லவோதிக்கேயா சபை வெதுவெதுப்பான சபை

லவோதிக்கேயா சபை : வெதுவெதுப்பான சபை

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன?

ஆறு சபைகளைக் குறித்த சத்தியங்களை நாம் கற்றுக்
கொண்டு இருக்கிறோம்.

இப்போது லவோதிக்கேயா சபையைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்,

கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?

வெளி3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

கிறிஸ்து எப்படி இருக்கிறார்?

  • உண்மையுள்ள சாட்சி சத்தியமுமுள்ள (விசுவாசமுள்ள) சாட்சி.
  • தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் (மூலக்காரணர் கிரேக்க வேதாகமத்தில் அப்படித்தான் இருக்கிறது).
  • இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடை பின்பற்றும் இந்த லவோதிக்கேயா சபையார் உண்மையும் விசுவாசமுள்ள சாட்சியாக இருக்கவில்லை.
  • இந்த வார்த்தையைக் கொண்டு அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் போது அவர்கள் நிச்சயம் கிறிஸ்துவைப் போல் இருக்க வேண்டும் என்று உணர்ந்து இருக்க வேண்டும்.

லவோதிக்கேயா சபையார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்து கொண்டு இருந்தார்கள்.

1) தேவன்

2) உலகம் (உலகப் பொருள்)

  • லவோதிக்கேயர்கள் தேவனுக்கும் உலகபொருளுக்கும் ஊழியம் செய்து கொண்டு இருந்தார்கள்.
  • அவர்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்து கொண்டு இருந்தார்கள்.

இரண்டு எஜமான்களுக்கு ஒரு கிறிஸ்தவன் ஊழியம் செய்ய கூடாது.

லூக்கா 16:13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

லவோதிக்கேயர்கள் இப்படி இருக்கிறபடியால் அவர்களை வாந்திப் பண்ணிப் போடுவேன் என்று கிறிஸ்து எச்சரித்தார்.

வெளி 3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

லவோதிக்கேயா சபையார் உள்ளான மனுஷனில் அவர்கள் எப்படி இருந்தார்கள்?

வெளி 3:17 நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

தேவனுடைய பார்வையில் அவர்கள் எப்படி இருந்தார்கள்?

  • நிர்ப்பாக்கியமுள்ளவன்
  • பரிதபிக்கப்படத்தக்கவன்
  • தரித்திரன்
  • குருடனும்
  • நிர்வாணியும்

லவோதிக்கேயர்கள் தங்களுடைய பார்வையில் எப்படி இருந்தார்கள்?

  • ஐஸ்வர்யவான்
  • திரவியசம்பன்னன்
  • எனக்கு ஒரு குறைவுமில்லை

இன்றைக்கும் அநேகர் புறம்பான மனுஷனைக் கொண்டுதான் தங்களை தீர்ப்பு செய்து கொள்ளுகிறார்கள்.

மனுஷன் முகத்தை பார்ப்பான் தேவனோ அவனுடைய இருதயங்களை ஆராய்கிறவர்.

லவோதிக்கேயர்கள் ஆவிக்குரிய ரீதியில் குணப்படும்படி அவர்களுக்கு கிறிஸ்து ஆலோசனைக் கொடுத்தார்.

வெளி 3:18 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

1) புடமிடப்பட்ட பொன் – தேவனுடைய வார்த்தை

2) வெண் வஸ்திரம்    – நீதி (தேவனுடைய வார்த்தை)

3) கலிக்கம்                     – தேவனுடைய வார்த்தை

மேலே சொன்ன காரியங்களுக்கு அநேக வேத வசனங்கள் ஆதாரமாக இருக்கிறது

சங்கீதம் 119:140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

சங்கீதம் 119:172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

சங்கீதம் 19:8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.

தேவன் தம்முடைய பிள்ளைகளை கடிந்து கொண்டு தான் சிட்சிக்கிறார்

வெளி 3:19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

எதற்காக தேவன் நம்மை கடிந்து கொண்டு சிட்சிக்கிறார்?

நாம் ஜாக்கிரதையாக இருந்து மனந்திரும்புவதற்கு தான்.

நமக்கு தேவனுடைய கடிந்து கொள்ளுதல் கிடைக்கவில்லையென்றால்?

எபிரெயர் 12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

எபிரெயர் 12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

  • நாம் தேவனுடைய சிட்சையை சகித்துக் கொள்ளுவோம் என்றால் தேவனுடைய புத்திரராய் இருக்கிறோம். ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நாம் வேசியின் பிள்ளைகளாய் இருக்கிறோம்.
  • தேவன் சிட்சையின் மூலமாக தான் நம்மை பூரணராக்குகிறார்.

லவோதிக்கேயர்கள் கிறிஸ்துவின் இந்த சத்தியத்திற்கு செவி கொடுப்பார்கள் என்றால் அவர்கள் கிறிஸ்துவோடு ஐக்கியமாய் இருக்கிறார்கள்.

வெளி 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

லவோதிக்கேயர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிந்து ஜெயங் கொண்டால் என்ன கிடைக்கும்?

வெளி 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

இந்த சத்தியம் லவோதிக்கேயர்களுக்கு மாத்திரம் தானா?

வெளி 3:22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

  • தேவனுடைய சத்தியத்தை கேட்கக்கூடிய ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இந்த சத்தியம் கட்டளையிடப்பட்டு இருக்கிறது.

பாடம்: தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் நாம் ஊழியம் செய்யக்கூடாது அப்படி நாம் இருக்கிற பட்சத்தில் கிறிஸ்து நம்மை வாந்திப்பண்ணிப் போடுவார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME