போராட்டங்களும் பிரச்சனைகளும் வரும் போது தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?

போராட்டங்களும் பிரச்சனைகளும் வரும் போது தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவா?

இன்றைய உலகத்தில் தற்கொலை செய்து கொள்ளுவது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது.

சாதாரணமான பிரச்சனைகளுக்காக கூட அநேகர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

பரீட்சையில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

கடன் பிரச்சனை இருந்தால் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

நெருக்கமானவர்கள் இறந்து விட்டால் அந்த துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

கொடிய வியாதியில் அவதிப்படும் போது தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

சிலர் சிலரை பழிவாங்க வேண்டும் என்பதற்கு தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

காதல் தோல்வி என்று சொல்லிக்கொண்டு அநேகர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

அற்ப காரியங்களுக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

இப்படிப்பட்ட காரியங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளுவது சரியான முடிவாகுமா?

அநேகர் தற்கொலை செய்து கொண்டால் எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுதலையாகி விடலாம் என்று நினைத்து கொள்ளுகிறார்கள்.

ஆனால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட பிறகு தான் நாம் மீளமுடியாது பெரிய பிரச்சனைகளை சிக்கிக் கொண்டோம் என்பதை அறிந்து கொள்வார்கள்.

உயிரை மாய்த்துக் கொண்ட பிறகு என்ன பெரிய பிரச்சனை வந்து விடப் போகிறது என்பதுதான் அநேகருடைய கேள்வி?

தாயின் கர்ப்பத்தில் நமக்கு ஜீவனை கொடுத்து பத்து மாதங்களாக நம்மை உள்ளே உருவாக்கியவர் தேவன் தான்.

சங்கீதம் 139:15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.

யோபு 31:15 தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?

நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டோம்.
சங்கீதம் 139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

நம்முடைய அவயவங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னமே அவைகள் அனைத்தும் எப்படி உருவாக்கப்பட வேண்டும் எத்தனை நாட்களில் உருவாக வேண்டும் என்று தேவன் தம்முடைய புஸ்தகத்தில் எழுதி வைத்து இருக்கிறார்.

சங்கீதம் 139:16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

நாம் எந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று முடிவு செய்கிறவர் தேவன் தான்.

சங்கீதம் 87:4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

சங்கீதம் 87:5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

சங்கீதம் 87:6 கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

இவ்வளவு நேர்த்தியாக தேவன் நம்மை உருவாக்கி இருக்கிறார் என்றால் அற்பகாரியங்களுக்காக நாம் தற்கொலை பண்ணி சாவதற்கு அல்ல.

நம்மை தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளிப்படப்பண்ணிவரே தேவன் தான்.

ஏசாயா 66:9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.

நாம் ஒரே முறை தான் பிறக்க முடியும் ஒரே முறை தான் மரிக்க முடியும்.

எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

தேவன் நமக்கு ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறார்.

அப்போஸ்தலர் 17:25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

தேவன் நம்மை பூமியின் மீதெங்கும் குடியிருக்க செய்து இருக்கிறார்.
அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்கு கொடுத்து ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி இருக்கிறார்.

அப்போஸ்தலர் 14:17 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.

தேவன் நமக்காக இவ்வளவு காரியங்களை நேர்த்தியாக செய்து இருக்கும் போது அற்ப காரியங்களுக்காக நாம் தற்கொலை செய்து கொண்டு நம்முடைய ஜீவனை இழந்து போகலாமா?

ஒரு மனிதனுக்கு ஜீவனைக் கொடுக்கிறவரும் அவர் தான் ஜீவனை எடுக்கிறவரும் அவர் தான்.

1சாமுவேல் 2:6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

தேவன் நம்மிடம் இருந்து ஜீவனை எடுக்கும் போது அதை விடமாட்டேன் என்று யாரும் சொல்லவும் முடியாது.

பிரசங்கி 8:8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

தேவன் மனிதனிடமிருந்து ஆவியை எடுத்தக் கொள்ளும் போது அவன் மரித்து விடுகிறான்.

பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

தேவன் நமக்கு என்று வாழக்கூடிய காலத்தை வைத்து இருக்கிறார். அந்த காலத்திற்கு முன்னே நாமாக நம்முடைய ஜீவனை அழித்துப் போடக்கூடாது.

பிரசங்கி 7:17 மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?

நாம் மிஞ்சின துஷ்டனாய் இருந்தால் மற்றவர்கள் நம்மை கொன்று போட்டு விடுவார்கள்.

நாம் அதிக பேதையுமாய் இருந்தால் துன்மார்க்கர் நம்மை கொன்று போட்டு விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களாய் இருக்கும் போது காலத்துக்கு முன்னே நாம் செத்து விடுவோம்.

தேவன் நமக்கென்று ஆயுசின் வருஷங்களை வைத்து இருக்கிறார். அந்த காலம் குறுகிய காலமோ நீண்ட காலமோ எதுவாக இருந்தாலும் அவர் ஜீவனை எடுப்பதற்கு தான் அனுமதிக்க வேண்டுமே தவிர நம்மை நாம் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது.

தற்கொலை செய்து மரிக்கிறவர்கள் தேவனை பரீட்சை பார்க்கிறார்கள்.

மத்தேயு 4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ,,,, என்று சொன்னான்.

மத்தேயு 4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

இயேசு கிறிஸ்து சாத்தானுடைய சொல்லை கேட்டு தாழ குதித்து இருந்தார் என்றால் தேவன் அவரை காப்பாற்றி இருப்பாரா?

தேவன் நம்மை போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பார் என்று பேருந்து வேகமாக வரும் போது நடு ரோட்டில் நின்றால் என்னவாகும்?

நாம் தற்கொலை பண்ணி மரிக்கும் போது தேவனை பரீட்சை பார்க்கிறோம் என்றால் நித்திய ஜீவனுக்கு போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

சங்கீதம் 95:9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.

சங்கீதம் 95:11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

தற்கொலை பண்ணி மரிக்கிற எந்த கிறிஸ்தவனுக்கு நித்திய இளைப்பாறுதலில் இடம் இல்லை.

தற்கொலை பண்ணி மரிக்கிறவர்கள் பாதாளத்தில் வேதனையுள்ள ஸ்தலத்திற்கு போய் விடுகிறார்கள்.

தேவனுக்குள் மரிக்காத ஐஸ்வர்யவானின் நிலைமை என்ன?
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

லூக்கா 16:24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

பூமியில் சின்ன நெருப்பு நம்மீது பட்டாலே நாம் துடித்து போகிறோம். நித்திய காலம் முழுவதும் அக்கினியிலே இருக்க கூடிய நிலைமையை யோசித்து பாருங்கள் ரொம்ப கொடுமையல்லவா?

பாதாளத்திற்கு போய் விட்டால் மறுபடியும் பூமியிலே திரும்பி தன் வீட்டிற்கு வருவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

யோபு 7:9 மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.

யோபு 7:10 இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.

இன்றைக்கு தற்கொலை பண்ணி மரித்த எல்லாருமே பாதாளத்தில் வேதனை படுகின்ற போது இந்த பெரிய பாடுகள் படுவதற்கு பூமியிலே பிரச்சனைகளை எதிர் கொண்டு சமாளித்து இருக்கலாமே என்று யோசித்து கொண்டு இருப்பார்கள்.

என்னுடைய பிரச்சனைகளுக்கு தற்கொலை தான் முடிவு என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் அது முடிவு அல்ல. மீள முடியாத நித்திய நித்தியமான பெரிய பிரச்சனைகளுக்கு அது தான் ஆரம்பம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME