போதகர் என்ற வார்த்தைக்கு வேதாகமத்தில் முரண்பாடு இருக்கிறதா?
இன்றைக்கு நமக்கு இருக்கக்கூடிய பெரிய குழப்பம் என்னவென்றால் தேவனுடைய ஊழியத்தை செய்யக்கூடிய ஊழியர்களை போதர்கள் என்று அழைக்கலாமா என்பது தான்.
அநேகர் தங்களை போதகர் என்று அழைத்து கண்டாலும், அநேகர் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை. ஏனென்றால் கிறிஸ்து தான் மட்டுமே போதகர் என்று அழைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து இருக்கிறார்.
கிறிஸ்து தான் ஒருவர் மாத்திரமே போதகர் என்று சொல்லுகிறார். வேறு யாரையும் போதகர் என்று அழைக்காதிருங்கள் என்று சொல்லுகிறார்.
மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
கிறிஸ்து ஒருவர் மாத்திரமே போதகர் என்று வசனம் நமக்கு போதிக்கிறது. ஆனால் வேதாகமத்தில் அநேகர் போதகர்கள் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படியென்றால் வேதாகமத்தில் முரண்பாடு இருக்கிறதா?
தேவன் சபையிலே மூன்றாவதாக போதகர்களையும் ஏற்படுத்தினார்.
அப்போஸ்தலர் 13:1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும்,……., சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
1கொரிந்தியர் 12:28 தேவனானவர் சபையிலே …… மூன்றாவது போதகர்களையும்…..ஏற்படுத்தினார்.
எபேசியர் 4:13 அவர்….. சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
1தீமோத்தேயு 2:7 …. புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்,,,
தேவனுடைய வார்த்தையில் முரண்பாடு இருக்கிறதா?
தேவனுடைய வார்த்தையில் என்றுமே முரண்பாடு இருக்காது. நம்முடைய மொழிப்பெயர்ப்பில் தான் சில முரண்பாடு இருக்கிறது.
கிறிஸ்து போதித்த இந்த போதகர் என்ற வார்த்தையை கவனியுங்கள்.
மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
Mat 23:8 But1161 be not3361 ye5210 called2564 Rabbi:4461 for1063 one1520 is2076 your5216 Master,2519 even Christ;5547 and1161 all3956 ye5210 are2075 brethren.80
போதகர் என்ற வார்த்தைக்கு கிரேக்க எண் 2519 ஆகும்
அதற்கான அர்த்தம் என்ன?
G2519
καθηγητής
kathēgētēs
kath-ayg-ay-tace’
From a compound of G2596 and G2233; a guide
கிறிஸ்து இங்கே தன்னை போதகர் என்று பேசவில்லை. மாறாக தன்னை வழிநடத்துனர் என்று சொல்லுகிறார்.
இன்னொரு வார்த்தை கீழே உள்ள வசனத்தில் இருக்கிறது.
மத்தேயு 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
Mat 23:10 Neither3366 be ye called2564 masters:2519 for1063 one1520 is2076 your5216 Master,2519 even Christ.5547
இந்த வசனத்தில் கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாயிருக்கிறார் என்று மொழிப்பெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கிரேக்க வேதாகமத்தில் 2519 என்ற எண்ணாகிய வழிநடத்துனர் என்ற வார்த்தையை தான் கிறிஸ்து பயன்படுத்தி இருக்கிறார்.
- இந்த கிரேக்க எண் 2519 புதிய ஏற்பாட்டில் இரண்டு இடத்தில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது, இரண்டிலுமே அந்த வார்த்தை கிறிஸ்துவுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
- நம்முடைய ஆவிக்குரிய வழிநடத்துனர் இயேசு கிறிஸ்துவானர் மட்டுமே இருக்க வேண்டும்.
- அப்போஸ்தலர்களோ அல்லது புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளோ தங்களை ஒருபோதும் வழிநடத்துனர் என்று அழைத்துக் கொள்ள வல்லை.
- எந்தவொரு மனிதனையும் நாம் வழிநடத்துனர் என்று அழைக்கக்கூடாது.
ஆனால் மற்றவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட போதகர் என்ற வார்த்தைக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
அப்போஸ்தலர் 13:1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும்,……., சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
Act 13:1 Now1161 there were2258 in2596 the3588 church1577 that was5607 at1722 Antioch490 certain5100 prophets4396 and2532 teachers;1320 as(5037, 3739) Barnabas,921 ,,,,, Saul.4569
G1320
διδάσκαλος
didaskalos
did-as’-kal-os
From G1321; an instructor
இந்த வசனத்தில் போதகர்கள் என்ற வார்த்தை கற்பிப்பவர், அறிவிப்பவர், பயிற்றுவிப்பர் என்ற அர்த்தத்தில் வந்து இருக்கிறது.
கீழே உள்ள எல்லா வசனத்திற்கும் போதகர் என்ற வார்த்தைக்கு அதே 1320 என்ற கிரேக்க வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
1கொரிந்தியர் 12:28 தேவனானவர் சபையிலே …… மூன்றாவது போதகர்களையும்…..ஏற்படுத்தினார்.
1Co 12:28 And2532 God2316 hath set5087 some3739, 3303 in1722 the3588 church,……1577 thirdly5154 teachers,1320 ……
எபேசியர் 4:13 அவர்….. சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
Eph 4:11 And2532 he846 gave1325 some,3588, 3303 apostles;652 and1161 some,3588 prophets;4396 and1161 some,3588 evangelists;2099 and1161 some,3588 pastors4166 and2532 teachers;1320
1தீமோத்தேயு 2:7 …. புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்,,,
1Ti 2:7 Whereunto1519, 3739 I1473 am ordained5087 a preacher,2783 and2532 an apostle,652 (I speak3004 the truth225 in1722 Christ,5547 and lie5574 not;)3756 a teacher1320 of the Gentiles1484 in1722 faith4102 and2532 verity.225
- இந்த கற்பிப்பவர் அறிவிப்பவர் என்ற வார்த்தை G1320 என்ற கிரேக்க வார்த்தை கிறிஸ்துவுக்கு அநேக முறை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
- ஆனால் வழிநடத்துனர் என்ற இந்த G2519 என்ற கிரேக்க வார்த்தை கிறிஸ்துவை தவிர வேறு யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை.
வேத வாக்கியங்களில் தேவனுடைய வார்த்தைகளை போதிப்பவர்களை போதகர்கள் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நாமும் தேவனுடைய வார்த்தைகளை போதிப்பவர்களை போதர்கள் என்று அழைக்கலாம்.
நாம் ஒருபோதும் நம்மை எந்தவொரு மனிதனுக்கும் ஆவிக்குரிய வழிநடத்துனராக அழைத்துக் கொள்ளக் கூடாது.