ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறதா?
- கிறிஸ்துவின் சபையில் நாம் எப்படி சேர்க்கப்படுகிறோம்? என்றும் அதே வேளையில் தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி பிரவேசிக்கிறோம் என்றும் நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
- கிறிஸ்துவின் சபையில் ஞானஸ்நானத்தின் மூலமாக சேர்க்கப்படுகிறோம் தேவனுடைய ராஜ்யத்தில் ஞானஸ்நானத்தின் மூலமாக பிரவேசிக்கிறோம் என்பதையும் நாம் வேத வாக்கியத்தைக் கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது அந்த ஒன்றான மெய் சபை எப்படி கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறது என்று கற்றுக்கொள்ளுவோம்.
கிறிஸ்துவின் சபையானது கற்புள்ள கன்னிகையாக இருக்கிறது.
கிறிஸ்துவின் சபையானது கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமிக்கப்பட்டு இருக்கிறது.
2Co 11:2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
கிறிஸ்து தம்முடைய மணவாட்டிக்காக என்ன செய்து இருக்கிறார்?
Eph 5:25 அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
Eph 5:26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
Eph 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
- கிறிஸ்து மணவாட்டியின் மீது அன்பு செலுத்தினார்.
- மணவாட்டியாகிய சபைக்காக தம்மைத்தாமே ஜீவபலியாகஅதற்காக ஒப்புக் கொடுத்தார்.
கிறிஸ்து அந்த மணவாட்டியாகிய சபையை எப்படி பரிசுத்தமாக்கினார்?
மணவாட்டியை திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்கினார்.
கிறிஸ்துவுக்கு முன்பதாக மணவாட்டியாகிய சபையானது எப்படி இருக்க வேண்டும்?
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் .பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக இருக்க வேண்டும்
மணவாட்டியாகிய சபையின் சரீரத்திற்கு தலையும் இரட்சகரும் யார்?
கிறிஸ்து மணவாட்டிக்கு தலையும் சரீரத்திற்கு இரட்சகருமாய் இருக்கிறார்.
Eph 5:23 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல,அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
மணவாட்டி மணவாளனாகிய கிறிஸ்துவுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
கிறிஸ்துவுக்கு மணவாட்டியாகியசபை கீழ்ப்படிய வேண்டும்.
Eph 5:24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல
கிறிஸ்து மணவாட்டியாகிய சபையை எப்படி காப்பாற்றுகிறார்?
கிறிஸ்து தம்முடைய மணவாட்டியை போஷித்து காப்பாற்றுகிறார்.
Eph 5:29 கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல …
மணவாட்டியாகிய சபையானது கிறிஸ்துவின் சரீரத்திற்கு உரியதாய் இருக்கிறது.
Eph 5:30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
கிறிஸ்துவரும் போது ஒன்றான மெய் சபையாகிய கற்புள்ள கன்னிகையாகிய மணவாட்டியை கலியாணம் செய்வார்.
Rev 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
Rev 19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
ஆனால் இன்றைக்கு அநேக பிரிவினை சபைகள் தோன்றி தங்களுக்கு இஷ்டமான ஒவ்வொரு பெயரிலே சபைக்கு பெயரை வைத்து நடத்துகிறார்கள்..
சரீரம் கிறிஸ்துவின் சரீரமாக இருக்குமானால் தலையும் கிறிஸ்துவாக தானே இருக்க வேண்டும்?
சரீரம் மாத்திரம் கிறிஸ்துவின் சரீரம் ஆனால் தலை மட்டும் வேறு ஒரு நபருடையது.
இப்படி இருக்கும் என்றால் அது மெய்யான சபையா?
மனுஷர்களுடைய நாமங்களையும்அவர்களுடைய உபதேசங்களையும் பின்பற்றும் போது அந்த சபை எப்படி கிறிஸ்துவின் சரீரமாக இருக்க முடியும்.
நிச்சயம் இருக்க முடியாது.
Mat 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
இன்றைக்கு இந்தியாவில் மட்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவிணை கூட்டங்கள் இருக்கிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் சபையை நடத்துகிறார்கள்.
பவுல் சபைக்கு தலை யார்? பவுல் தான் தலைவர்
பேதுரு சபைக்கு தலை யார்? பேதுரு தான்
பெந்தெகொஸ்தே சபைக்கு தலை யார் ? பெந்தெகொஸ்தே தான்
தென்னிந்திய திருச்சபைக்கு தலை யார்? தென்னிந்தியா தான்
ரோமன் கத்தோலிக்க சபைக்கு தலை யார்? ரோமாபுரி தான்
பூரண சுவிசேஷ சபைக்கு தலை யார்? பூரண சுவிசேஷம் தான்
ஏழாம் ஒய்வு நாள் சபைக்கு தலை யார்? ஏழாம் ஒய்வு நாள் தான்
இப்படி அநேக நாமங்களை தரித்துக் கொள்ளுகிறார்கள் இவர்கள் உண்மையில் கிறிஸ்துவின் சரீரத்திற்கு உரியவர்களா?
இவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்கு உரியவர்களாக ஒருபோதும் இருக்க முடியாது.
இப்படிப்பட்ட பிரிவிணை சபைகளை கலியாணம் செய்து கொள்ளப்போவது யார்?
கிறிஸ்து ஒருபோதும் இந்தபிரிவிணைக் கூட்டங்களை தம்முடைய சொந்த சரீரமான மணவாட்டியாக நினைப்பது இல்லை.
Mat 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
Mat 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இன்றைக்கு அநேக கூட்டங்கள் கிறிஸ்துவின் மணவாட்டி என்று சொல்லிக் கொண்டு வேறொருவருடைய நாமத்தை தங்களுடைய சபைக்கு தரித்துக் கொள்ளும் போது அவர்களை குறித்து வேத வசனம் என்ன சொல்லுகிறது?
Rom 7:3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்….
கிறிஸ்துவின் பிரமாணத்தையும் பின்பற்றிக் கொண்டு நியாயப்பிரமாணத்தையும் பின்பற்றுவது ஆவிக்குரிய விபசாரமாய் இருக்கிறது.
நாம் இன்றைக்கு கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உரியவர்களாக இருக்கிறோம்.
நாம் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியும் போது அல்லது கிறிஸ்துவின் பிரமாணம் அல்லாத எந்தவொரு பிரணமாணத்திற்கும் கீழ்ப்படியும் போது அது ஆவிக்குரிய விபச்சாரமாக இருக்கிறது.
Rom 7:3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்.
Rom 7:4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
- நியாயப்பிரமாணத்தை பின்பற்றக்கூடிய அநேக பிரிவிணை கூட்டங்களுக்கு மோசே புருஷனாக இருக்கிறார்.
- நியாயப்பிரமாணத்தையும் புதிய ஏற்பாட்டையும் சேர்த்து பின்பற்றக்கூடிய அநேக பிரிவிணை கூட்டங்களுக்கு யார்புருஷராய் இருக்க முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
- கிறிஸ்துவின் பிரமாணத்தை பின்பற்றக்கூடிய மெய்யான சபையாகிய மணவாட்டிக்கு இயேசு கிறிஸ்து மாத்திரமே மணவாளணாக இருக்கிறார்.
Eph 5:32 இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.