உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யாரை ஆராதிக்க (தொழுது கொள்ள) வேண்டும்?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்.
முற்பிதாக்களும் இஸ்ரவேல் ஜனங்களும் யெகோவா தேவனை ஆராதித்தார்கள் என்பதைக் குறித்து வேத வாக்கியங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யாரை ஆராதிக்க வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.
இயேசு கிறிஸ்து யாரை தொழுது கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்?
நாம் கிறிஸ்துவின் செம்மறியாடுகளாய் இருந்தால் இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரம் செவி கொடுப்போம்.
Joh 10:27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
அநேகர் நாங்கள் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவருடைய வார்த்தைகளுக்கு அவர்கள் செவி கொடுப்பதில்லை..
தேவனால் உண்டானவன் தேவனுடைய வார்த்தைகளுக்கு செவி கொடுப்பான்.
Joh 8:47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
- தேவனுடைய வாக்கியங்களுக்கு செவி கொடாதவன் தேவனால் உண்டானவனுமல்ல இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் அவருடைய மந்தையின் ஆடுகளாய் இருப்பதும் இல்லை.
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருந்த போது யாரை தொழுது கொண்டார்?
Mat 4:10 உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Joh 4:22 நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
- இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை தொழுது கொண்டு வந்தார்.
- தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஓருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்.
இயேசுகிறிஸ்து யாரை தொழுது கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்.
Joh 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
- பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார்.
- சமாரிய மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வரும் என்று சொல்லும் போது பிதாவை தான் எல்லா இடங்களிலும் தொழுதுகொள்ளுவார்கள் என்கிறார்.
தம்மை தொழுது கொள்ளுகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பிதாவாகிய தேவன் விரும்புகிறார்?
Joh 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
பிதாவை எப்படி தொழுது கொள்ள வேண்டும்?
Joh 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
(ஆவியோடும் உண்மையோடும் எப்படி நாம் தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து பின்வரும் நாளில் தேவனுக்கு சித்தமானால் கற்றுக் கொள்ளுவோம்)
புதிய ஏற்பாட்டு யூத கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பிதாவாகிய தேவனை தான் தொழுது கொண்டார்கள்
Act 26:7 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் பிதாவாகிய தேவனுக்கு தான் ஆராதனை செய்து வந்தார்கள்.
Phi 3:3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
Heb 12:28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
1Pe 1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.
- இஸ்ரவேல் ஜனங்களும் பிதாவாகிய தேவனைத் தான் தொழுது கொண்டார்கள்.
- கிறிஸ்தவர்களும் பிதாவாகிய தேவனை தான் தொழுது கொண்டு வருகிறார்கள்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் யாரை தொழுது கொண்டார்கள்?
Rev 4:10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
Rev 5:14 அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
Rev 7:11 தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
Rev 11:18 …. தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Rev 15:4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
Rev 19:4 …. சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
- இருபத்து நான்கு மூப்பர்களும் பிதாவாகிய தேவனைத் தொழுது கொண்டவர்கள்.
- எல்லா ஜாதிகளும் தேவனை தொழுது கொள்வார்கள்.
தேவதூதர்கள் யாரை தொழுது கொள்ளும்படி சொல்லுகிறார்கள்.
Rev 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
Rev 22:9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
- பிதாவாகியதேவனை இயேசு கிறிஸ்து மூலமாய் தொழுது கொள்ளும்படி தான் நாம் கட்டளையிடப்பட்டு இருக்கிறோம்.
தேவனுக்கு சித்தமானால் நாம் எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்றும் எப்படி ஆராதனை செய்யக்கூடாது என்றும் கற்றுக் கொள்ளுவோம்.