப்பட்டார் மகிமையுள்ளவராக எழுப்பப்பட்டார் (1கொரி15:43)
  • பலவீனமுள்ளவராய் விதைக்கப்பட்டார் பலமுள்ளவராய்எழுப்பப்பட்டார் (1கொரி15:43)
  • ஜென்ம சரீரத்தில் விதைக்கப்பட்டார் ஆவிக்குரியசரீரத்தில் உயிர்த்தெழுந்தார் (1கொரி 15:44)

விதைசெத்தால் தான் ஒரு புதிய மேனி கிடைக்கிறது அது போல ஆவிக்குரிய உயிர்த்தெழுதலும் அப்படியே தான் இருக்கிறது.

1கொரிந்தியர்15:36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

1கொரிந்தியர் 15:37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.

சகலத்திற்கும் தேவன் தான் மேனியை கொடுக்கிறார்

1கொரிந்தியர் 15:38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சம் அல்ல.

1கொரிந்தியர் 15:39 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

மேனிகளில் வித்தியாசங்கள் உண்டு

1Co 15:40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

எல்லா மகிமையும் ஒரே விதமான மகிமை அல்ல

1கொரிந்தியர் 15:41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

அதேபோல் தான் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் இருக்கும்.

Co 15:42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்

  • கிறிஸ்து வரும் போது நம்முடைய சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மறுரூபமாகும்.
  • மரித்தவர்களும் ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிர்த்தெழுவார்கள்.
  • கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தின் உயிர்த்தெழுதலில் முதற்பலனானவர்.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கிறிஸ்து எப்படி ஆவிக்குரிய உயிர்த்தெழுதலை பெற்றுக்கொண்டார் என்று பார்ப்போம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME