ரெவரெண்ட் (REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா

ரெவரெண்ட் (REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா?

இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அநேகர் தங்களை ரெவரெண்ட் என்று அழைத்துக் கொள்ளுவதை பெருமையாக கருதுகிறார்கள்.

இந்த பட்டங்களை கொடுப்பதற்கு கிறிஸ்தவத்தில் பல்கலைகழகங்கள் இருக்கிறது. அங்கே படித்து இந்த பட்டங்களை வாங்கி கொள்ளுகிறார்கள்.

அநேக சபைகளில் ரெவரெண்ட் (REVEREND)  என்று பட்டம் கொடுக்கிறார் கள்.

வேத வாக்கியத்தில் ரெவரெண்ட் (REVEREND)  என்று யார் அழைக்கப்பட்டார்கள் என்பதை நாம் பார்ப்போம்.

ஆங்கில வேத வாக்கியத்தில் ஒரே ஒருவர் தான் ரெவரெண்ட் (REVEREND)  என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் யார் என்றால் நம்முடைய பரலோத்தின் தேவன் மாத்திரமே.

தேவன்  தான் ரெவரெண்ட் (REVEREND)  என்று ஆங்கில வேத வாக்கியத்தில் ஒரே ஒரு முறை அழைக்கப்பட்டு இருக்கிறார்.

Psa 111:9 (KJV)  He sent redemption unto his people: he hath commanded his covenant for ever: holy and reverend is his name.

Psa 111:9 (KJV+)  He sent7971 redemption6304 unto his people:5971 he hath commanded6680 his covenant1285 forever:5769 holy6918 and reverend3372 is his name.8034

சங்கீதம் 111:9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

தமிழ் வேத வாக்கியத்தில் பயங்கரமுமானவர் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆங்கில வேதாகமத்தில் ரெவரெண்ட் (REVEREND)  என்று மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.

ரெவரெண்ட் (REVEREND)  என்பதற்கு எபிரெய வார்த்தைக்கான எண் 3372 அதற்கான அர்த்தத்தை பாருங்கள்

H3372

ירא

yârê’

yaw-ray’

A primitive root; to fear; morally to revere; causatively to frighten

இதற்கான அர்த்தம் என்னவென்றால் வணங்கப்படத்தக்கவர், தொழுது கொள்ளப்படத்தக்கவர், பயப்படத்தக்கவர் உயர்வாய் மதிக்கப்பட்டத்தக்கவர்.

உயர்வாய் மதிக்கப்படத்தக்கவரும் பயப்படத்தக்கவரும் தேவன் ஒருவர் மாத்திரமே.

பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் எந்தவொரு பரிசுத்த மனுஷருக்கும்  ரெவரெண்ட் (REVEREND)  என்று வார்த்தையை பயன்படுத்தவில்லை. பிதாவாகிய தேவன் ஒருவருக்கு மாத்திரமே ஆங்கில வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியென்றால் மனிதர்கள் தங்களை ரெவரெண்ட் (REVEREND)  என்று அழைத்துக் கொள்ளும் போது அவர்கள் தங்களை தேவனுக்கு சமமாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்.

ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவர் தன்னை போப் ஆண்டவர் (பிதாவாகிய கர்த்தர் என்று அர்த்தம்) என்று அழைத்துக் கொள்ளும் போது தன்னை பிதாவும் கர்த்தரும் என்று தான் சொல்லிக் கொள்ளுகிறார்.

தங்களை ரெவரெண்ட் (REVEREND) (பயப்படத்தக்கவர், வணங்கப்படத்தக்கவர் தொழுது கொள்ளத்தக்கவர், உயர்வாய் மதிக்கப்பட்டத்தக்கவர்) என்று அழைத்துக் கொள்ளுகிறவர்களும் போப் ஆண்டவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளக் கூடிய ரோம கத்தோலிக்க சபையின் தலைவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

எந்தவொரு வித்தியாசமும் இல்லை.

இந்த பட்டங்களை கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்கள் ஏன் தரித்துக் கொள்ளுகிறார்கள்?

மத்தேயு 23:5 தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

மத்தேயு 23:6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

மத்தேயு 23:7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.

  • கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்ட பட்டங்களை தரித்துக் கொள்ளுவதில் நோக்கம் தங்களை எல்லாரும் மேன்மை படுத்த வேண்டும் என்பது தான்.

மனுஷருக்கு முன்பாக மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது.

லூக்கா 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

ரபீ, குரு (வழிநடத்துனர்) என்றோ பிதா என்றோ ஒருவரையும் அழைக்க வேண்டாம் என்று கிறிஸ்து கட்டளையிட்டு இருக்கிறார்.

மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

மத்தேயு 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

மத்தேயு 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

மத்தேயு 23:11 உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.

மத்தேயு 23:12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

  • நாம் எல்லாரும் சகோதரராயும் பணிவிடைக்காரராகவும் இருக்க வேண்டும்.

தேவனுக்குரிய கனத்தை தேவனுக்கும், கிறிஸ்துவுக்குரிய கனத்தை கிறிஸ்துவுக்குள், மனுஷருக்குரிய கனத்தை மனுஷருக்கும் செலுத்துங்கள்.

தேவனுக்குரிய கனத்தையும் இயேசு கிறிஸ்துவுக்குரிய கனத்தையும் எந்தவொரு மனுஷனுக்கும் கொடுக்காதீர்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME