இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு ஆராதனை (தொழுது கொள்ளுதல்) செய்தார்கள்

இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு ஆராதனை (தொழுது கொள்ளுதல்) செய்தார்கள்?

ஒன்றான மெய் சபையிலே எப்படி தேவனை தொழுது(ஆராதனை) கொள்ள வேண்டும் என்ற சத்திங்களை வேத வாக்கியங்களோடு கற்றுக் கொண்டு வருகிறோம்.

முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு போன்றவர்கள் கர்த்தராகிய (யெகோவா)தேவனை தொழுது கொண்டார்கள் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்கு (தொழுதுகொள்ளுதல்) ஆராதனை செய்தார்கள் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் தம்மை யெகோவா என்ற நாமத்தினாலே தன்னை வெளிப்படுத்தினார்.

Exo 6:2 மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

Exo 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தராகிய (யெகோவா)தேவனுக்கு தான் ஆராதனை செய்வார்கள்.

Exo 12:31 (KJV+)  And he called7121 for Moses4872 and Aaron175 by night,3915 and said,559 Rise up,6965 and get you forth3318 from among4480, 8432 my people,5971 both1571 ye859 and1571 the children1121 of Israel;3478 and go,1980 serve5647 (853) the LORD,3068 as ye have said.1696

Exo 12:31 இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.

யெகோவா என்ற வார்த்தையை தான் தமிழ் வேதாகமத்தில் கர்த்தர் என்று மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள்.

H3068

יהוה

yehôvâh

yeh-ho-vaw’

From H1961; (the) self Existent or eternal; Jehovah, Jewish national name of God: – Jehovah, the Lord. Compare H3050, H3069.

  • கீழே உள்ள எல்லா வசனங்களுக்கும் எபிரெய வேதாகமத்தில் யெகோவா என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பிரதான ஆசாரியன்(ஆரோன்) கர்த்தராகிய(யெகோவா) தேவனுக்குதான் ஆராதனை செய்தார்.

Exo 28:35 ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும்.

லேவியர்கள் கர்த்தராகிய (யெகோவா) தேவனுக்குதான் ஆராதனை செய்தார்கள்.

Deu 10:8 அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.

சாமுவேல் தீர்க்கதரிசி கர்த்தராகிய (யெகோவா) தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு போதித்தார்.

1Sa 7:3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; 

1Sa 7:4 அப்பொழுது இஸ்ரவேல் ….. கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தராகிய (யெகோவா)தேவனை உண்மையாய் தொழுது கொள்ளும்போது எல்லாம் அவர் அவர்களுக்கு சமீபமானார்.

Deu 4:7 நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தராகிய (யெகோவா)தேவனை  தொழுது கொள்ளும்படி இஸ்ரவேல் ஜனங்கள் கட்டளையிடப்பட்டார்கள்.

1Ch 16:29 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

Psa 29:2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள்  கர்த்தராகிய(யெகோவா) தேவனை  தொழுது கொண்டார்கள் என்பதற்கு இன்னும் அநேக வேதவாக்கியங்கள் இருக்கிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தராகிய (யெகோவா) தேவனை தொழுது கொள்ளவில்லை என்று மறுக்கிறவர்கள் வேறு எந்த தேவனை அவர்கள் தொழுது கொண்டார்கள் என்று வேத வாக்கியத்தோடு தெரியப்படுத்துங்கள்.

தேவனுக்கு சித்தமானால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் யாரை தொழுது கொண்டார்கள் என்றும் நாம் யாரை தொழுதுகொள்ள வேண்டும் என்று வேத வாக்கியத்தோடு தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME